Hemoglobin low symptoms and effects 2022
உடலில் ஹீமோகுளோபின் குறைவதற்கான காரணங்கள் என்ன..!
உடலில் இரத்தத்தின் அளவு சரியாக இருப்பது மிக முக்கியம் ஆனால் இப்போது இருக்கும் வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களாலும்.
உணவு முறைகளால் உடலில் ரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் வருகிறது, இந்த தொகுப்பில் உடலில் ஹீமோகுளோபின் அதாவது ரத்தத்தின் அளவு குறைவதற்கான காரணங்கள் என்ன என்று தெரிந்து கொள்ள போகிறோம் தெரிந்துகொள்ளலாம்.
மனித உடலில் ஹீமோகுளோபின் குறைவினால் ஏற்படும் நோய், அதனுடைய அறிகுறிகள் மற்றும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
ஹீமோகுளோபின் என்றால் என்ன
உடலில் ரத்த சிவப்பணுக்களில் இருக்கும் ஒரு வகையான புரதம் தான் ஹீமோகுளோபின், இது செல்களுக்கும், திசுக்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்ல உதவும்.
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நோயிலிருந்து உடலை முழுவதும் பாதுகாப்பதற்கு, ஹீமோகுளோபின் மிக மிக அவசியமாக தேவைப்படுகிறது.
பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 12 முதல் 16 வரை இருக்க வேண்டும்.
ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 14 முதல் 18 வரை இருக்க வேண்டும்.
ஹீமோகுளோபின் குறைவதற்கான காரணங்கள் என்ன
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு காரணமாக பெண்களுக்கு உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையலாம், இந்த குறைபாட்டை போக்குவதற்கு சரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரும்புச் சத்து குறைவாக உள்ள உணவை சாப்பிடும் போது வைட்டமின் b2 அளவு குறையும் இதனால் ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடும்.
அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது தேநீரில் இருக்கும் டானின் எனும் வேதிப்பொருள் 64% உடலில் இருக்கும் இரும்புச் சத்தை உறிஞ்சுகிறது, அதுபோல காபியில் இருக்கும் காபின் என்னும் பொருள் சுமார் 39% இரும்புச் சத்தை உறிஞ்சி விடுகிறது.
இதனால் ஹீமோகுளோபின் அளவு சாதாரண நிலையை விட கடுமையாக குறைந்து விடும்.
அல்சர், நீரிழிவு, வைட்டமின்-சி, குறைபாடு போன்ற காரணங்களால் ரத்தத்தின் அளவு உடலில் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
செரிமான பாதையில் ஏற்படும் நோய்கள் போன்ற காரணங்களால் உடலில் ரத்தத்தின் அளவு குறையலாம்.
குறிப்பாக கார்போனேட் பானங்கள், மது அருந்துதல், தண்ணீர் பாட்டில்கள், போன்றவற்றை அருந்துவதால் அதில் இருக்கும் நச்சுக்கள் உடலில் இருக்கும் இரும்புச் சத்தை உறிஞ்சிவிடுகிறது.
ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் ஏற்படும் அறிகுறிகள்
ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடம்பிற்கு தேவையான சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காது, இதனால் உடம்பில் நோய்கள் வர தொடங்கிவிடும்.
உடல் சோர்வு மிக அதிகமாக இருக்கும், வேலை செய்யாமல் சும்மா இருந்தாலும், உடல் சோர்வு என்பது அதிகமாக ஏற்படும்.
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும், மயக்கம், பசியின்மை, கை, கால்களில் வலி, தலைவலி, நகங்கள் வெள்ளையாக மாறுவது, சீரற்ற இதயத் துடிப்பு, போன்றவை ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் அறிகுறிகள்.
ஹீமோகுளோபின் அதிகரிக்க தேவையான உணவுகள்
பழங்களில் வீட்டில் தயாரிக்கப்பட்ட பீட்ரூட் சாறு, மாதுளை பழச்சாறு, தர்பூசணி போன்றவற்றை சாப்பிடுவது சிறந்ததாக அமையும்.
தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு புதிய வகையான.
பேரிச்சம்பழம், கருப்பு உலர் திராட்சை, அத்திப்பழம், முட்டை, ஆட்டுக்கறி ஈரல் சாப்பிடுவது, நன்றாக ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
Best Health benefits of no alcohol for 30 days
ஹீமோகுளோபின் உடலில் அதிகரிப்பதோடு இரும்புச்சத்து கட்டாயம் தேவை, அதற்கு தேவையான கீரை வகைகள், கிழங்கு வகைகள், தானியங்கள், பழங்கள், போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.