Following these to quit drinking best 5 tips
குடிப்பழக்கத்தில் இருந்து முழுமையாக வெளிவர வேண்டுமா இதில் ஏதாவது ஒரு வழி பின்பற்றினால் போதும்..!
குடியை நிறுத்த வேண்டும் என்றால் குடிப்பவர்கள் தாங்களாகவே சுயகட்டுப்பாட்டுடன் முன்வந்து மனதில் உறுதியான கொள்கை வைத்துக்கொண்டு குடிக்கக்கூடாது என்று நினைத்தால் மட்டுமே முடியும்.
மற்றவர்கள் அறிவுரை கூறிய எல்லாம் குடிப்பவர்களை அவ்வளவு எளிதில் குடிப்பழக்கத்திலிருந்து மீட்டு விட முடியாது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது குடிகாரர்களே பார்த்து குடியை நிறுத்தாவிட்டால் குடிப்பழக்கத்தில் இருந்து அவர்களை முழுமையாக விடுவிக்க முடியாது இதுதான் உண்மை.
நீங்கள் குடி பழக்கம் உடையவர்களாக இருந்தால் உங்களது ஒருவர் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை.
உங்களை திருமணம் செய்த மனைவி,உங்களது குழந்தை,உங்களது தாய், தந்தை,உங்களை சுற்றி இருக்கும் நண்பர்கள், உறவினர்கள்,என அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை முதன் முதலில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அடுத்தவர்களையும் சேர்த்து நீங்கள் துன்புறுத்துகிறார்கள், எப்படி எந்த சூழலில் ஒருவர் குடிக்க தொடங்கி விடுகிறார், என்ன செய்வது இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் குடியை நிறுத்திவிட முடியும் என்று கூறுகிறது இயற்கை மருத்துவம்.
உங்களது வீட்டில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு, இதை பயன்படுத்தி பாருங்கள், இதை படிப்பவர்களுக்கு குடிப்பழக்கம் இருந்தால் மன உறுதியோடு நீங்கள் இதை சுயமாக செய்து பார்க்கலாம்.
முதலில் ஏலக்காய் விதை, எலுமிச்சை விதை, இவையிரண்டையும் சம அளவு எடுத்து கொண்டு நன்றாக வெயிலில் காய வைத்து நன்றாக அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த பொடியை நீங்கள் சமைக்கும் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துவிட வேண்டும்.
குறிப்பாக கறி குழம்பு, மீன் குழம்புகளில் சேர்க்கலாம் குடிப்பவர்களுக்கு தெரியாமல் இதை தொடர்ந்து 30 நாட்களுக்கு கொடுங்கள் விரைவில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
குடிக்கும் அந்த ஆல்கஹால் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது வாந்தியை ஏற்படுத்தி விடும்.
இதனால் குடிக்க வேண்டாம் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்துவிடுவார்கள்.
பொதுவாகவே குடிப்பவர்களுக்கு காரசாரமான கறி குழம்பு மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும் அதில் இந்த மருந்து கலப்பது தெரியாமல் சாப்பிட வைத்து விடுங்கள்.
கல்லீரலை மேம்படுத்துவது எப்படி
Following these to quit drinking நீங்கள் நீண்ட நாட்களாக குடித்து உங்களது கல்லீரல், மண்ணீரல், நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்கும், அப்படிப்பட்ட நபர்கள் பின்வரும் குறிப்புகளை ஏதாவது ஒன்றை பின்பற்றினால் கூட நல்ல பலன்கள் கிடைக்கும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் 5 பேரிச்சம் பழங்களை ஊற வைத்து தினமும் காலை வேளையில் குடித்து வந்தால் குடிப்பழக்கத்தை கைவிட முடியும்.
ஆரோக்கியமும் மேம்படும் உடலில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும்.
பாகற்காயை நன்றாக அரைத்து ஒரு கரண்டி சாறு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள், ஒரு டம்ளர் மோரில் அந்த சாற்றை கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.
வீடு கட்டுவதற்கு மத்திய அரசு விரைவில் வழங்குகிறது ரூபாய் 4 லட்சம்..!
Following these to quit drinking ஆப்பிள் பழச்சாறு குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுதன்மை நீங்கும், அதிகமான குடிப்பழக்கம் உள்ள நபர்களுக்கு உடம்பிலுள்ள ரத்தத்தில் விஷத்தன்மை கொண்ட நச்சுப்பொருட்கள் அதிகமாக சேர்ந்து கொண்டே இருக்கும் இது உயிருக்கே ஆபத்தாக போய் முடியும்.
உங்களுக்கு மதுபானம் குடிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றும் போதெல்லாம் கேரட் ஜூஸ் குடிக்கலாம் அல்லது எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம், ஆரஞ்சு பழச்சாறை குடிக்கலாம் இதனைப் பின்பற்றி வந்தால் விரைவில் இந்த குடி பழக்கத்தை கைவிடுவீர்கள்.