ரூபாய் 15,000 மட்டுமே போதும் இந்தத் தொழிலை தொடங்குவதற்கு ஒவ்வொரு மாதமும் 60 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.(Emission testing center Best Business 2020)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர் , பெரிய நகரங்களுக்கு 2,200 கோடி ரூபாயை ஒதுக்கினார். காற்று மாசை குறைப்பதற்கு
2019 ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில் அபராத தொகையை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு 10,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்ட செய்தி கேள்விபட்டிருப்போம்.
மாசு சோதனை மையத்தை நீங்கள் உடனடியாக தொடங்கலாம்.மேலும் இதில் முதல் நாளிருந்து உங்களுக்கு பணம் கொடுக்க தொடங்கும்.
மத்திய அரசு புதிய மோட்டர் வாகன சட்டத்தை அமல்படுத்திலிருந்து வாகன புகை பரிசோதனை தொழில் சிறப்பாக நடைமுறையில் உள்ளது. புதிய நடைமுறைகளை அமல்படுத்தியதிலிருந்து (பி யூ சி) மாசு சான்றிதல் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்களுக்கு கட்டாயம் தேவைப்படுகிறது.
இதன் காரணமாக சிறிய வாகனம் முதல் பெரிய வாகனம் வரை கட்டாயம் ஆண்டுக்கு ஒருமுறை மாசு பரிசோதனை செய்ய வேண்டும். சொந்தமாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள மக்கள்களுக்கு இந்த வணிகம் மிகவும் லாபகரமானது. இந்த தொழில் மூலம் ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் முதல் 2,000 வரை கிடைக்கும்.
(பி யூ சி) மாசு சான்றிதல் எப்படி பெறுவது.
மாசு பரிசோதனை மையம் தொடங்க வட்டார போக்கு வரத்து அலுவலரிடம் ( RTO) அனுமதிப்பெற வேண்டும். நீங்கள் உங்கல் அருகில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தோடு ரூ 10 பிராமணப் பத்திரமும் வழங்கப்பட வேண்டும் கால மற்றும் நிபந்தனையும் பிராமணப் பத்திரத்தில் ஏழுதப்படவேண்டும். மேலும் இந்த தொழில் நடத்துவதற்கு எந்த ஒரு உள்ளூர் அதிகாரிகளிடமும் அனுமதி பெற தேவையில்லை.
மாசு பரிசோதனை மையம் நடத்துவதற்கு கல்வித்தகுதி.
மெக்கானிக்கல் என்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், ஆட்டோ மெக்கானிக்கல், டீசல் மெக்கானிக் அல்லது தொழில் துறை பயிற்சி நிறுவனம் (ITI) சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்கள் தேவை.
இன்றைய இளைஞர்களுக்கான சிறந்த 7 முதலீடு திட்டங்கள். யார் யாருக்கு என்னென்ன திட்டம்.
மாசு பரிசோதனை மையம் நடத்துவதற்கு தேவையான பொருட்கள்.
பொதுவாக ஒரு தொழிலை நடத்துவதற்கு தேவையான கருவிகள் அல்லது பொருள்கள் மட்டும் போதும் இந்த தொழிலை நடத்துவதற்கு தேவைப்படுகிறது முக்கியமாக புகை பகுப்பாய்வுகள், இன்சட் அச்சுப்பொறிகள்,( யூஎஸ்பி) வலை கேமராக்கள், இணையதளம் போன்றவைகள் தேவைப்படுகிறது.
உங்கள் கணினியில் அனைத்து வாகனங்களின் மாசு கண்டறிதல் மைய விவரங்களை ஒரு வருடம் வைத்திருக்க வேண்டும். மாசு சோதனை மையம் வாகனத்தின் புகை சோதனை செய்யப்பட்ட விவரங்களை அச்சிடப்பட்ட சான்றிதழ் முறையில் வழங்க வேண்டும். சான்றிதழ்கள் அதிகாரபூர்வ ஸ்டிக்கர்களாக வைத்திருப்பது கட்டாயம்.( பியூசி ) உரிமம் யாருடைய பெயரில் இருந்தாலும் அதை இயக்க உரிமை உண்டு வேறு யாராவது செயல்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கலாம்.
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020
மாசு பரிசோதனை மையத்தில் கண்டிப்பாக மஞ்சள் நிற வண்ணம் தீட்டப்பட வேண்டும். உரிமையாளர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட உரிமை எண்களை பரிசோதனை மையத்தில் வாடிக்கையாளர்களுக்கு நன்கு தெரியும் முறையில் எழுதப்பட வேண்டும்.
பெட்ரோல் பங்க், வட்டார போக்குவரத்து அலுவலகம், ஓட்டுநர் பயிற்சி பள்ளி, வாகனங்கள் சர்வீஸ் செய்யும் இடங்களில், இதுபோன்ற தொழிலை நடத்தினால் லாபகரமாக இருக்கும்.
இந்தத் தொழிலை தொடங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.(vahan.parivahan.gov.in/puc/