Fuel price hike coming weeks india 2022
5 மாநில தேர்தலுக்கு பின் காத்திருக்கும் அதிர்ச்சி பாதிக்கப்படுவது யார்..!
இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலை தற்போது ஒரு பேரல் 94 டாலரை நெருங்கிவிட்டது, ஆனாலும் இந்தியாவில் எரிபொருள் ஒரு விலையில் எந்த வித மாற்றமும் இதுவரை செய்யப்படவில்லை.
கடந்த சில வருடங்களாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தேர்தல் நடக்கும் நேரத்தில் குறிப்பாக பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாமல் விட்டுவிடுகிறது.
அதேபோல் தற்போது இந்தியாவில் 5 மாநில தேர்தல் நடக்க உள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை இதுவரை இல்லாத அளவில் ஒரு பேரலுக்கு 94 டாலரை நெருங்கியும் விலையை உயர்த்தாமல் வைத்துள்ளது.
இதனால் தேர்தல் முடிந்த பின்பு பெட்ரோல், டீசல், விலையில் தொடர்ந்து அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
கச்சா எண்ணெய் நிலவரம்
ஓமிக்ரான் நோய்த் தொற்று காரணமாக கடந்த நவம்பர் 4ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை 81 டாலரிலிருந்து டிசம்பர் 1ஆம் தேதி இதன் விலை 69 டாலர் வரையில் அதிரடியாக குறைந்தது.
ஆனால் ஓமிக்ரான் மூலம் உருவான 3வது அலையில் பெரிய பாதிப்பு இல்லாத காரணத்தால், சில நாட்களில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உச்சத்தை தொட ஆரம்பித்துவிட்டது.
இருநாடுகளுக்கு உள்ள பிரச்சினை
இதே வேளையில் உக்ரைன், ரஷ்ய பிரச்சினை மூலம் ஐரோப்பிய மற்றும் பிரிட்டன் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தட்டுபாடு காரணமாக கச்சா எண்ணெய் விலை 93 டாலர் வரை உயர்ந்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இரு நாடுகளுக்கு உள்ள எல்லை பிரச்சினை காரணமாக தற்போது அமெரிக்காவின் தலையீடு என்பது மற்றும் வளர்ந்த மேற்கத்திய நாடுகள் வர்த்தக தடை விதிப்பு எச்சரிக்கை காரணமாக இது ஒரு சர்வதேச பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது.
ரஷ்யாவின் பங்களிப்பு என்ன
ரஷ்யா உலகின் 3வது மிகப் பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக இருக்கும் நிலையில் கச்சா எண்ணெய் சந்தையில் ரஷ்யாவின் ஆதிக்கம் மிகவும் அதிகம் எப்பொழுதும்.
இதனால் ரஷ்யாவின் மீதான போர் மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை உலக நாடுகளில் பெரும் பாதிப்பாக மாறியுள்ளது.
சர்வதேச சந்தையில் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதியில் இருந்து கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 12 அல்லது 15 சதவீதம் வரை உயர்ந்து உள்ளது.
இந்தியா போன்ற கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகமாக நம்பியிருக்கும் நாடுகளுக்கு, இது மிகப்பெரிய ஒரு தலைவலி மற்றும் பணவீக்கத்தை அதிக அளவில் ஏற்படுத்தக்கூடியது.
காளான் பிரியாணி வீட்டிலிருந்து செய்வது எப்படி எளிமையான குறிப்பு..!
இந்தியாவில் தற்போது இருக்கும் பெட்ரோல் டீசல் விலை சர்வதேச அடிப்படையில் அரசியல், அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது 5 மாநில தேர்தலுக்கு பின்பும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தால்.
Top 5 amazing health benefits of salmon fish
இந்தியாவில் நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய ஒரு பாதிப்பு ஏற்படும் என்பது ஒரு உண்மையான விஷயம், ஏனென்றால் பெட்ரோல் டீசல் விலையில் அதிரடியான மாற்றங்கள் இந்தியாவில் நடைபெற்று விடும்.