Girl child benefit scheme full details 2022

Girl child benefit scheme full details 2022

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் என்றால் என்ன..!

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம், பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் இந்த திட்டத்தில் அரசால் பெண்குழந்தைகளுக்கு தொகைகள் வழங்கப்படும், அரசால் வழங்கப்படும் தொகையானது குழந்தை தன் 18 வயது பூர்த்தியான பிறகு.

எதிர்காலத்தில் 3 லட்சம் ரூபாய் வரையில் கொண்டுவரப்பட்டது, தான் இந்த முதலமைச்சரின் பெண் குழந்தை திட்டம்.

முதலமைச்சர் பெண் குழந்தைக்கான பாதுகாப்பு திட்டம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது முதல் திட்டமானது குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்றால்.

முதலமைச்சரின் திட்டப்படி அரசால் அந்தப் பெண் குழந்தை எதிர்காலத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் 50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும்.

பெண் குழந்தைக்கான 2ம் திட்டமானது ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக ரூபாய் 25 ஆயிரம் வீதம் அரசால் முதலீடு செய்யப்படும்.

Girl child benefit scheme full details 2022

வயது வரம்பு என்ன

முதலமைச்சரின் பெண் குழந்தை திட்டத்தில் வரும் பணத்தை உடனடியாக எடுத்து பயன்படுத்த முடியாது, அந்தப் பெண் குழந்தைக்கு குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியான பிறகு மட்டுமே அதை எடுக்க முடியும்.

குறிப்பாக பெண் குழந்தைகள் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

வட்டி விகிதம் எவ்வளவு

18 வயது பூர்த்தியான பிறகு அந்த குழந்தையின் வங்கி கணக்கிற்கு பணம் வட்டி விகிதத்துடன் செலுத்தப்படும், குடும்பத்தில் ஒரு குழந்தை உள்ளவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து 3 லட்சம் ரூபாய் வரையிலும்.

இரண்டு பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கு தனித்தனியாக 1,50,000/- ரூபாய் வரையிலும் குழந்தைகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் அரசாங்கத்தால்.

இதற்கு தேவைப்படும் ஆவணம் என்ன

இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆண்குழந்தை இல்லை என்ற சான்றிதழ், சாதிச்சான்றிதழ், பெண் குழந்தைகள் பிறப்பு சான்றிதழ், கருத்தடை சான்றிதழ்.

குடும்ப அட்டை, ஆதார் அட்டை, திருமண சான்றிதழ்,குடும்ப புகைப்படம், தந்தை அல்லது தாயின் கல்வி சான்றிதழ், போன்ற ஆவணங்கள் கட்டாயம் நினைத்திருக்க வேண்டும்.

ஆவணங்கள் வாங்க வேண்டிய இடம்

வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்,ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ், சாதி சான்றிதழ், இல்லாதவர்கள் உங்களுடைய தாசில்தார் அலுவலகத்தில் சென்று இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.

பெண் குழந்தைகள் பிறப்பு சான்றிதழ், தாய் தந்தையின் கருத்தடை சான்றிதழ், போன்றவை மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.

திருமண சான்றிதல் துணை பதிவாளர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

Girl child benefit scheme full details 2022

ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும்

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றால், உங்களுடைய குடும்ப வருமானம் குறைந்த பட்சம் 72,000/-ல் இருக்கவேண்டும் ஆண்டிற்கு.

இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது

தாய்மார்கள் பிரசவ காலம் முடிந்து தன் முதல் குழந்தைக்கு 3 வயதிற்குள் இந்த பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து விட வேண்டும்.

இந்த திட்டத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்கும் போது நீங்கள் வசித்துவரும் வட்டாரத்தில் Block Development Office (BDO) என்ற அலுவலகத்திற்கு சென்று.

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கூறினால் BDO அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் ஒன்று கொடுப்பார்கள்.

அந்த படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து பிறகு தேவைப்படும் ஆவணங்கள் இணைக்க வேண்டும், ஆவணங்களை தயார் செய்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்படும்.

ஆவணங்களை படிவத்தில் இணைத்த பிறகு (BDO) அலுவலகம் செல்லவேண்டும் உங்களுடைய ஆவணங்கள் SCAN செய்து நகல்களை தங்களிடம் கொடுத்து விடுவார்கள், அதன் பிறகு விண்ணப்பத்தை மேலிடத்திற்கு அனுப்பி விடுவார்கள்.

உங்களுடைய விண்ணப்பம் அனைத்து வகையிலும் சரியாக இருக்கும்பட்சத்தில் அதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்.

உங்களுடைய வட்டாரத்திலுள்ள, BDO அலுவலகத்திலிருந்து குறைந்தபட்சம் 2மாதம் கழித்து உங்கள் பெண் குழந்தை வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தியதற்கான.

நகல் (Photocopy) ஒன்றை கொடுப்பார்கள் இந்த நகல் (Photocopy) பத்திரமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

இந்த (Deposit Account Joint Account) யாக இருக்க வேண்டும் ஏனென்றால் உங்களுடைய பெண் குழந்தை Minor என்பதால்   குழந்தையின் அம்மா பெயரில் வங்கி கணக்கு இருக்க வேண்டும்.

இதனைப் புதுப்பிக்க வேண்டும்

வங்கி கணக்கில் செலுத்திய தொகையை (Tamil Nadu power finance and infrastructure Development Corporation Limited-ல்) பராமரித்து வருகிறார்கள்.

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்திய பிறகு 5 வருடத்திற்கு ஒருமுறை இந்த திட்டத்தை உங்களுடைய வட்டாரத்தில் (BDO)உள்ள அலுவலகத்தில் புதுப்பிக்க வேண்டும்.

பனை மரத்தின் பயன்கள் என்ன..!

புதுப்பிப்பதற்கு BDO அலுவலகத்தில் கொடுத்த (Photocopy) நகல் தேவைப்படும், அதனால் இந்த நகலை பத்திரமாக வைத்து பாதுகாக்க வேண்டும்.

What is Chitta Patta Adangal full details 2022

5 வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும், பெண் குழந்தையின் வங்கி கணக்கில் 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு முழு தொகையையும் பெற்றுக் கொள்ளலாம்.

Leave a Comment