நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க FSSAI பரிந்துரைக்கும் 7 உணவுகள்.(FSSAI announced 7 foods boost your immunity)
2020ஆம் ஆண்டு உலகில் உள்ள அனைத்து நாடுகளும் மக்களுக்கு கூறும் ஒரு அறிவுரை உங்களுடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள் இது நமது நாட்டுக்கும் உலகத்துக்கும் நன்மை என்று சொல்லப்படுகிறது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி ஏராளமான மக்களை பாதித்துள்ளது இந்தக் கொடிய வைரசால் சுமார் 6 லட்சத்திற்கு அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளார்கள். மேலும் நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ளது.
சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற நாடுகளில் இந்த வைரஸ் நோய் தொற்று வேகமாக உள்ளது. மேலும் இந்தியா போன்ற சுகாதார வசதி குறைவாக உள்ள நாடுகளுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் அதிகம் சேர்க்க வேண்டிய சில உணவு வகைகளை வெளியிட்டுள்ளது குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த உணவுகளை பரிந்துரைத்துள்ளது.
குடைமிளகாய்.
குடைமிளகாயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது மேலும் வைட்டமின் ஈ மற்றும் நார்ச்சத்து, போலட் ,பொட்டாசியம் போன்ற கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவதற்கு தேவையான வைட்டமின் சி இருப்பதால் குடை மிளகாயை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
கொய்யா பழம்.
ஆப்பிளை விட கொய்யாப்பழத்தில் அதிக நன்மைகள் இருக்கிறது என்று பலமுறை நாம் சமூக வலைத்தளங்கள் அல்லது செய்தித்தாள்கள் மூலம் தெரிந்திருப்போம் அது உண்மையான விஷயமாகும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மேலும் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் சில பிரச்சினைகளிலிருந்து நிவாரண அளிக்கவும் உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. கொய்யா பழத்தில் பொட்டாசியம் ,இரும்பு ,கால்சியம், நார்ச்சத்து, போன்ற ஏராளமான தனிமங்கள் நிறைந்துள்ளது.
முருங்கைக்கீரை.
கீரை வகைகளில் சிறந்தது விளங்கும் முருங்கைக்கீரையில் 90 வகையான சத்துக்களும் 46 வகையான மருத்துவ குணமும் இருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது. உடலில் இரும்புச்சத்தை அதிகரித்துக்கொள்ள நாம் செயற்கையாக எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளை விட முருங்கைக்கீரையில் பல மடங்கு இரும்புச்சத்து உள்ளது.
இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, புரதச்சத்து, உடலுக்கு தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளது. முருங்கைக்கீரையில் மட்டும் 9 வகையான அமினோ அமிலங்கள் உள்ளது மற்ற எந்த உணவுகளிலும் இதுபோல் அமினோ அமிலங்கள் இல்லை. நம் முன்னோர்கள் வீட்டிற்கு ஒரு முருங்கை மரத்தை வளர்த்ததால் குடும்பமே ஆரோக்கியமாக செல்வ செழிப்பாக இருந்தது.
நெல்லிக்காய்.
நீங்கள் தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது இது இரத்தத்தின் திரவத்தை மேம்படுத்துவதற்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பதற்கும் நமது உடலுக்கு பயன்படுகிறது.
ஆரஞ்சு பழம்.
வைட்டமின் சி என்ற உடன் நமக்கு முதலில் ஞாபகம் வருவது ஆரஞ்சுப்பழம் காரணம் ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் இந்த தனிமம் உள்ளது. மற்றும் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்துக்களான, தியமின், போலேட், பொட்டாசியம், போன்ற ஏராளமான நோய் எதிர்ப்பு சக்திகளை இந்த ஆரஞ்சு பழம் கொண்டுள்ளது.
பாலின் விலை ஒரு லிட்டர் இந்தியாவில் 7000 ரூபாய் அளவிற்கு விற்கப்படுகிறது விற்கப்படுகிறது.
கடல் மீன்கள்.
குளங்கள், ஏரிகள், ஆறுகளில் வளரும் மீன்களை விட கடல் மீனில் அதிக அளவில் ஒமேகா 3, 6 சத்துக்கள் நிறைந்துள்ளதாக பலமுறை நாம் கேள்விப்பட்டிருப்போம் இன்றைய காலகட்டங்களில் பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்களுக்கு செயற்கையான உரம் மற்றும் ஊசிகள் போடப்படுவதால் இதனை சாப்பிடுவதால் உடலுக்கு பல விதமான தீங்குகளை ஏற்படுத்துகிறது.
கடல் மீனில் அதிக அளவில் புரதச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் அதிக அளவில் இருக்கிறது.
நாட்டுக்கோழி முட்டை.
கர்ப்பிணி பெண்கள், விளையாட்டு வீரர்கள், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் நபர்கள், உடல் உழைப்பு அதிகம் கொண்ட நபர்கள், நாட்டுக்கோழி முட்டையை உணவில் தினமும் 2 அல்லது 1 எடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டுக்கோழி முட்டையில் புரதச் சத்து அதிக அளவில் உள்ளது இந்தப் புரதச்சத்து கண் பார்வை குறைபாடு, கண்புரை, கண் அழுத்தம், போன்ற கண் சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த தீர்வாகும்.twitter