Gundar thaduppu act full details in tamil 2022
குண்டர் தடுப்பு சட்டம் என்றால் என்ன ஏன் இது தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது..!
இப்பொழுது அதிக அளவில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது காரணம் இதற்கு சமூக வலைதளம் ஒரு முக்கியமானதாக இருக்கிறது.
குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தலைவர்கள் மீது அவதூறாக பொய்ச் செய்தி பரப்பி, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது வரையிலான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிய நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள்.
குண்டர் தடுப்பு சட்டம் என்றால் என்ன யாரெல்லாம் இதன் கீழ் கைது செய்ய முடியும், கைதானவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனைகள் வழங்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது தான் இந்த குண்டர் தடுப்பு சட்டம் குறிப்பாக சட்டவிரோதமாக.
கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, வன்முறையைத் தூண்டுவது, கடத்தல் காரியங்களில் ஈடுபடுவது, வழிப்பறியில் ஈடுபடுவது, போன்ற தவறான செயல்களை.
செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், கடுமையான தண்டனைகளை வழங்க, ஏதுவாக சிறந்த வலுவான ஒரு சட்டத்தை கொண்டுவர அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் விரும்பினார்.
அனுபவமிக்க அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் உடன் நடத்திய தீவிரமான விரிவான ஆலோசனைக்கு பிறகு ஒரு சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்தார் எம்ஜிஆர் அவர்கள்.
அந்த சட்டத்தின் முழுப்பெயர் சட்டவிரோதமாக மது தயாரிப்பது, போதைப்பொருள் கடத்துவது, வன்முறையைத் தூண்டுவது, சட்டவிரோதமான பொருள் கடத்துவது, நில அபகரிப்பு, போன்ற செயல்களை செய்யும் நபர்கள் குண்டர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்த வன்முறையாளர்கள் குண்டர்கள் என்று எளிமையாக சொல்லி குண்டர் சட்டம் என்று இந்த சட்டம் அழைக்கப்படுகிறது.
கடந்த 2006ஆம் ஆண்டில் திரையுலகினர் வேண்டுகோளுக்கு இணங்க திரைப்படங்களை திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்வது, திருட்டு விசிடி யில் பதிவேற்றம், செய்வது விற்பனை செய்வது போன்ற குற்றங்களை செய்வோர் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டார்கள்.
சட்டப்பிரிவுகள் (16 17 22 45) எதையாவது செய்யக்கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவை சேர்ந்தவர் என்று கருதினால் அவர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.
குறிப்பாக நகர்ப்புறங்களில் காவல்துறை ஆணையர், கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியரும், இந்த சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இந்த சட்டத்தின் கீழ் ஒரு நபர் கைது செய்யப்பட்டால் அவர் குறைந்தது 12 மாதங்கள் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டும் அவரிடம்.
எந்தவிதமான விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லை அவர்களை விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.
உங்கள் கிட்னி ஆரோக்கியமாக இல்லை என்பதை காட்டும் அறிகுறிகள்
அதே நேரத்தில் ஒரு நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் விடுவிக்கலாம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள.
நிபந்தனைகளை அவர் மீறினால் மேலும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒரு நபர் தன் மீது குற்றம் இல்லை என்று நிரூபிக்க விரும்பினால் அவர் சார்பில் வழக்கறிஞர் அமைக்க முடியாது.
Best 5 Omega nutrition 3 rich fishes in tamil
அவர் சார்பாக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் முறையிட்டு குழுவை அமைத்து அதற்கான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
அந்த விசாரணை குழுவில் ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி ஆகியோர் இருக்க வேண்டும்.
இந்தக் குழு கொடுக்கும் அறிக்கையை தொடர்ந்து அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும்.