Gokulraj murder case big news news 2022
கோகுல்ராஜ் கொலை அது நான் இல்லை பிறழ் சாட்சியமாக மாறிய சுவாதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது..!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சி அளித்த சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
சிசிடிவி பதிவில் கோகுல்ராஜ் உடன் இருப்பது நான் அல்ல என்று ஏற்கனவே சுவாதி சாட்சியமளித்துள்ளார்.
மாஜிஸ்திரேட் முன் கொடுத்த வாக்குமூலத்தை மாற்றி உயர்நீதிமன்ற கிளையில் வாக்குமூலம் அளித்தார்.
இன்று ஆஜரான சுவாதி கடந்த வாரம் அளித்த வாக்குமூலத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கூறியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் வேறு சமூகத்தை சேர்ந்த சுவாதி என்ற பெண்ணை காதலித்தார் என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருச்செங்கோடு கோவிலுக்கு சென்றிருந்தார்.
கோகுல்ராஜ் அவருடன் அவரது தோழியும் சென்றிருந்தார் அப்போது சிலர் அந்த பெண்ணை விரட்டி விட்டு கோகுல்ராஜை கடத்திச் சென்றனர்.
உறவினர்களும்,பெற்றோர்களும்,கோகுல்ராஜை தேடி நிலையில் கிழக்கு தொட்டிபாளையம் ரயில் பாதை அருகே சடலமாக கிடந்தார்.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன
இந்தக் கொலை தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 15 நபர்களை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை மதுரைமாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த மார்ச் 8 தீர்ப்பளித்த மதுரை நீதிமன்றம் முதல் குற்றவாளியான யுவராஜ் உட்பட 10 நபர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது மற்ற 5 நபர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.
நீதிமன்றத்தில் ஆஜரான காதலி
இந்த தண்டனையை எதிர்த்து 10 நபர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த 5 நபர்களின் விடுதலையை ரத்து செய்து அனைவருக்கும் தண்டனை வழங்க கோரி கோகுல்ராஜின் தாய் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி நீதிபதிகள் உத்தரவு படி நீதிமன்றத்தில் இன்று காவல்துறையினர் ஆஜர்படுத்தினார்கள்.
காதலி செய்த நம்பிக்கை துரோகம்
Gokulraj murder case big news news 2022 அப்போது புத்தகம் மற்றும் குழந்தை மீது சத்தியம் செய்து உண்மையை கூறுங்கள் என நீதிபதிகள் கேட்டார்கள்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நீதிபதிகள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார்கள்.
பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது ஞாபகம் இல்லை என்று தெரிவித்தார்.
காவல்துறையினர் கூறியதால் சொன்னேன் எழுதிக் கொடுத்தேன் என்று வாக்குமூலத்தை மாற்றி அளித்தார்.
உண்மையை மறைத்த காதலி
Gokulraj murder case big news news 2022 குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு காதலி தன்னுடைய காதலனை தெரியாது என்று பச்சைப் பொய் நீதிமன்றத்தில் தெரிவித்தார் இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
சிசிடிவி பதிவில் இருப்பது நீங்கள் என்று அனைவருக்கும் தெரியும் உங்கள் முகம் நன்றாக தெரிகிறது.
நீங்கள் நடந்து செல்கின்ற வீடியோ இருக்கிறது அதை பார்த்து நான் இல்லை என்று பொய் சொல்கிறாய்.
உனக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுக்கிறோம் நன்கு யோசித்து விட்டு சாட்சி சொல்லும்படி கடந்த வாரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Gokulraj murder case big news news 2022 இன்று காவல்துறையினரின் பலத்த பாதுகாப்போடு சுவாதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் அப்போது சுவாதி கடந்த வாரம் சொன்ன பதிலை மட்டும் சொன்னார்.
இதனால் கோபம் அடைந்த நீதிபதி இந்த தீர்ப்பில் நீங்கள் சொல்லும் சாட்சியை வைத்த அடிப்படையாக தீர்ப்பு வழங்கினால் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது இருக்கும் நம்பிக்கை முழுவதும் மறைந்துவிடும்.
Gokulraj murder case big news news 2022 வீடியோவில் இருப்பது நீங்கள் என்பது அனைவருக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும் நீங்கள் குற்றவாளியை காப்பாற்றுவதற்கு நீங்கள் பொய் சொல்கிறீர்கள்.
இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உங்கள் மீது பாயும் என அதிரடியாக நீதிபதி உத்தரவிட்டார்.