Health effects of uncontrolled fats on the body
உங்கள் உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்பை நீங்கள் கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டால் அது என்ன மாதிரியான ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா..!
மனித உடலுக்கு மற்ற ஊட்டச்சத்துக்களை போலவே நல்ல கொழுப்பு தேவைப்படுகிறது.
ஆனால் கெட்ட கொழுப்புகள் உடலில் அதிகப்படியாக கூடுவது கடுமையான உடல்நலபாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
கெட்ட கொழுப்புகள் பெரும்பாலும் அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படுகிறது,ஏனெனில் இது பொதுவாக எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது.
இருப்பினும் காலப்போக்கில் அதிக கொழுப்பு உங்கள் இருதய தமனிகளில் உருவாகி அவற்றை அடைத்துவிடும்.
இதனால் மாரடைப்பு,பக்கவாதம் போன்ற உடல் உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகள் உடனடியாக ஏற்பட்டுவிடுகிறது.
உங்கள் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை நீங்கள் கட்டுப்படுத்த தவறினால்,உங்கள் உடலுக்குள் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
கட்டுப்பாடற்ற கொழுப்புகள் உங்கள் உடலுக்குள் என்ன செய்ய முடியும் என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது முன்.
அதிக கொழுப்பின் அறிகுறிகளையும் அதன் ஆபத்துகளையும் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லதாக அமையும் உங்களுடைய ஆரோக்கியத்திற்கு.
அதிகப்படியான கொழுப்பின் அறிகுறிகள் என்ன?
அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படும் அதிகப்படியான கொழுப்பு சில நேரங்களில் உங்கள் உடல் தோற்றத்தில் அல்லது உங்களுடைய நடவடிக்கைகளில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.
உங்களுக்கு தெரியாமல் அதிகப்படியான கெட்ட கொழுப்பு அளவுகள் நீங்கள் பாதிக்கப்படும்போது ஏற்படும் சில மாற்றங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
திடீரென்று மூச்சு திணறல்
கால் மூட்டுகளில் வலி
பேச்சுகளில் தடுமாற்றம்
நடக்க முடியாமல் சிரமப்படுவது
திடீரென்று உடல் சோர்வு அடிக்கடி ஏற்படுவது
குமுட்டல்
வாந்தி
நெஞ்சு வலி
உணர்வின்மை
தோள்களில் மாற்றம்
கண்கள் சுற்றி கருவளையம் மஞ்சள் படிதல்
வயதான தோற்றம்
போன்றவை உங்கள் உடம்பில் கெட்ட கொழுப்பின் அறிகுறிகள் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
கட்டுப்பாடற்ற உயர் கொழுப்புகளால் ஏற்படும் ஆபத்துகள்
எல்டிஎல் கொழுப்பு அல்லது குறைந்த அடர்த்தி கொழுப்பு புரத கொழுப்பு இருதய தமனிகளில் அடிக்கடி படிவதால் இருதயத்திற்கு செல்லும் ரத்தத்தை தடை பண்ணுகிறது.
இதனால் இது கெட்ட கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது,இதனால் உயிர் இழப்பு என்பது திடீரென்று ஏற்பட்டுவிடுகிறது.
பக்கவாதம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள்
கட்டுப்பாடற்ற கொழுப்புகளால் பக்கவாதம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ரத்த உறைவு அல்லது வெடிப்பு தாமணி மூளைக்கு ரத்த ஓட்டத்தை தடுக்கும் போது பக்கவாதம் ஏற்படுகிறது.
நீங்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கும் போது, உடல் மற்றும் அறிகுறிகளை நீங்கள் எப்பொழுதும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
சிறுநீரக நோய் ஏற்படும்
அதிக கொழுப்பு சிறுநீரகத்தில் உள்ள தமனிகளுக்கு கடுமையான அழுத்தத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
இது சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி விடுகிறது,சில அரிதான நேரங்களில் கட்டுப்பாடற்ற கெட்ட கொழுப்புகள் சிறுநீரகத்தை முழுவதும் சேதப்படுத்தும்.
இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் சரியான நேரத்தில் சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அதிக கெட்ட கொழுப்பு உயிர் இழப்புக்கு வழிவகை செய்யும்.
மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள்
ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் இதயத்தின் செயல்பாட்டில் அதிகப்படியான பிரச்சனைகளை ஏற்படுத்தும் இது மாரடைப்புக்கு வழி வகுக்கும்.
இரத்த உறைவு இருதய தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை தடுக்கும் போது மாரடைப்பு ஏற்படுகிறது.
இன்றைய காலகட்டங்களில் 15 வயது குழந்தை கூட மாரடைப்பால் உயிரிழப்பு என்பது மிகுந்த ஒரு கடுமையான அதிர்ச்சியை மருத்துவ உலகில் ஏற்படுத்தி உள்ளது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
வாரிசுகளின் பெயரில் பட்டா மாற்றம் செய்வது எப்படி..!
இணையதளம் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி..!