Hair growth natural oil best tips 2023

Hair growth natural oil best tips 2023

வழுக்கை விழுந்த தலையில் வேகமாக முடி வளர இந்த மூலிகை எண்ணெய் பயன்படுத்தினால் போதும்..!

என்ன செய்தாலும் முடி வளரவில்லை இதற்கு இயற்கையில் கிடைக்கும் மூலப் பொருட்கள் மட்டுமே சரியான தீர்வை கொடுக்கும்.

செயற்கையில் லேசர் சிகிச்சை மூலம் தலையில் முடி செயற்கையாக நடப்படும் ஆனால் இயற்கையில் சில மூலப் பொருட்களை வைத்து சிகிச்சை செய்தால் முடி வளர ஆரம்பிக்கும்.

கருகரு என்று நீளமாக வளரும் இந்த கட்டுரையில் இயற்கையான முறையில் தலை முடி வளர்ச்சி பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

Hair growth natural oil best tips 2023

மூலிகை எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம்

வேப்பிலை

மருதாணி இலை

நெல்லிக்காய்

வெந்தயம்,

கருசீரகம்

கறிவேப்பிலை

Hair growth natural oil best tips 2023 முதலில் பெரிய நெல்லிக்காய் எடுத்துக் கொண்ட அதில் இருக்கும் சதையை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும், அதன்பின் சின்ன வெங்காயம் தோல் சிவி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு பொருளையும் தண்ணீர் சேர்க்காமல் அப்படியே அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும், அதனை வடிகட்டி தண்ணீர் மட்டும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Hair growth natural oil best tips 2023 அதன்பின் வெந்தயம், கருஞ்சீரகம், இரண்டும் 100 கிராம் எடுத்து அதனையும் தனியாக அரைத்து பொடி போல் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் கருவேப்பிலை, மருதாணி இலை, வேப்ப இலை, சோற்றுக்கற்றாழை, எடுத்துக்கொண்டு நன்றாக மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

Hair growth natural oil best tips 2023

பிறகு கடாயில் 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் நாம் வடிகட்டி வைத்துள்ள நெல்லிக்காய் மற்றும் சின்ன வெங்காயம் சாறை ஊற்ற வேண்டும்.

Hair growth natural oil best tips 2023 இந்த தேங்காய் எண்ணெயில் அந்த சாறை ஊற்றுவதால் மிதமான தீ வைக்க வேண்டும், அதன் பின் அது நிறம் மாறி வரும் அதில் அரைத்து வைத்துள்ள சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

New 10 best hair style list in india in tamil

அதன்பிறகு எண்ணெனை நிறம் மாறி கருமை நிறத்தை அடையும் வரை கொதிக்க விடவும், எண்ணெனை மிதமான தீயில் இருக்க வேண்டும்.

அதன்பிறகு வெந்தயம், கருஞ்சீரக பொடி சேர்த்து அதில் கொதிக்க விடவும் கொஞ்ச நேரம் அப்படியே இருக்க வேண்டும்,அது நன்றாக நிறம் மாறிய பின் அதனை எடுத்து ஆறவிட்டு ஒரு துணியை வைத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.

இப்போது அருமையான மூலிகை தேங்காய் எண்ணெய் தயாராகிவிட்டது இதனை ஒரு பாட்டில் எடுத்துக் கொள்ளவும்.

Top 7 best tips to get pregnant fast

தலைக்குகுளிக்க செல்வதற்கு முன்பு ஒரு மணி நேரத்திற்கு முன் நன்கு மசாஜ் செய்து தேங்காய் எண்ணெய் தலையில் தடவி சுமார் 20 நிமிடம் கழித்து அதன் பிறகு நீங்கள் சீயக்காய் போட்டு குளிக்கலாம்.

இயற்கையான மூலப் பொருட்களை பயன்படுத்தி தலைக்கு தேய்த்து குளிக்கலாம்,இதனை தினமும் தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் உடல் சூடு குறையும் மன அழுத்தம் குறையும்.

Leave a Comment