Free admission of students in tn useful 2022
தமிழக தனியார் பள்ளிகளில் இலவசமாக மாணவர் சேர்க்கை மே 18 கடைசி நாள்..!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டத்தின் மூலம் 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு மே 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தற்போது தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பிறகு பரவலாக தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ-மாணவிகள் வழக்கம்போல பள்ளிக்கு சென்று வருகிறார்கள்.
பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது, தமிழ்நாடு முழுவதும்.
இந்த நிலையில் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களில் சேர 2003ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டம் மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தமிழகத்தில்
அந்த வகையில் 2022 மற்றும் 2023 ஆம் கல்வியாண்டில் தனியார் மழலையர் தொடக்கப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில்.
மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்கனவே வழிகாட்டுதல் தொடங்கி வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இப்பொழுது சிறுபான்மையாற்ற, தனியார், மழலையர், மற்றும் தொடக்கப் பள்ளிகள், சுயநிதி மெட்ரிகுலேஷன், பள்ளிகளில், நுழைவு நிலை 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Free admission of students பெற்றோர்கள் அவரவர் இடத்தில் இருந்த விண்ணப்பிக்கலாம் பதிவேற்றம் செய்த விவரம் பதிவு செய்த பெற்றோர்களின் விவரம் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம்.
ஆகியவை பெற்றோர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
மேலும் விண்ணப்பங்களை ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்கி மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய, கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு, இந்த கல்வி உரிமை சட்டத்தின் மூலம் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.
ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்புகளிலும் இது போல் கல்வி உரிமை சட்டத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதை நன்கு அறிந்தவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த சட்டமூலம் பயன்பெற்று வருகிறார்கள், நீங்களும் விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.