Folic Acid tablet best uses in tamil 2022
தாய்மார்களுக்கு எப்படி உதவுகிறது போலிக் ஆசிட் மாத்திரை..!
எந்த ஒரு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் கட்டாயம் அதில் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் இருக்கும்.
குறிப்பாக ஆங்கில மருந்து மாத்திரைகளில் இதனுடைய தாக்கம் அதிகமாக இருக்கும்.
மருத்துவர்கள் குறிப்பாக தாய்மார்களுக்கு சில மாத்திரைகளை அதிக அளவில்பரிந்துரை செய்வார்கள்.
அந்த வகையில் இன்று போலிக் ஆசிட் மாத்திரையை மருத்துவர்கள் ஏன் பரிந்துரை செய்கிறார்கள் என்பதைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.
போலிக் ஆசிட் மாத்திரை அதிக அளவில் குறிப்பாக தாய்மார்களுக்கு அதிக அளவில் பரிந்துரைக்கப்படுகிறது கர்ப்பம் தரிக்க தாமதமாகும் பெண்களுக்கு.
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும் இந்த மாத்திரை அதிக அளவு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த மாத்திரையை மருத்துவர்கள் ஏன் குறிப்பாக தாய்மார்களுக்கு அதிக அளவில் பரிந்துரைக்கிறார்கள் என்பதைப்பற்றி என பார்க்கலாம்.
மேலும் இந்த போலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக் கொள்வதால் என்னமாதிரியான பக்க விளைவுகள் ஏற்படும் என்பதையும் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
போலிக் ஆசிட் மாத்திரை என்றால் என்ன..!
உடம்பில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை எப்பொழுதும் சரியான அளவில் இருக்க வேண்டும்.
அதற்கு வைட்டமின்-பி ஊட்டச்சத்து கட்டாயம் தேவை சில நேரங்களில் இயற்கையான உணவு, செயற்கையான உணவுகள் மூலம் வைட்டமின்-பி ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்ளலாம்.
போலிக் ஆசிட் மாத்திரை என்பது வைட்டமின் பி ஊட்டச்சத்து நிறைந்த ஒரு மாத்திரை என்று மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது.
போலிக் ஆசிட் அதிகம் நிறைந்த உணவு பட்டியல்
நீங்கள் இயற்கையான முறையில் உங்கள் உடம்புக்குத் தேவையான வைட்டமின் பி ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்ளலாம்.
காய்கறிகள்,பசலைக்கீரை, பீன்ஸ், பப்பாளி, ஆரஞ்சு, முட்டை, கீரை, ஈஸ்ட்,ப்ரோக்கோலி,முளைகட்டிய பயிறு, பச்சைபட்டாணி, முழு தானியங்கள், வாழைப்பழம்,ஈஸ்ட்,அரிசி, கறிவேப்பிலை,போன்ற உணவுகளில் அதிக அளவு போலிக் ஆசிட் நிறைந்துள்ளது.
போலிக் ஆசிட் மாத்திரையின் சில பயன்கள்
Folic Acid tablet best uses in tamil 2022 கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த மாத்திரை அதிக அளவில் பரிந்துரைக்கப்படுகிறது.
குழந்தையின் வளர்ச்சி மற்றும் பெண்களின் உடம்பில் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதற்கு போலிக் ஆசிட் மாத்திரை பங்கு மிக முக்கியம்.
ரத்த சோகை உள்ள நபர்களும் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம், ஏனென்றால் இதன் மூலம் உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும்.
மாதவிடாய் சரியாக வராமல் இருக்கும் பெண்களும் மருத்துவரின் ஆலோசனை கேட்டு இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளுக்கும் இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.
உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதற்கு இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது.
போலிக் ஆசிட் மாத்திரையின் விளைவுகள்
Folic Acid tablet best uses in tamil 2022 காய்ச்சல், குமட்டல், வயிற்று வீக்கம், எரிச்சல், போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மனச்சோர்வு, அலர்ஜி, தோல் சிவந்து போதல், தோல் அரிப்பு, போன்ற உடல் உபாதைகளும் ஏற்படும்.
மேலே கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் சில பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளலாம்.
இந்த மாத்திரை எப்படி யார் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Folic Acid tablet best uses in tamil 2022 இருதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய் உள்ள நபர்கள் மருத்துவரின் பரிந்துரை பெற்று இந்த மாத்திரையை பயன்படுத்தலாம்.
கர்ப்பிணி பெண்கள்,மகப்பேறு அடைவதற்கும் காத்திருக்கும் பெண்கள்,குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள்,மகப்பேறு பிரச்சினை உள்ள நபர்கள், இந்த மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை பெற்று தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம்.