Export of cow dung to kuwait useful tips 2022
அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மாட்டு சாணம் இயற்கை விவசாயத்திற்கு வழிவகை..!
இந்தியாவின் ராஜஸ்தானிலிருந்து அரபு நாடான குவைத்துக்கு 1.92 லட்சம் கிலோ மாட்டுச்சாணம் சமீபத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகள் இயற்கை விவசாய முறைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.
மேற்காசிய நாடான குவைத் இயற்கை விவசாயத்தில் இப்பொழுது அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் அங்குள்ள ஒரு நிறுவனம் நம் நாட்டின் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் உள்ள நிறுவனத்திடமிருந்து மாட்டுச்சாணம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது.
மாட்டு சாணம் ஏற்றுமதி
முதற்கட்டமாக 1.92 லட்சம் கிலோ மாட்டுச்சாணம் சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டது இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் பிரசாந்த் சதுர்வேதி செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில்.
எங்கள் நிறுவனத்தின் கோசாலையில் இருந்து சுங்கத்துறையினர் மேற்பார்வையில் மாட்டு சாணம் உருளைகளில் அடைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது என்றார்.
மாட்டு சாணம் ஏற்றுமதி பற்றி இந்திய இயற்கை விவசாய பொருட்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் அதுல் குப்தா தெரிவிக்கையில்.
நம் நாட்டிலிருந்து மாட்டு சாணத்தை குவைத் வாங்குவது இதுவே முதல் முறை உலக அளவில் பல நாடுகள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் செலுத்துவதால் இங்கிருந்து மாட்டு சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களின் ஏற்றுமதி அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது என்றார்.
கடந்த 2020-2021ம் ஆண்டில் மட்டும் 27 ஆயிரத்து 155 கோடி ரூபாய் மதிப்புள்ள மாட்டு சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
Export of cow dung to kuwait useful tips 2022 குவைத்தில் பசு சனத்துக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது,இதை பேரிட்சை மரத்திற்கு உரம் இடுவதால் விளைச்சல் அதிகம் மற்றும் அதிக சுவை கிடைப்பதாக அந்த நாட்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
முகத்தில் இந்த பகுதியில் வலி ஏற்பட்டால் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
அதுமட்டுமில்லாமல் திராட்சை பல செடிகளுக்கு இந்தப் பசு சாணத்தை அதிக அளவு உரம் இடுவதால் விளைச்சல் பல மடங்கு அதிகரிக்கிறது என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள்.
இப்பொழுது அமெரிக்கா, மலேசியா, மாலத்தீவு, அரபு நாடுகள், ஆகிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து பசுஞ்சாணம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் இருந்து அரபு நாடுகளுக்கு இயற்கை உரங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது, இனி வரும் காலங்களில் நம் நாட்டின் ஏற்றுமதி அளவு விவசாயம் சார்ந்த துறைகளில் பல மடங்கு அதிகரிக்கும்.