முருங்கைக்கீரை தொழில் மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.!!!(Drumstick Industry Amazing Business Ideas 2020)
உலகில் உள்ள அனைத்து தொழில்களுக்கும் அடிப்படையாக ஒரு தொழில் என்றால் அது விவசாய தொழில் மட்டுமே. விவசாய தொழிலில் எப்பொழுதும் நன்மைகள் மட்டுமே கிடைக்கிறது பழங்காலங்களில் விவசாய தொழில் செய்தவர்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆரோக்கியமாக செல்வ செழிப்புடன் வாழ்ந்தார்கள்.
இந்தியாவில் உள்ள மக்கள் 2000 ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை உணவுப் பழக்க வழக்கங்களில் அதிக மாற்றங்களை எடுத்துக்கொண்டார்கள் அதன் விளைவாக பல ஆயிரக்கணக்கான மக்கள் அதிக பணம் செலவு செய்து உயிர் பிழைக்க முடியாமல் இறந்து போனார்கள்.
கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள மக்களிடம் அதிக அளவில் இயற்கை சார்ந்த உணவு பொருட்கள் வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக எண்ணெய் வித்துக்கள், கீரை வகைகள், இறைச்சி வகைகள்,
பழங்காலம் முதல் இன்று வரை கிராமப்புறங்களில் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பயன்படுத்தும் ஒரு கீரை என்றால் அது முருங்கைக்கீரை. முருங்கைக்கீரை இப்பொழுது லட்சக்கணக்கான பணம் சம்பாதிப்பதற்கு ஒரு சிறந்த தொழிலாக மாறிவிட்டது.
முருங்கை மரம் மூலம் நிலையான வருமானம் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் முருங்கைக்கீரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. முருங்கை மரம் அல்லது முருங்கை செடி பராமரிப்பு மற்றும் தண்ணீர் செலவு என்பது குறைவாக இருப்பதால் இந்த தொழிலுக்கு நிலையான வருமானம் கிடைப்பதாலும் விவசாயிகள் முருங்கை இலை சாகுபடி அதிகளவில் தொடங்கியுள்ளார்கள்.
நீங்கள் முருங்கை நடவு செய்தால் முதல் அறுவடைக்கு வர குறைந்தபட்சம் 120 நாட்களாகும். பின்னர் 60 நாளைக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம் ஒரு ஏக்கருக்கு ஒரு முறை சராசரியாக 5 டன் முதல் 7 டன் வரை முருங்கை இலை கிடைக்கும். 1 டன் முருங்கை இலை விலை ரூபாய் 5000 முதல் 6000 வரை விலை போகும். ஒரு ஏக்கரில் விளையும் குறைந்தபட்ச 5 டன் முருங்கையிலை மூலம் 37,000 ரூபாய்க்கு கிடைக்கும். இதை நீங்கள் குறைந்த பட்சம் 3 ஏக்கருக்கு நடவு செய்தால் 111,000 ரூபாய் கிடைக்கும் மேலும் நீங்கள் முதலீடு செய்யப்போகும் தொகையை தோராயமாக ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 30,000 முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம்.
இரண்டாவது அறுவடைக்கு செலவு விகிதத்தில் 90 சதவீதம் குறைந்துவிடும் தோராயமாக உங்களுக்கு 10,000 ரூபாய் செலவாகலாம். முதல் வருடத்தில் ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் நீங்கள் 6 டன் விளைச்சல் எடுக்க வேண்டும் மேலும் 5 முறை அறுவடை செய்தால் 36 டன் இலை கிடைக்கும் மொத்தம் மூன்று ஏக்கரில் இருந்து 108 டன் கிடைக்கும். மொத்தம் முருங்கைக்கீரை விலை 5000 என்ற கணக்கில் ஆண்டுக்கு 540,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு வருட சாகுபடி செலவு ரூபாய் 80 ஆயிரம் போக ரூபாய் 460,000 ஆயிரம் வருமானம் கிடைக்கும்.
வெளிநாடுகளில் கிடைக்கும் அதிக வரவேற்பு.
முருங்கை இலை மூலம் தயாரிக்கப்படும் முருங்கை மாத்திரைக்கு வெளிநாடுகளில் உள்ள மக்கள் நல்ல வரவேற்பை கொடுக்கிறார்கள். இந்த மாத்திரை அவசியமான ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள், மற்றும் வைட்டமின்கள் போன்றவைகள் உள்ளதால் ஒரு வளமான ஆதாரமாக இருக்கிறது என்றும் மக்கள் கருதுகிறார்கள். நீங்கள் இந்த மாத்திரையை சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் முருங்கையில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. இதன் காரணமாக உங்களுக்கு கண் பார்வை நன்றாக இருக்கும். குறிப்பாக முருங்கை இலை பாலூட்டும் தாய்மார்களின் பால் உற்பத்தியை அதிகரிக்கிறது.
முருங்கைக்கீரை மூலம் நல்ல வருமானம் கிடைப்பதால் இதை சரியாக செய்ய வேண்டும் குறிப்பாக முருங்கைக்கீரையை நீங்கள் விற்பனை செய்வதற்கு வெளிநாடுகளில் அதிக அளவில் ஆர்டர்கள் பெற்றாள் கணிசமான தொகையை சிறிது நாட்களில் பெற்றுவிடலாம்.
Top 10 Business Ideas for Agriculture 2020
வரும் காலங்களில் இயற்கை முறையில் விளைவிக்கும் உணவுப் பொருட்களுக்கு மிகப்பெரிய சந்தை இந்த உலகில் இருக்கப்போகிறது இதற்கு காரணம் மக்களுக்கு ஏற்படும் நோய்கள் மட்டுமே.
ஓராண்டுக்கு 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை லாபம் பார்க்க முடியும் இந்த தொழிலில்.!!!
முருங்கைக்கீரை தொழிலை பற்றி முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உங்கள் மாவட்டத்தில் உள்ள வேளாண் அலுவலகம் அல்லது தோட்டக்கலைத்துறை நீங்கள் அணுகலாம்.