Herbal bathing powder manufacturing new tips 2
மூலிகை குளியல் பொடி தயாரிக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தங்களுடைய உடல் தோற்றத்தை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு வழி முறைகளை பின்பற்றுகிறார்கள் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் மக்கள்.
அதுவும் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள சந்தையில் கிடைக்கக்கூடிய அனைத்து விதமான பொருட்களையும் பயன்படுத்தி பார்க்கிறார்கள்.
இதை ஒரு தொழிலாக செய்யும் நபர்கள் பல்வேறு விதமான அழகு சாதனப்பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் அதிக விலையில் விற்பனை செய்கிறார்கள்.
உண்மையில் இதை வாங்கிப் பயன்படுத்துவது யாருக்கும் முழு பயன் கிடைப்பதில்லை. பயன்படுத்தியவர்கள் தங்களுடைய முகத்தை கெடுத்துக்கொண்டதுதான் அதிகம்.
முகத்தையும், சருமத்தையும், தலைமுடியையும், பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து உள்ளது, இதனை பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய முகத்தை அழகாக மாற்றலாம்.
உங்களுடைய உடல் தோற்றத்தை அழகாக மாற்றலாம் அதுமட்டுமில்லாமல் இதை நீங்கள் வீட்டில் இருந்து எளிமையாக செய்யலாம்.
தயார் செய்து விற்பனை செய்தால் அதிக லாபத்தையும் உங்களால் பார்க்க முடியும் அதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்ப்போம்.
இயற்கை குளியல் பொடி செய்ய தேவையான மூலப்பொருட்கள்
உலர்ந்த மகிழம் பூ பொடி – 200 கிராம்
கிச்சிலி கிழங்கு பொடி – 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி – 100 கிராம்
கோரை கிழங்கு பொடி – 100 கிராம்
உலர்ந்த சந்தனத் தூள் – 150 கிராம்
இயற்கை குளியல் பொடி தயாரிக்கும் முறை
மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும் அதன் பிறகு காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு நன்றாக அரைக்க வேண்டும்.
அதன் பின்பு அரைத்த கலவையை சிறிது சிறிது கட்டிகளாக செய்து நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும் குறிப்பாக இதனை நீங்கள் வெயிலில் உலர்த்தி வைத்துக் கொள்ளக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் தினமும் குளிப்பதற்கு முன் அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் இதனை கலந்து முகத்தில் பூசிக் கொண்டு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்.
இதனை நீங்கள் பயன்படுத்திய பிறகு முகத்தில் அரை மணி நேரம் வரை சோப்பு போடக்கூடாது இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகம் பளபளப்பாக வெண்மையான தோற்றமளிக்கும்.
அது மட்டுமில்லாமல் முகத்தில் இருக்கும் கரும் புள்ளி,கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையங்கள், முகப்பரு, உள்ளிட்டவை நீங்கிவிடும்.
இயற்கை குளியல் பொடி இன்றைய சந்தை மதிப்பு ஒரு பாக்கெட்டுக்கு 20 கிராம் என்ற அளவில் ரூபாய் 80 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
குளியல் பொடி செய்ய தேவையான மூலப்பொருட்கள்
பாசிப்பருப்பு – 500 கிராம்
கோரைக்கிழங்கு – 200 கிராம்
கார்போக அரிசி – 200 கிராம்
சந்தனத்தூள் – 300 கிராம்
அகில் கட்டை – 200 கிராம்
வெட்டி வேர் – 200 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்
சோம்பு – 100 கிராம்
ஏலரிசி – 200 கிராம்
விலாமிச்சை – 200 கிராம்
தும்மராஷ்டம் – 200 கிராம்
கோஷ்டம் – 200 கிராம்
இந்த பொருட்கள் அனைத்தும் உங்கள் ஏரியாவில் இருக்கும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
இந்த அனைத்து மூலப் பொருட்களையும் தனித்தனியாக காய வைத்துக் கொள்ளுங்கள், அதன் பிறகு தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
தினமும் நீங்கள் குளிக்கும் போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல் செய்து சோப்புக்கு பதிலாக இதனை நீங்கள் பயன்படுத்தி வந்தால் சரும நோய்கள் அனைத்தும் குணமாகிவிடும்.
ஒருவேளை உங்களுக்கு தொழில் செய்யவேண்டும் என்று யோசனை இருந்தால் ஒரு பாக்கெட்டுக்கு குறைந்தது 150 கிராம் என்று ஒரு பாக்கெட் 130 முதல் 180 ரூபாய் வரை சந்தையில் விற்பனை செய்யலாம் இதன் மூலம் உங்களால் அதிக லாபம் பெற முடியும்.
இந்த இயற்கையான குளியல்பொடி, இயற்கையான முறையில் தயார் செய்வதால் கண்டிப்பாக அனைத்து நபர்களும் விரும்பி வாங்கி பயன்படுத்துவார்கள்.
முடி கொட்டும் பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வு
இது சிறு குறு தொழில் என்றாலும் அதிக லாபத்தை தரக்கூடியது இது ஒரு சிறந்த தொழிலாக விளங்குகிறது இன்றைய காலகட்டங்களில் இயற்கை முறையில் செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் அதிக விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
Click here to view our YouTube channel
இந்தத் தொழிலை நீங்கள் எளிமையாக வீட்டில் இருந்தபடியே செய்யலாம், அது மட்டும் இல்லாமல் உங்களிடம் இருக்கும் சமூக வலைதளம் மூலம் விளம்பரம் செய்து உங்களுடைய விற்பனை அதிகரிக்கலாம்.
Prawn farming business full details 2021
அழகான முறையில் பேக்கிங் செய்து அருகில் இருக்கும் மளிகை கடைகள், மருந்து விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடி, உள்ளிட்ட இடங்களில் நீங்கள் விற்பனை செய்தால் உங்களுடைய தொழிலில் அதிக அளவில் வளர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.