Electric vehicle charging station best 2023
எதிர்காலத்திற்கு சேர்த்து இந்த தொழிலை செய்தால் இப்பொழுது லாபம் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் இந்த தொழிலுக்கு அதிக வரவேற்பு என்பது நிச்சயம்..!
முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும் என்ற சிந்தனையில் இருந்தால் நீங்கள் தொழில் தொடங்கலாம்.
Electric vehicle charging station best 2023 நீங்கள் தொழில் தொடங்க நினைத்தால் இப்போது லாபம் கிடைக்குமா என்று நினைப்பதை விட வருங்காலத்தில் உங்களுக்கு மற்றும் உங்களுடைய தொழில் எப்படி இருக்கும்.
லாபம் எப்படி கிடைக்கும் என்று சிந்தித்து முடிவு எடுப்பது சிறந்தது, அந்த வகையில் இன்று நாம் சிறந்த தொழிலை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.
அதாவது இன்னும் 5 ஆண்டுகளில் இந்தத் தொழில் என்பது உச்சகட்டத்தில் இருக்கும், வீட்டில் ஒவ்வொரு நபரும் இந்த தொழிலை பயன்படுத்தக் கூடிய சூழ்நிலை உருவாகிவிடும்.
Electric Vehicle Charging Station
Electric vehicle charging station best 2023 நம் நாட்டின் சிறந்த கனவு திட்டமாக இருக்கும் மின்சார வாகனம், மின்சார பேருந்து, மின்சார கார், மின்சார இரண்டு சக்கர வாகனம், உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து.
அதிக அளவில் இறக்குமதி செய்யும் எரிபொருள் தேவையை குறைப்பது ஒரு மிகப்பெரிய கனவு திட்டத்துடன் தொடங்கியுள்ளது மத்திய அரசு.
இந்தக் காலத்தில் அதிகமாக பெட்ரோல் டீசல் வாகனம் விற்பனையாகிறது.
இனி அடுத்த 5 ஆண்டுகளில் குறிப்பாக 2030 ஆண்டுகளில் நாடு முழுவதும் 80 சதவீத அளவிற்கு மின்சார வாகனங்கள் இருக்கும் என மத்திய அரசு சொல்கிறது.
மக்களின் கவனம் இப்போது அதிக அளவில் மின்சார வாகனங்கள் மீது திரும்பி உள்ளது, ஏனெனில் எரிபொருளின் விலை உச்சகட்டத்தில் இருக்கிறது.
Electric vehicle charging station best 2023 உங்களுடைய வீட்டில் சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் வீட்டுக்கு தேவையான மின்சாரம் மற்றும் உங்களுடைய இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றுக்கு நீங்கள் மின்சாரம் எடுத்துக் கொண்டால். உங்களுக்கு எரிபொருளுக்கு செலவு செய்யும் தொகை என்பது சேமிப்பாகும்.
இதற்கு முதலீடு சற்று அதிகமாக இருந்தாலும் இதனுடைய நன்மைகள் என்பது நீண்ட காலத்திற்கு இருக்கும், இதனால் பொருளாதாரத்தில் சேமிப்பு என்பது அதிகமாகும்.
எங்கு எப்படி தொழில் தொடங்குவது
Electric vehicle charging station best 2023 இந்த தொழிலை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம் ஆனால் கார் பைக் வாகனங்கள் அதிகமாக வந்து செல்லும் இடத்தில் இருந்தால் போதும்.
தேசிய நெடுஞ்சாலையில் திறந்தால் லாபம் என்பது அதிகமாகும் ஏனென்றால் எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள அதிக இடத்தில் மின்சாரம் வாகனங்கள் சார்ஜிங் ஸ்டேஷன் அமைத்தால் அதிகமான லாபம் கிடைக்கும்.
இந்த மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷன் அமைப்பதற்கான இயந்திரத்தின் விலை குறைந்த பட்சம் 5 லட்சத்தில் தொடங்குகிறது.
நீங்கள் குறைந்தபட்சம் 2 இயந்திரத்துடன் இந்த தொழிலை தொடங்கினால் நிச்சயம் உங்களுக்கு லாபம் என்பது கிடைக்கும் இதற்கு அரசாங்கத்திடம் லைசென்ஸ் (License) வாங்க தேவையில்லை.
இதற்கு வருமான வரி உண்டு வருடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேல் உங்களுக்கு வருமானம் கிடைத்தால் அதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும்.
ஒரு கிலோவாட் சார்ஜிங் செய்யும் போது 20 ரூபாய் செலுத்த வேண்டும் அப்படி என்றால் உங்களுடைய ஸ்டேஷனுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளலாம்.
சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கலாம்.
இதன் மூலம் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் ஏனென்றால், நீங்கள் மின்சாரக் கட்டணம் செலுத்த தேவையில்லை ஆனால் தொடக்கத்தில் அதிகமாக நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.