புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளம் சிறந்த அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது(Great features released For Android 12 beta)
கூகுள் நிறுவனம் தற்போது ஆண்ட்ராய்ட் 12 இயங்குதளத்தை வெளியிட்டுள்ளது அதில் பல்வேறு சிறந்த அம்சங்கள் முன்பை விட இப்பொழுது இடம்பெற்றுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர தொழில்நுட்பம் நிகழ்வுகள் 18/05/2021 அன்று நடைபெற்றது இதில் பல முக்கிய அறிவிப்புகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது GOOGLE I/O தொழில்நுட்ப நிகழ்வில் ஆண்ட்ராய்டு 12 புதிய இயங்குதளம் பற்றிய முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளது அதன்படி பல்வேறு சிறந்த அம்சங்கள் இந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இடம் பெற்றுள்ளன என அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் அப்டேட் பெற்ற ஸ்மார்ட்போன் மூலம் இனிவரும் காலங்களில் பிஎம்டபிள்யூ காரை கூட லாக் செய்யவும், அன்லாக் செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் உள்ள அப்ளிகேஷன் பயன்பாடுகளின் நிறம் வடிவமைப்பு போன்றவற்றில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Oxygen os, one ui இயங்குதளங்களில் உள்ள பல அம்சங்களை விட இந்த 12 ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பல்வேறு சிறந்த புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது மேலும் லாக் ஸ்கிரீன் நோட்டிபிகேஷன்களில் கூட பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர் பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மிகப்பெரிய லாக் ஸ்கிரீன் கடிகாரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்ட்ராய்டு 12 புதிய இயங்குதளத்தில் நீங்கள் நோட்டிபிகேஷன்களை கவனிக்கத் தவறினால் அது கடிகாரம் அருகில் பிரத்தியோகமாக முறையில் காண்பிக்கப்படும். மேலும் ஐகான்கள் முன்பை விட இப்பொழுது பெரிதாக இருக்கிறது தேதி மற்றும் கடிகாரம் உள்ளிட்டவை டிஸ்ப்ளேவில் முன்புறத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறிப்பாக ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில் புதிதாக பிரைவசி இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன குறிப்பாக இது ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களை ஆண்ட்ராய்டு 12 இயங்கு தளத்தில் கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் மூன்று வகைகளில் பயன்படுத்த முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் தற்சமயம் ஆண்ட்ராய்டு 12 பீட்டா வெர்ஷன் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இது முழுமையாக அறிமுகம் செய்யும் பொழுதுதான் நீங்கள் எதிர்பார்த்த அந்த பல்வேறு சிறந்த அம்சங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
அண்மையில் google. Pay செயலி சர்வதேச பணபரிமாற்ற வசதியை அறிமுகம் செய்தது இந்த வசதி கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ளவகையில் இருக்கும் என்றுதான் கூற வேண்டும். அதாவது சர்வதேச பணப்பரிமாற்ற வசதி என்னவென்றால் அமெரிக்காவிலிருந்து இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு எளிதாக பண பரிமாற்றம் செய்ய முடியும் google. Pay செயலில் சர்வதேச பணப்பரிமாற்றம் வசதி மிக எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் வழங்கப்பட்டிருக்கிறது.
விலை குறைவுதான் சிறப்பம்சங்கள் அதிகம் விரைவில் வெளிவருகிறது ரெட்மி நோட் 10 ப்ரோ 5 ஜி.
இதற்கு முன்பு உள்நாட்டு சேவைகளை மட்டும் வழங்கி வந்த கூகுள் பே செயலி தற்போது வர்த்தகத்தையும் சேவைகளையும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வெளிநாட்டு பண பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.