Edappadi K Palaniswami AIADMK won best 2023
வென்றார் எடப்பாடி தோல்வி அடைந்தார் ஓபிஎஸ் தீர்ப்பு சொல்வது என்ன இதுதான் ரொம்ப முக்கியம்..!
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
அதிமுக பொதுக்குழு வழக்கில் டெல்லி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது, அதிமுக பொதுக்குழு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும்.
Edappadi K Palaniswami AIADMK won best 2023 அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்போம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தப் பொதுக் குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன.
இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது இரு மகன்கள், ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் வைரமுத்து ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Edappadi K Palaniswami AIADMK won best 2023 இதை எதிர்த்து அதிமுக சார்பாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், தனியாக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழக்கு தொடுத்தார்கள்.
இந்த வழக்கில்தான் இன்று வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கோஸ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
பொதுக்குழு வழக்கு என்ன
Edappadi K Palaniswami AIADMK won best 2023 இந்தப் பொதுக்குழு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.
அதிமுக பொதுக்குழு செல்லும் அதாவது கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும், எனவே அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் செல்லும்.
பொதுக்குழு கூடிய விதம் செல்லும் அதாவது ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்டாமல் அவைத்தலைவர் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கை மூலம் பொதுக்குழு கூட்டப்பட்டது சரி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் சிவில் வழக்கை பாதிக்காது என்று கூறப்பட்டுள்ளது, அதாவது பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்கலாம்.
இந்த தீர்ப்பு காரணமாக அதிமுகவில் பொது குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்ற முடிவு வரவில்லை தீர்மானங்கள் என்று இன்னும் உச்சநீதிமன்றம் சொல்லவில்லை, ஆனால் பொதுக்குழு செல்லும் என்றாலே அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்பதே மறைமுக அர்த்தம்.
ஆனால் இதை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் சிவில் கோர்ட்டில் வாதம்வைக்கலாம் இதுதான் மிக முக்கியம்.
பொதுக்குழுவில் பொருளாளர் பதவியில் இருந்த ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார், அது இப்போதைக்கு செல்லும் இதுதான் மிக முக்கியம், இனி ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை.
எடப்பாடி மூலம் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார் அதுவும் இப்போதைக்கு செல்லும்.