EMI rules and regulations best tips 2023
EMIல் பொருட்கள் வாங்குபவர்கள் கண்டிப்பாக இதைத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.
இன்று இந்தியாவில் 90% மக்கள் EMIல் பொருட்கள் வாங்குகிறார்கள் அதாவது குறைந்தது 10,000 ரூபாய்க்கு மேல் இருக்கும் பொருட்கள் அனைத்தும் EMI மூலம் வாங்கப்படுகிறது.
இதன் மூலம் வங்கிகள், நிதி நிறுவனங்கள், கோடிக்கணக்கான ரூபாய் லாபம் பார்க்கிறது.
EMIல் பொருட்கள் வாங்குவதால் வங்கிகள் நிதி, நிதி நிறுவனங்கள் அதிகப்படியான லாபம் பார்ப்பது மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களுக்கு 5000 ரூபாய் அளவிற்கு அபராதமும் விதிக்கிறது சில நிதி நிறுவனங்கள் இதிலிருந்து எப்படி தப்பிப்பது.
EMIல் பொருட்கள் வாங்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் போன்ற பல்வேறு விதமான தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.
வாகனம் வாங்குவதாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி அதனை வாங்குவதில் மட்டுமே ஆர்வமாக காட்டுவோம் தவிர.
அதற்கு எவ்வளவு வட்டி போடப்படுகிறது என்று கணக்கிடுவது கிடையாது, ஏன் இது போன்ற நிறைய விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளவும் இல்லை.
EMIல் வாகனம் அல்லது பொருட்கள் வாங்கும் ஆர்வத்தில் அவர்கள் காட்டும் அனைத்து இடங்களிலும் கையெழுத்து போட்டு விடுவோம்.
அதன் பின் நம்முடைய கைக்கு அந்த பொருள் EMI மூலம் கிடைத்துவிடும், அங்கு EMI விதிமுறைகள் பற்றி முழுமையாக சொல்லுவது கிடையாது.
நீங்கள் வீட்டுக்கு தேவையான விலை உயர்ந்த மின்னணு பொருட்கள் அல்லது வாகனங்கள் வாங்க வேண்டும் என்றால் அதற்கான இடத்தில் பல்வேறு நிதி நிறுவனங்கள், அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், உங்களுக்கு கடன் கொடுப்பதற்கு தயாராக இருப்பார்கள்.
சில நிறுவனங்கள் பல்வேறு விதமான வழிமுறைகளை பின்பற்றும் உங்களுக்கு ஏற்கனவே வேறு ஒரு வங்கியில் மாத தவணை இருந்தால் சில நிறுவனங்கள் உங்களுக்கு மறுபடியும் கடன் கொடுக்க முன் வருவதில்லை.
EMI rules and regulations best tips 2023 சில நிறுவனங்கள் கடன் கொடுக்க முன் வரும் ஆனால் அந்த நிறுவனங்களில் வட்டி விகிதம் என்பது பல மடங்கு அதிகம் உதாரணமாக 1 லட்சம் ரூபாய்க்கு நீங்கள் பொருட்கள் வாங்கினால் அதற்கு 30,000 ரூபாய் அளவிற்கு வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
இதனை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும் மறைமுகமாக உங்களிடம் 30,000 ரூபாய் வசூல் செய்து விடுவார்கள்.
வாகனம் அல்லது மின்னணு பொருட்கள் வாங்கும் பொழுது குறைந்தபட்சம் முன் பணம் கட்ட வேண்டும், இதற்கு குறைந்தபட்சம் என்று ஒரு தொகை சொல்வார்கள்.
EMI rules and regulations best tips 2023 அதிகபட்சம் என்று எந்த ஒரு தொகையும் இல்லை எவ்வளவு வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம் இதன் மூலம் உங்கள் வாகனத்தில் EMI வட்டி குறையும் என்று தெரிவிப்பார்கள்.
மாதத் தொகை கட்டுவதற்கான சில விதிமுறைகள்
தொடர்ந்து 3மாதம் மாதத் தொகை கட்டவில்லை என்றால் அதன் பிறகு அந்த நிறுவனம் அல்லது வங்கி உங்களுக்கு கொடுத்த மின்னணு பொருட்கள் அல்லது வாகனத்தை பறிமுதல் செய்து விடுவார்கள்.
அதன் பிறகு அவர்கள் நீங்கள் முழுத்தொகை செலுத்தினால் மட்டுமே அந்த பொருள் அல்லது வாகனம் கொடுக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்து விடுவார்கள்.
EMI rules and regulations best tips 2023 சில நிதி நிறுவனங்கள் 3மாதத்திற்கு ஒருமுறை உங்களுடைய வாகனத்தை நேரில் பார்த்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள்.
EMI தொகை செலுத்துவதற்கு ஒவ்வொரு வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கும் சில விதிகளை பின்பற்றுவார்கள் அதாவது 2ம் தேதி செலுத்த வேண்டும் என்று தெரிவிப்பார்கள்.
சில வங்கிகள் 5ம் தேதி செலுத்த வேண்டும் என்று தெரிவிப்பார்கள்,சில நிதி நிறுவனங்கள் 14ஆம் தேதி செலுத்த வேண்டும் என தெரிவிப்பார்கள்.
உங்கள் வங்கியில் பணம் இல்லை என்றால் அதற்கு அபராதமாக கட்டணம் செலுத்த வேண்டும் இது ஒவ்வொரு வங்கி மற்றும் நிதி நிறுவனத்தை பொறுத்து மாறுபடும் 300 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை இதற்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது.
எப்பொழுது முழு தொகை செலுத்த வேண்டும்
EMI rules and regulations best tips 2023 இப்போது வாகனம் வாங்கி ஒரு மாதத்திற்குள் பணத்தை முழுவதுமாக செலுத்த நினைத்தால் வங்கிக்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்கும் அதற்கு நாமும் சரி என்று கையெழுத்து போட்டு விடுவோம்.
அப்போது அதனை காண்பித்து உங்களை 3 மாதம் EMI கட்ட செலுத்திய பின் முழு தொகை கட்ட சொல்லுவார்கள்.
இந்த விதிமுறைகள் வங்கிக்கு நிதி நிலை நிறுவனத்திற்கும் மாறுபடும்.
அதாவது ஒரு சில வங்கியில் 3 மாதம் EMI என்று ஒரு சில வங்கி 6 மாதம் EMI என்றும் செலுத்த வேண்டும்.
அதன்பின் நாம் முழுத்தொகை செலுத்த போனால் அந்த முழுத் தொகைக்கு இருக்கும் வட்டி கட்ட தேவையில்லை ஆனால் இதற்கு ஒரு கட்டணம் செலுத்த வேண்டும்.
EMI rules and regulations best tips 2023 அதாவது நீங்கள் 50,000 ரூபாய் கட்ட வேண்டும் என்றால் அதற்கு 2% வட்டி கணக்கிட்டு செலுத்த வேண்டும் இதுவும் ஒரு ஒவ்வொரு வங்கிக்கு மாறுபடும்.
எனவே EMI ல் நீங்கள் பொருட்கள் வாங்கினால் அதற்கு வட்டி எவ்வளவு, அபராதம் எவ்வளவு போன்ற முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்.
1 லட்சம் ரூபாய்க்கு குறைந்தபட்சம் 30,000 ரூபாய் மறைமுகமாக வசூல் செய்யப்படுகிறது.
இதை கணக்கில் கொண்டு EMI தவிர்த்து விட்டால் உங்களுக்கு மன அழுத்தம்,பணப்பிரச்சினை போன்றவை வாழ்க்கையில் இருக்காது.