இங்கிலந்தில் மீண்டும் பரவ தொடங்கியுள்ள புதிய கொரோன வைரஸ்ஸின் அரிகுறிகள் இவை தான்.(England New coronavirus symptoms 2021)
கொரோன வைரஸ்க்கு தடுப்பூச்சி கண்டுப்பிடிக்கும் முயற்ச்சில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பல்வேறு முயற்ச்சிகளை செய்கின்றன அதில் சில நிறுவனங்கள் தங்கள் கண்டுபிடித்த தடுப்பூச்சி சிறப்பாக செயல்படுகிறது என்ற அறிவிப்பினை வெளியிட்டு சற்று ஆறுதலான செய்தினை கேட்டுயிறுப்போம்.
தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த இங்கிலாந்து, அமெரிக்க, கனடா, சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகள் முதல் கட்ட நடவடிக்கைகளை தொடங்கியது.ஆனால் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் மருத்துவர்களுக்கு காத்திருந்தது ஒரு பேர் அதிர்ச்சி.
SUS-C02-2 வைரஸின் புதிய COVID-19 மாறுபாடு VUl 202012/01 என அழைக்கப்படுகிறது.இது லண்டன் மற்றும் இங்கிலாந்தின் சில பகுதிகளில் உள்ள மக்களை பாதித்துள்ளது என்று தெரியவந்துள்ளது.
இந்தி புதிய வைரஸ் கோவிட் 19 யை விட 70% சதவிகிதம் விரியத்துடன் செயல்படுகிறது என்று தெரியவந்துள்ளது. இதனை அறிந்த இங்கிலாந்து அரசு மீண்டும் ஊரடங்கு உத்தரவினை அறிவித்துள்ளது.
மேலும் இத்தாலி, சிங்கப்பூர், ஆஸ்திரோலியா, உள்ளிட்ட நாடுகளில் கூட இந்த புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதனால் உலக நாடுகள் மீண்டும் விமானச் சேவையே பல்வேறு நாடுகளுக்கு நிறுத்தியுள்ளது இந்தியா டிசம்பர் 31ம் தேதி வரை இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.இந்த புதிய கொரோனா 2.0 எப்படி இருக்கும் என்று இந்த கட்டுரையில் பார்ப்போம்.
வைரஸ்களைப் பற்றி இதுவரை நமக்கு தெரிந்தது.
வைரஸ்களில் குறிப்பிட்ட காலத்திற்க்கு ஒரு முறை மாற்றங்கள் நிகழும் அதே போல தான் இந்த கொரோனா வைரஸ்ஸிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.இந்த மாற்றம் சர்வதேச அக்கரையாக பார்க்கப்படுகிறது.பல உலக வல்லுனர்கள் புதிய COVID-19 வைரஸ் பல்வேறு அறிகுறிகளை கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.இது எளிதில் அதிவேகமாக பரவும் மற்றும் விடுமுறை நாட்களில் பல ஆயிரம மக்கள் இதனால் பாதிக்கபடுவார்கள்.
எற்கனவே உலக நாடுகள் பொருளாதரத்தில் 2020ம் ஆண்டு பலத்த இழப்புகளை சந்தித்தது. இந்த சூழ்நிலையில் புதிய வைரஸ் என்றதும் அனைத்து நாடுகளுக்கும் மீண்டும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த புதிய வைரஸ் எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவ வல்லுநர்கள் கொரோனா வைரஸ் மாற்றம் செப்டம்பர் மாதத்திற்கு முன்பே எற்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்கள். இந்த புதிய COVID-19 வைரஸ் வழக்கு டிசம்பர் 16ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த புதிய வைரஸ்சால் இங்கிலாந்தில் இதுவரை 1108 உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளது மேலும் மருத்துவர்கள் இந்த வைரஸின் புதிய தோற்றம் மற்றும் மரபணுவின் வடிவத்தை கண்டுபிடிக்க முயற்ச்சி செய்துக் கொண்டுயிருக்கிறார்கள்.
இந்த புதிய வைரஸின் வடிவம் எப்படி இருக்கிறது.
இந்த புதிய வைரஸ் ஸ்பைக் புரதத்தில் மாற்றங்களைக் கொண்டுள்ளது இது உடலில் தாக்குதலை தொடங்குவதற்க்கு முக்கிய பங்கு வகிக்கிறது புதிய B.11.7 மாற்றம் ORF8 மரபணுவின் துண்டிக்கப்பட்ட பாதிப்பைக் கொண்டுள்ளது இது உடலில் உள்ள ஆன்டிஜெனசிட்டியை மாற்றக் கூடும் அதாவது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை மிக விரைவாக அதிக சக்தியுடன் இந்த வைரஸ்சால் தாக்க முடியும்.
புதிய வைரஸ்சில் எத்தனை புதிய அறிகுறிகள் உள்ளன.
இந்த புதிய COVID-19 வைரஸ் எத்தகைய ஆபத்தானவை என்று இதுவரை நிருபிக்கப்படவில்லை ஆனால் மருத்துவ வல்லுநர்கள் புதிய வைரஸ் 70% அதிக வேகமாக பரவும் தன்மைக் கொண்டுள்ளது என்று குறிப்பிடுகிறார்கள்.புதிய வைரஸ் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளை பரிசோதனை செய்ததில் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆதாவது சளி, காய்ச்சல், இரும்பல்,வாசனை இழப்பு, குமுட்டல், தசை வலி, போன்றவைகள்.
சிகிச்சை அளிப்பதில் புதிய வைரஸ்க்கு எத்தகைய மாற்றம் தேவை.
மாற்றம் நிகழ்ந்த வைரசுக்கு சிகிச்சை அளிப்பது கடினம் என்றால் அது இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் ஆனால் அதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த ஒரு தொடர்பும் இப்போது வரை கண்டு பிடிக்கவில்லை. வயது, பாலினம், நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இருக்கும் அளவு, போன்ற சில காரணங்களால் சில நபர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கும் அபாயங்கள் மாறுபடுகிறது.
மாற்றம் அல்லது (பிறழ்வு) நிகழ்ந்த வைரசுக்கு தடுப்பூசி பலன் தருமா.
இங்கிலாந்து அரசு கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி போட முதல் கட்ட நடவடிக்கைகளை தொடங்கியது. ஆனால் வைரஸ்ல் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளதால் தடுப்பூசி பலன் தருமா என்ற ஒரு தெளிவற்ற கேள்வி எழுந்துள்ளது.twitter