Google pay new update in India details 2021
இனி கூகுள் பே செயலில் இதையும் செய்யலாம் வந்துவிட்டது புதிய அம்சம் கிரெடிட் அட்டை வைத்துவிட்டு அலைய வேண்டாம்.
இணையதள பரிவர்த்தனை என்பது இப்பொழுது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது, இணையதளம் மூலம் பணம் செலுத்துவது என்பது இந்தியாவில் இப்பொழுது தவிர்க்க முடியாத அம்சங்களாக இருக்கிறது.
அதில் கூகுள் பே செயலி (Google Pay Processor) மிகவும் பிரபலமாக உள்ளது, இதன் மூலம் தங்கள் நண்பர்களுக்கு, வணிகர்களுக்கும், ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் எளிமையாக பிடித்தமான தொகையை பரிவர்த்தனை செய்யலாம்.
சிறிய கடை முதல், பெரிய நிறுவனங்கள் வரை வாசலில் க்யூ ஆர் கோட் (QR CODE) வைத்து பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
கடன் அட்டை களுக்கு ஆதரவு (Support for credit cards)
கூகுள் பே டெபிட் கார்டுகளை (Debit card) மட்டும் ஆதரித்து வந்த நிலையில் தற்போது கிரெடிட் கார்டுகளை (Credit card) ஆதரித்து வருகிறது.
கூகுள்-யை பயன்படுத்தி ஆதரிக்கப்பட்டகிரெடிட் கார்டுகள் மூலம் இனி பரிவர்த்தனை செய்யும் போது யுபிஐ மூலமாகவே பிசிகல் கார்ட் பயன்படுத்தி பணம் செலுத்தலாம், தங்கள் வங்கி கணக்கின் மூலம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடன் தொகை வரையறுக்கப்படும் இதில்.
ஸ்மார்ட்போன் பயனாளர்கள்
இப்பொழுது கூகுள் பே-ல்(Google Pay) கிரெடிட் கார்டு ஆதரவு இந்தியாவில் சில குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
இந்த அம்சம் அடுத்த சில நாட்களில் ஐஓஎஸ் (IOS) பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது அதேபோல் சில பயனாளர்கள் அப்டேட்(Update) பெற்றிருந்தாலும்கூட கூகுள் பே பயன்பாட்டில் இன்னும் சேர்க்கவில்லை என தெரிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.
கூகுள் பே சமீபத்திய புதுப்பிப்பு(Google Pay latest update)
நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட் போனில் கூகுள் பே (Google Pay) சமீபத்திய அப்டேட்டை (Latest update) பயன்படுத்துகிறார்களா என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
கூகுள் பிளே ஸ்டோர் சென்று கூகுள் தளத்தில் சோதனை செய்து பார்க்கலாம் இதில் தங்களது சுயவிவரப் படத்தை கிளிக் செய்து கட்டண முறைகள் என்ற தேர்வுகள் செல்லவேண்டும்.
பின்பு வங்கி கணக்கை இணைக்க என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும் கிரெடிட் கார்டு (Credit card) இணைக்க கூகுள் கணக்கில் பயன்படுத்தும் அதே தொலைபேசி எண்ணை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கிரெடிட் கார்டு (Credit card)
இந்தியாவில் முன்னணியில் இருக்கும் வங்கிகளில் கிரெடிட் கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் வழங்கப்படுகிறது என்பதால் இது கூகுள் பே-ல் எளிதாக இணைந்து கொள்ள முடியும்.
மரச்செக்கு எண்ணெய் என்று ஸ்பெஷல் வகைகள் விளம்பரப்படுத்தப்படுகிறது
ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டு (Axis Bank Credit Card)
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிரடிட் கார்டு (State Bank of India Credit Card)
எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார் (HDFC Bank Credit Card)
இன்டஸ் இண்ட் வங்கி கிரெடிட் கார்டு (Indus Ind Bank Credit Card)
பெடரல் வங்கி கிரெடிட் கார் (Federal Bank Credit Card)
ஆர்பிஎல் வங்கி கிரெடிட் கார் (RPL Bank Credit Card)
எஸ்பிஐ வங்கி கிரெடிட் (SBI Bank Credit Card) காடுகளுக்கு சேவைகளை கூகுள் பே அளிக்கிறது.
Click here to view our YouTube channel
கட்டணத்தையும் செலுத்தலாம்
கிரெடிட் கார்டுகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை கூகுள் பே செயலி மூலம் வங்கிகளுக்கு செலுத்தி விடலாம் இதற்கு கூகுள் நிறுவனம் எந்தவொரு கட்டணத்தையும் வசூலிப்பதில்லை இது முற்றிலும் இலவசம்.
8 Best Ways to Prevent Hair Loss in tamil
கூகுள் பே செயலி மூலம் விருப்பப்படும் நபர்கள் தங்களுடைய பணத்தை இதில் முதலீடு செய்து கொள்ளலாம், இந்தியாவில் இருக்கும் அனைத்து முன்னணி வங்கிகளின் இணையாக இதற்கு வட்டி விகிதம் அளிக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.