High in fiber foods for dementia best 3 tips
மறதி நோய் உள்ளவர்களுக்கு நலம் தரும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் என்ன..!
மறதி நோய் என்பது ஒருவருடைய அறிவாற்றலுடன் கூடிய, செயல்பாடுகளான சிந்தனை செய்வது, நினைத்து பார்ப்பது மற்றும் பகுத்தறிவு, போன்றவற்றை பாதித்து அவருடைய அன்றாட கடமைகளை செய்யவிடாமல் தடுக்கிறது.
மறதி நோய் உள்ளவர்களுக்கு பொதுவாக காணப்படும் சில அறிகுறி என்னவென்றால் நினைவாற்றல் இழப்பு ஆகும்.
எனினும் நினைவாற்றல் இழப்பிற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது.
மறதி நோய் மட்டுமே நினைவாற்றல் இழப்பிற்கு எப்பொழுதும் காரணமாக இருந்ததில்லை, ஆனால் நினைவாற்றல் இழப்பு என்பது மறதி நோயின் பொதுவான முதல் அறிகுறியாகும்.
மறதி நோய்க்கு நார்ச்சத்து மிகுந்த உணவுகள்
கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து என்ற இரண்டு வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.
கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இடையில் மாற்றங்கள் ஏதாவது இருக்கிறதா,என்பதை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தார்கள்.
பருப்பு மற்றும் ஓட்ஸ் போன்ற உணவுப் பொருட்களில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
மனித குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அது மட்டுமில்லாமல் மனித உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளையும் வழங்குகிறது.
முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பிற உணவுகளில் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன, அவை உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன.
கரையாத நார்ச்சத்து களைவிட, கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் ஞாபக மறதி நோய்யேடு மிக உறுதியான தொடர்பு கொண்டிருக்கிறது, என்பதை மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள்.
நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள உணவுகள்
High in fiber foods for dementia நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மறதி நோய் வருவதை குறைப்பதோடு மற்ற நோய்களையும் தடுக்கிறது.
குறிப்பாக இதய சம்பந்தமான நோய்கள், உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய்,போன்ற நோய்கள் வரும் வாய்ப்பை முற்றிலும் குறைக்கிறது.
நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள் பழம், வாழைப்பழம், ப்ராக்கோலி,முளைக்கட்டிய பயிர்கள், தானியங்கள், பருப்பு வகைகள்.
தக்காளி, முட்டை கோஸ், கீரை, கொண்டைக்கடலை, ஓட்ஸ், பாதாம்,சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மற்றும் டார்க் சாக்லேட், போன்றவை அதிகம் நார்ச்சத்து நிறைந்த உணவுகள்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றங்கள்
High in fiber foods for dementia மறதி நோய் உள்ளவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள உணவுகள் பல வழிகளில் பல்வேறு நன்மைகளை செய்யும்.
அதாவது நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவதால் குடல் இயக்கம் சீரடைகிறது, உடல் நன்றாக இயங்க செய்யும், கொழுப்பின் அளவு குறையும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும், உடல் பருமன் குறைய தொடங்கும், மற்றும் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும்.