Election Commission approved AIADMK 2022 Best
தேர்தல் ஆணையம் வைத்த திடீர் ட்விஸ்ட் எடப்பாடி கையில் அதிமுக எல்லாம் முடிந்துவிட்டது ஓபிஎஸ் கதை என்ன..!
அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடிபழனிசாமி தாக்கல் செய்த அதிமுக வரவு செலவு அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதனால் பொதுக்குழுவின் முடிவுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளதால் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து நீக்கப்பட்டார்.
பொதுக்குழு தீர்மானங்கள் ஈபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிராகப் பல்வேறு மனுக்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுக பிளவு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில்.
தற்போது இந்திய தேர்தல் ஆணையம் வரவு செலவு அறிக்கையை ஏற்றுக்கொண்டு இணையதளத்தில் பதிவேற்றி உள்ளதால் எடப்பாடிபழனிசாமி ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள்.
6 மாதங்களாக நடக்கும் வழக்கு
இது தொடர்பான வழக்கு கடந்த 6 மாதமாக உயர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை காலம் தாழ்த்துவதற்கு ஓ பன்னீர்செல்வம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் அதில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால் இதனால் அவருக்கு எந்த ஒரு பலனும் கிடைத்தது இல்லை இப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையால்.
எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சாதகமான தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
வரவு செலவு கணக்கு விவகாரம்
Election Commission approved AIADMK 2022 Best அதிமுக பொதுக்குழுவில் வரவு செலவு கணக்கை அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.
வழக்கமாக பொருளாளர் மட்டுமே வரவு செலவு கணக்கை தாக்கல் செய்வார் ஆனால் பொருளாளர் ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு வராத நிலையில்.
அமைப்பு செயலாளரான விஜயபாஸ்கர் அதனை தாக்கல் செய்தார் பின்னர் கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இபிஎஸ் தாக்கல் செய்த மனுக்கள்
Election Commission approved AIADMK 2022 Best அதிமுக பொதுக்குழு முடிந்ததுமே பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தது இபிஎஸ் தரப்பு.
அதேசமயம் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த விவரங்களை ஏற்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்.
இபிஎஸ் பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.
தொடர்ந்து இரு தரப்பு பதவி நியமனங்கள் தொடர்பாக வரும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருந்து வந்தது.
இணையத்தளத்தில் பதிவேற்றிய தேர்தல் ஆணையம்
Election Commission approved AIADMK 2022 Best இப்படியான பரபரப்பு சூழலில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்காமல் இருந்து வரும் சூழலில்.
அதிமுகவின் வரவு செலவு குறித்து எடப்பாடிபழனிசாமி தாக்கல் செய்த 29.09.2022 தேதி அன்று தாக்கல் செய்யப்பட்ட Audited Annual Accounts 2021-2022 தேர்தல் ஆணையம் இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் எடப்பாடிபழனிசாமி இடைக்கால பொது செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து விட்டதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
எடப்பாடிக்கு பச்சைக்கொடி
முக்கியமாக எடப்பாடி கே பழனிசாமி கையெழுத்திட்டு தாக்கல் செய்த மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளதால் எடப்பாடி தரப்பு இப்பொழுது உற்சாகமாகி உள்ளது.