இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது சலுகை விலையில்…..!(Google Pixel 4A launched in India)
கூகுள் நிறுவனம் இன்று இந்தியாவில் தனது கூகுள் பிக்சல் 4A ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. மற்றும் அதன் விலை விற்பனை தேதியை வெளியிடப்பட்டுள்ளது.
ப்ளிப்கார்ட் மூலம் சலுகை விலையில் .
கூகுள் பிக்சல் 4A இணையதளம் மூலம் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 16 முதல் விற்பனை நடைபெறும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய வடிவமைப்பில்.
ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு இணையான மாடல்களை சீன நிறுவனங்கள் வெளியிடும். கூகுள் நிறுவனம் எப்பொழுதும் தனித்தன்மையான ஸ்மார்ட் போன் மாடல்களை வெளியிடும் மற்றும் பல்வேறு வகையான தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தும்.
கூகுள் பிக்சல் 4A ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓ எஸ் மூலம் இயக்கப்படுகிறது மேலும் இதில் ஆண்ட்ராய்டு ஓ எஸ் 11 அப்டேட் செய்து கொள்ள முடியும்.
கேமரா அம்சம் மற்றும் டிஸ்ப்ளே விவரங்கள்.
கூகுள் பிக்சல் 4A ஸ்மார்ட்போன் கேமரா குறித்து விரிவாக பார்க்கையில் பின்புறம் 12 எம்பி கேமரா 1.4 μm பிக்சல் அகலம் லென்ஸ் உடன் வருகிறது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் எளிதாக புகைப்படங்கள் எடுக்க ஆஸ்ட்ரோஃபோட்டோகிராஃபி கொண்ட நைட் சைட் பயன்முறையானது, தெளிவான புகைப்படங்களை எடுக்கும்.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, மற்றும் 5.81 இன்ச் அளவு முழு எச்டி பிளஸ் ஓ எல் இ டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. பின்புறத்தில் சதுர வடிவமைப்பில் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இதனுடைய பிங்கர் பிரிண்ட் பின்புறத்தில் அமைந்துள்ளது.
சிபியு மற்றும் மெமரி திறன்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி (ஆக்டா கோர் (2×2.2 ஜிகாஹெர்ட்ஸ் கிரியோ 470 தங்கம் & 6×1.8 ஜிகாஹெர்ட்ஸ் கிரியோ 470 வெள்ளி); அட்ரினோ 618 ஜி.பீ.
இந்த ஸ்மார்ட்போன் ஒரே மெமரி திறனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வசதி கொடுத்துள்ளது கூகுள் நிறுவனம்.
ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையில்.
மிகவும் சக்தி வாய்ந்த கூகுள் பிக்சல் 4A ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்புபெறவேண்டுமென்று. ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையில். விற்பனை செய்யப்படுகிறது.
Flipkart Big Billion Day sale in India 2020
இதற்கு முன்பு கூகுள் நிறுவனம் இந்தியாவில் வெளியிட்ட ஸ்மார்ட்போன்களின் விலை உச்சத்தைத் தொடும். இதனால் கூகுள் நிறுவனத்தால் இந்தியாவின் சந்தையை அதிக அளவில் பிடிக்கமுடியவில்லை .இதனுடைய விலை ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ளது. twitter facebook,