Groceries in the ration shop in tn best 2022

Groceries in the ration shop in tn best 2022

நியாயவிலை கடைகளில் பல்பொருள் அங்காடி விரைவில் திறக்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு..!

மார்கெட்டுக்கு இணையாக நியாய விலை கடைகளில் மளிகை பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு புதிய முடிவு செய்துள்ளது.

ஏழை எளிய மக்கள் பசியோடு இருக்கக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் மத்திய அரசின் மானியத்துடன் மலிவான விலையில் நியாய விலை கடைகளில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படலாம்.

தமிழ்நாட்டில் 35,323 நியாயவிலைக் கடைகள் உள்ளன இதில் 10,279 பகுதி நேரக் கடைகள் அடங்கும்.

முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவிக்கு வந்தபிறகு நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக வழங்க தீவிரமான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கு அவ்வப்போது நியாயவிலை கடைகளில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் திடீர் என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் மக்களிடம் குறைகளை கேட்டு இன்னும் என்னென்ன கூடுதல் சிறப்பான வசதிகளை செய்து தர முடியும் என்று கருதுகிறார்கள்.

Groceries in the ration shop in tn best 2022

நவீனப்படுத்துதல்

அதனடிப்படையில் நியாயவிலைக் கடைகளை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

நியாயவிலைக் கடைகளை நவீனப்படுத்தும் வகையில் இன்னும் என்னென்ன வசதிகளை தொழில்நுட்ப முறையில் கொண்டுவரலாம் என்ற பட்டியல் தயாரித்து உள்ளார்கள்.

Groceries in the ration shop in tn best 2022

மளிகை பொருட்கள் கொண்டு வரலாம்

Groceries in the ration shop in tn best 2022 பொதுவாக நியாய விலை கடைகளில் தற்போது அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய், வழங்கப்படுகிறது.

சில கடைகளில் இதனுடன் டீ தூள் உப்பு ஆகியவை விற்கப்படுகிறது.

எருமை மாடு வளர்ப்புக்கு ரூ 7 லட்சம் வரை மானிய கடன் முழு விவரம்..!

ஆனால் சிந்தாமணி போன்ற கூட்டுறவு கடைகளில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது, கடையின் இடவசதியை பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இடவசதி உள்ள நியாயவிலை கடைகளில், மளிகை பொருட்களை விற்பனை செய்யவும் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Best money saving plan tips in life 2022

பல்பொருள் அங்காடிகளில் விற்பது போன்ற குறிப்பிட்ட நியாயவிலை கடைகளை தேர்ந்தெடுத்து அங்கு மளிகை பொருட்களை பாக்கெட் போட்டு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

புதிய கடைகள் திறப்பு

பொது மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து இது விரிவுபடுத்தப்படும், ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காக 20 முதல் 25 நியாயவிலைக் கடைகள் தேர்ந்தெடுத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிப்பு.

Leave a Comment