Free goat scheme full details in tamil 2022
அரசு வழங்கும் 90 சதவீத மானியத்துடன் ஆடு வழங்கும் திட்டம்..!
நண்பர்களுக்கு வணக்கம் இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் தமிழக அரசு வழங்கி வரும் 90 சதவீத மானியத்துடன் இலவச ஆடு வழங்கும் திட்டத்தை பற்றி தான்.
இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம், இலவசமாக வழங்கும் ஆடு வழங்கும் திட்டத்தில் யாரெல்லாம் இணைய முடியும், இந்த திட்டத்தின் முக்கிய விதிமுறைகள் என்ன.
திட்டத்தின் பயன்கள் எப்படி விண்ணப்பிப்பது, என்ற முழு விவரங்களையும் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடு வழங்கும் திட்டம்
தமிழக அரசு கால்நடை துறை மூலம் 90 சதவீத மானியத்துடன் செம்மறி மற்றும் வெள்ளாடுகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகிறது.
ஆடு வழங்கும் திட்டம் எதற்கு கொண்டுவரப்பட்டது என்றால் செம்மறியாடு 7.36 சதவீதம் மட்டுமே உள்ளது, வெள்ளாடு 6.2 சதவீதம் மட்டுமே உள்ளது.
ஆட்டு இறைச்சி அதிகமாக தேவைப்படும் வரும் இந்த சூழ்நிலையில், செம்மறி மற்றும் கால்நடை வெள்ளாடுகளை அதிகரிப்பதற்காக.
கால்நடை பராமரிப்பு துறை சார்பாக, ஊரக புறக்கடை செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் உற்பத்தி செய்ய இந்த திட்டம் தமிழக அரசால் இப்பொழுதும் செயல்படுத்தப்படுகிறது.
ஆடு வழங்கும் திட்டம், மாநகராட்சி, பொருளாதார ரீதியில் பின்தங்கிய நபர்கள், தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய ஊராட்சிகள், மாவட்டங்களில், மாநில திட்ட குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும்.
பயனாளர்களுக்கு கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புறக்கடை செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் அதிகமாக உற்பத்தி செய்ய இந்த திட்டம் மூலம் செம்மறி மற்றும் வெள்ளாடுகளை மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
திட்டத்தின் முழு பயன்கள் என்ன
ஆடு வழங்க மத்திய அரசானது 60 சதவீதம் நிதி வழங்குகிறது அடுத்து மாநில அரசு 30 சதவீதம் நிதி வழங்குகிறது, மொத்தமாக பயனாளர்களுக்கு 90 சதவீதம் நிதி கிடைக்கிறது, மீதமுள்ள 10 சதவீத நிதி பயனாளர்கள் செலுத்த வேண்டும்.
பயனாளியின் பங்கானது நிதி முறையில் கொண்டுவரப்பட்டது திட்டமானது 21 மாவட்டங்களில் 83 தொகுதிகளில் உள்ளடக்கிய கிராமப்புற பகுதிகளில் உள்ள தகுதி பெற்ற ஏழை எளிய மக்களுக்கு செயல்படுத்தப்படுகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்
இந்த திட்டத்தின் மூலம் நிலமற்ற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம், சிறு குறு விவசாயிகள் பயன்பெற முடியும், இலவசமாக ஆடு வழங்கும் திட்டத்தில்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம், மேலும் விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விண்ணப்பித்து பயன் பெறமுடியும்.
பயனாளிக்கு என்ன பயன்
இந்த திட்டத்தில் 4 முதல் 5 மாத வயதுடைய 10 செம்மறி ஆடுகள் அல்லது 5 முதல் 6 மாத வயதுடைய வெள்ளாடுகள் வழங்கி வருகிறது தமிழக அரசு.
இதனுடன் ஒரு ஆட்டுக்கிடாயும் வழங்கப்படும், இந்த திட்டத்தில் ஏதேனும் ஒரு திட்டம் மட்டும் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விதிமுறை
திட்டத்தின் மூலம் ஆடுகளுக்கு 3 வருடம் வரை காப்பீடு செய்து கொடுத்து விடும் தமிழக அரசு.
அடுத்ததாக கிடாய் ஆடுகள்யாக இருந்தால் பயனாளிகள் 1 வருடத்திற்கு கட்டாயம் விற்பனை செய்யக்கூடாது, அது போன்று பெட்டை ஆடுகள் ஆக இருந்தால் 3 வருடங்கள் விற்பனை செய்யக்கூடாது இதற்கு சான்றாக பயனாளிகளிடம் ஒப்பந்த படிவம் பெற பட்டுவிடும்.
மாதந்தோறும் பென்ஷன் வேண்டுமா எல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டம்.
எப்படி விண்ணப்பிப்பது
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் நபர்கள் அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவர் விண்ணப்ப படிவத்தை பெற்று அவர்களிடம் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் முழுமையாக.
MISA act full details in tamil 2022
ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வருமான சான்று, இருப்பிடச் சான்று, விதவைகளாக இருந்தால் விதவை சான்று, ஊனமுற்றவராக இருந்தால் அதற்கான சான்றிதழ், நிலமற்றவர்களாக இருந்தால் அதனுடைய சான்று கட்டாயம் கொடுக்க வேண்டும்.