அமலாக்க துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இருக்கிறது செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் கருத்து..!Enforcement department has powers of arrest

Enforcement department has powers of arrest

அமலாக்க துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இருக்கிறது செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் கருத்து..!

செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு நடைபெற்று வருகிறது.

செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதங்களை முன்வைத்து வருகிறார்.

அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சில கருத்துக்களை தானாக முன்வந்து வைத்தார்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பல நபர்களிடம் அதிகபட்ச 3 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது,இந்த வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை.

அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது செந்தில் பாலாஜி நெஞ்சுவலி ஏற்பட்டது.

அதன்பிறகு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி உடல்நலம் குணமடைந்ததை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

முதலில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனு மீது விசாரணை நடத்தியது நீதிபதிகளின் தீர்ப்பு மாறுபட்டு இருப்பதால் மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

நீதிபதி சிவி கார்த்திகேயன் ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல தீர்ப்பளித்தார் அதன்பிறகு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது அதன்படி இன்று பிற்பகலில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு தொடங்கியது.

செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதங்களை முன் வைத்தார் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்எம் சுந்தரேஸ் ஆகியோர் அடங்கிய அமரும் முன்பு.

இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது,இந்த வழக்கின் வாதத்தின் போது அமலாக்க துறையால் கைது செய்ய முடியும் என்று நீதிபதிகள் தங்களுடைய கருத்துக்களை நேரடியாகவே தெரிவித்துள்ளார்கள்.

நீதிபதிகள் தெரிவிக்கையில் அதிகமான தரவுகளை பெறவே ஒருவரை விசாரணை முகாம்கள் கைது செய்கின்றன.

சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறியவே விசாரணை நடைபெறுகிறது.

சந்தேகத்தின் பெயரில் ஒரு நபரை கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.

அமலாக்க துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டு வரும் நிலையில் நீதிபதிகளில் இவ்வாறு தங்களுடைய கருத்துக்களை நேரடியாகவோ தெரிவித்து வருகிறார்கள்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Morning drinks to lower bad cholesterol

How to change Passport photo in tamil

How to renew your old Passport in online 2023

tn rs 1000 scheme how to get form in tamil

How Check PAN card Misuse in tamil 2023

Leave a Comment