Gastric problem home remedy 8 best tips
வாயு தொல்லை நிரந்தரமாக நீங்க வீட்டு வைத்தியம் என்ன..!
நெஞ்சு எரிச்சல், ஏதோ அடிக்கடி குத்துவது போன்ற உணர்வு, பின்பகுதி ஆசன வாயில் அடிக்கடி வாய்வு வெளியேறுவது, மாரடைத்தது போன்ற உணர்வு.
எதையாவது சாப்பிட்டாலும் அப்படியே நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது, வயிற்றில் கூட கடவென சத்தம் ஏற்படுவது.
லேசாக தலை சுற்றுவது, சிலருக்கு இருக்கலாம் இப்படி பல அறிகுறிகளும் அசௌகரியமும், தாய்மார்களுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு, இருக்கும்.
வாயு தொல்லை நீங்க பாட்டி வைத்தியத்தை வீட்டிலிருந்து பின்பற்றலாம்.
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள, ஆரோக்கிய குறிப்புகளை பின்பற்றி இதனை முழுவதும் சரிசெய்யலாம்.
வீட்டில் இருக்கும் சில மசாலா பொருட்கள்
ஏலக்காய், சீரகம், சோம்பு, மூன்றும் ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.
எனவே வாய்வு தொல்லையால் பாதிக்கப்பட்ட நபர்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை வெறும் வாயில் மென்று சாப்பிட்டு வர நல்ல பலன்கள் கிடைக்கும்.
சீமை சாமந்தி டீ
சீமை சாமந்தி டீ பேக் இப்போது எல்லா பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கும், அதை வாங்கி தண்ணீரில் தேநீர் தயாரித்து குடித்தால், வாயுத்தொல்லை வராமல் தடுக்கும், வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
வாழைப்பழம்
இந்த வாயு தொல்லைக்கு வாழைப்பழம் மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது, வாயுத் தொல்லை இருப்பவர்கள் உடனடியாக வாழைபழம் சாப்பிட்டு வந்தால் இதனை கட்டுப்படுத்திவிடலாம்.
பேரிக்காய்
ஆப்பிளை போன்ற அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள பேரிக்காயில் வாய்வு தொல்லையிலிருந்து விடுதலை தருகிறது.
ஜீரண சக்தியை தூண்டுகிறது, தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை ஏற்படாது.
புதினா இலைகள்
புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது,வாயுவினால் அவதியுறும் போது, புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும், புதினா எண்ணெயை, வெந்நீரில் ஒருதுளி கலந்து குடித்தால், வேகமான பலன் கிடைக்கும்.
கருப்பு மிளகு
மிளகை பொடி செய்து குறைந்தபட்சம் 50 கிராம் எடுத்து 2 டம்ளர் நீரில் சேர்த்து 20 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி.
அந்த நீரை வடிகட்டி கால் டம்ளர் அளவு என மூன்று வேளை குடித்து வந்தால் வாயுத் தொல்லை முற்றிலும் குணமாகும்.
தேங்காய்
Gastric problem home remedy இந்த வாயு தொல்லை நிரந்தரமாக நீங்க தேங்காய் துருவலை சாப்பிடலாம், தேங்காய் நீரை குடிப்பதாலும் வாயுத் தொல்லை குணமாகும், ஜீரண உறுப்புகளை மேம்படுத்துகிறது, அமில உற்பத்தியை வயிற்றில் கட்டுப்படுத்துகிறது.
பப்பாளி பழம்
Gastric problem home remedy வாய்வு தொல்லை அடிக்கடி ஏற்படும் சமயங்களில் பப்பாளி பழத்தை ஒரு துண்டு எடுத்து சாப்பிடுங்கள், இந்த வாயு தொல்லை முற்றிலும் குணமாகிவிடும், பப்பாளி ஜீரண அமிலங்கள் தூண்டுகிறது இதனால் வாயு தொல்லை முற்றிலும் சரியாகிவிடும்.