e-Shram card best benefits list 2022
இ-ஷ்ராம் கார்டு எதற்கு பயன்படுத்த படுகிறது..!
நம் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு துறையும் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று சொல்லலாம்.
அந்த வகையில் மக்களின் வேலை சற்று எளிமையாக்குவதற்காக உருவாக்கப்பட்டது தான். இந்த இ-ஷ்ராம் கார்டு இதன் மூலம் மக்கள் இப்பொழுது பல நன்மைகளை பெற முடியும்.
நாம் இந்த பதிவில் இ-ஷ்ராம் கார்டு என்றால் என்ன மற்றும் அது எதற்காக பயன்படுகிறது, இதனையே மத்திய அரசு ஏன் அவசரமாக வெளியிட வேண்டும், போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இ-ஷ்ராம் கார்டின் நன்மைகள் என்ன
மத்திய அரசு கொண்டு வரும் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எந்த விதமான பிரச்சனைகள் இல்லாமல் செல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த இ-ஷ்ராம்- போர்டல்.
நம் நாட்டில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு இதனை கொரோனா வைரஸ் நோய் தொற்றுவது பிறகு அவசரமாக தொடங்கியுள்ளது.
காரணம் கொரோனா வைரஸ் நோய் தொற்று காலங்களில் எந்த வகையான மக்களுக்கு, என்ன உதவி செய்யவேண்டும் என்பது அரசுக்கு சரியாக தெரியவில்லை.
இ-ஷ்ராம் கார்டு மூலம் மக்கள் என்ன தொழில் செய்கிறார்கள், என்ன நிலைமையில் இருக்கிறார்கள், என்பதை எளிதாகப் புரிந்து கொண்டால்.
அதற்கு ஏற்றார்போல் அவர்களுக்கு உதவிகளை செய்ய முடியும், என்ற ஒரு திட்டத்தை மத்திய அரசு இப்பொழுது இதனை இலவசமாக கொண்டு வந்தது.
அமைப்புசாரா தொழிலாளர்கள் பற்றிய விவரம் அரசுக்கு முழுமையாக தெரிய வேண்டும் என்று ஏதாவது ஒரு அவசர சூழ்நிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அனைத்து வகையான உதவிகளையும் இந்த கார்டு மூலம் வழங்கப்படும்.
இந்த இணையதளத்தில் விண்ணப்பித்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு PMSBY திட்டத்தின் கீழ் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான விபத்து காப்பீடு இலவசமாக வழங்கப்படும் இது ஆதாருடன் இணைக்கப்பட்ட ஒரு தளமாகும்.
இதில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன
இ-ஷ்ராம் கார்டு இணையதளத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் முழு விவரங்கள், ஊழியர்களின் எண்ணிக்கை, போன்றவை இருக்கும்.
மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தேவையான நல திட்டங்கள் நிதி உதவிகள் இதில் இருக்கும்.
இந்த தளத்தின் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களுடைய பிரச்சினைகளை மத்திய அரசுக்கு எளிதாக தெரிவிக்க முடியும்.
குறைந்த பட்சம் 16 வயது முதல் அதிகபட்சம் 59 வயதுவரை உள்ள அமைப்புசாரா துறையில் பணிபுரியும் நம் நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் இதில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் யார்
மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தனியார் துறையில் பணி புரியாமல் இருக்கும் சுயமாக தொழில் தொழில் செய்யும் நபர்கள் அமைப்புசாரா தொழிலாளர் துறை பட்டியலில் வருவார்கள்.
EPFO அல்லது ESIC உறுப்பினர் மற்றும் விண்ணப்பிக்க தகுதி அற்றவர்கள்.
இதில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்
e-Shram card best விவசாய தொழிலாளர்கள், பால் விவசாயி, காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையாளர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மீனவர்கள், மரம் அறுக்கும் தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள் ,மற்றும் பேக்கிங் தொழிலாளர்கள்.
தச்சர், பட்டுப்புழு வளர்ப்பு தொழிலாளி, கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள், முடி திருத்துபவர்கள், ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநர், பட்டு உற்பத்தி தொழிலாளி.
வீட்டின் வேலைக்காரி, செய்தித்தாள் விற்பனையாளர், வீட்டு வேலையாட்கள்,தெரு வியாபாரிகள்.
இது போன்ற துறைகளில் வேலை செய்யும் நபர்கள், கண்டிப்பாக இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன
e-Shram card best ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்
வங்கி கணக்கு விவரங்கள்
ஆதார் கார்டு
குறைந்த பட்சம் 16 வயது முதல் அதிகபட்சமாக 19 வயதிற்குள் இருக்க வேண்டும்.