Group 2 exam useful temporary answer sheet
குரூப் 2 குரூப் 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன..!
தமிழ்நாடு முழுவதும் சுமார் 117 இடங்களில் 4,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வாளர்கள் தேர்வு எழுதினர்.
தற்போது இந்த தேர்வுக்கான சரியான விடைகள் எது என்பது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளில் ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்வு நேர்காணல் பதவிகள் மற்றும் நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு.
கடந்த 21ஆம் தேதி தேர்வு நடந்தது இதில் தமிழ் தேர்வு எழுத விரும்புவோருக்கு தமிழில் 100 கேள்விகள் பொதுஅறிவு 75 கேள்விகள்,ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும்.
இதுவே ஆங்கிலத்தில் தேர்வு எழுத விரும்பும் நபர்களுக்கு பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள், பொதுஅறிவு 75 கேள்விகள்,ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும்.
இந்தத் தேர்வின் மொத்த மதிப்பெண் 300க்கு எடுத்துக் கொள்ளப்படும் அதற்கு 90 க்கு அதிகமான மதிப்பெண் பெறுவது அடிப்படை.
இந்த தேர்வின் முடிவுகள் வருகின்ற ஜூன் மாதத்தில் வெளியிடப்படும்.
முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும் டிசம்பர் 2022 ஜனவரி 2023 மாதங்களில் கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்வின் தற்காலிக விடைத்தாள் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 7,382 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை வருகின்ற ஜூலை மாதம் 24ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடத்துகிறது.
இரண்டு ஆண்டுகள் கழித்து
Group 2 exam useful temporary answer sheet கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளாக அரசு பணிகளுக்கு எந்த ஒரு தேர்வும் நடைபெற வில்லை.
அது மட்டுமில்லாமல் அரசுத்துறைகளில் இப்பொழுது ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
TNPSC Group 4 VAO தேர்வுக்கான சிலபஸ் மாற்றம் அதற்கான அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்..!
ஆனாலும் அரசு குறைந்த அளவிலேயே காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.
இப்பொழுது வருகின்ற ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
இதற்கு தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் 21.80 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளார், அதாவது ஒரு பணியிடத்திற்கு 3,000 நபர்கள் என்ற விகிதத்தில் போட்டி கடுமையாக மாறியுள்ளது.