Hollow block stone make and best price 2022

Hollow block stone make and best price 2022

ஹாலோபிளாக் கற்கள் தயாரிப்பு மற்றும் வியாபாரம் சுயதொழில்..!

செங்கல்லுக்கு அடுத்தபடியாக இப்போது சிமெண்ட்(ஹாலோபிளாக் கற்கள்) செங்கல் தயாரிக்கும் முறை அதிக அளவு கட்டிடங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாக இப்போது இந்த தொழிலுக்கு வளர்ச்சி என்பது அபரிமிதமாக இருக்கிறது.

எனவே இந்த தொழிலை நீங்கள் செய்தால், அதிகமான வருமானம் பெற முடியும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

தேவையான மூலப்பொருட்கள்

தண்ணீர்

ஜல்லி

சிமெண்ட் (ஓபிசி)

கிரஷர் மண் (பவுடர் போலில்லாமல் குருணை போல் நன்றாக) இருக்க வேண்டும்

தயாரிக்கும் முறை எப்படி

சிமெண்ட் 4 சட்டி (ஒரு மூட்டை) ஜல்லி 9 (சட்டி) கிரஷர் மண் 6 சட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.

தேவையான அளவு தண்ணீரை தயாராக வைத்திருக்க வேண்டும் இதற்கு.

மிக்ஸர் இயந்திரத்தை இயக்கி அதில் சிமென்ட் 1 சட்டி, ஜல்லி 2 சட்டி, கிரஷர் மண் 2 சட்டி ஒரு வாளி தண்ணீர், ஆகியவற்றை வரிசையாக அதில் கொட்ட வேண்டும், மீண்டும், அதே அளவில் தொடர்ந்து கட்ட வேண்டும்.

இவை அனைத்தும் கொட்டிய 5 நிமிடத்துக்குள் கலவையாகும் மாறிவிடும், அவற்றை டிராலியில் கொட்டி, ட்ராலியை ஹைட்ராலிக் இயந்திரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இந்த ஹைட்ராலிக் இயந்திரம் நகரம் தன்மை உடையது அதில் உள்ள ஹாலோபிளாக் அச்சு தரையில் பதிந்திருக்கும்.

அச்சுக்குள் கலவையை கொட்டி அச்சில் உள்ள கலவையை சுமார் 8 முறை ஹைட்ராலிக் பிரஷர் மூலம் இடித்து நெருக்கினால் ஹாலோபிளாக் கட்டி உருவாகிவிடும்.

ஹாலோபிளாக் கட்டிய பிடித்துள்ளது அச்சு விட்டு வெளியேறும், இயந்திரம் தானாக அடுத்த அச்சு பதிக்க நகர்ந்து சென்று விடும்.

இந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஒவ்வொரு முறையும் 5 கற்கள் தயாராகும்.

ஹாலோபிளாக் கற்கள் (சிமெண்ட் செங்கல்) 4 மணி நேரத்தில் சுத்தமாக காய்ந்துவிடும்.

எனினும் 24 மணி நேரம் அதே இடத்தில் வைத்திருக்கவேண்டும் பின்னர் அவற்றை வேறு இடத்தில் அடுக்கி 7 நாள் 3 வேளை தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும்.

பின்னர் 3 நாள் காயவைத்தால் விற்பனைக்கு தயாராகிவிடும்.

Hollow block stone make and best price 2022

 

மூலப் பொருள் கிடைக்கும் இடம்

கிரஷர் மண், சிமென்ட், ஜல்லி கற்கள், ஆகியவை எளிதில் கிடைக்கும். குறைந்த தூரத்திற்குள் உள்ள இடங்களில் இருந்து வாங்கினால், இதற்கு போக்குவரத்து செலவுகள் குறையும்.

இந்தத் தொழிலில் கிடைக்கும் வருமானம்

4 இன்ச் அளவுகள் (ஹாலோபிளாக் கல்) 13 முதல் 14 கிலோ எடைக் கொண்டது.குறைந்தபட்சம் ரூபாய் 18 க்கு விற்பனை செய்யலாம்.6 இன்ச் கள் 19 கிலோ அல்லது 20 கிலோ ரூபாய் 23 க்கும் 8 இன்ச் கள் 25 கிலோ 27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தேவையான முதலீடு எவ்வளவு

Hollow block stone make and best price 2022  இந்தத் தொழிலை தொடங்குவதற்கு முதலீடாக குறைந்தபட்சம் 10,00,000/- ரூபாய் கையிருப்பு வேண்டும்.

இதற்கு அரசாங்கம் வழங்கும் மானியங்கள் என்ன

Hollow block stone make பிரதான் மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த தொழில் வருவதால் மூன்றரை லட்சம் ரூபாய் வரை மானியம் பெற்றுக்கொள்ளமுடியும்.

மானியத் தொகையானது இந்த தொழிலுக்காக வாங்கிய கடன் கணக்கில் வரவு வைக்கப்படும்.

மூன்று வருடத்திற்குப் பிறகு நான்காவது ஆண்டின் தொடக் கத்திலிருந்து கடன் தொகை சுமார் ஆறு லட்சம் பிடித்தம் செய்யப்படும்.

Hollow block stone make and best price 2022

 

இயந்திரங்கள் கிடைக்கும் இடங்கள்

இந்த ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரம் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது, கோவை, உடுமலைப்பேட்டை, போன்ற பகுதிகளில் நேரடியாக ஆர்டர் கொடுத்து தயாரித்து வாங்கிக் கொள்ளலாம்.

கற்களின் அளவுகள் என்ன

Hollow block stone make  ஹாலோபிளாக் கற்கள் பொதுவாக மூன்று அளவுகளில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகிறது.

வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள்..!

4 இஞ்ச் 6 இஞ்ச் 8 இஞ்ச் என்ற அளவுகளில் இது தயாரிக்கப்படுகிறது.

4 இஞ்ச் கற்கள் பாத்ரூம் கட்டுவதற்குப் பயன்படுத்தலாம் (இதன் நீளம் 15 இன்ச் அகலம் 4 இன்ச் உயரம் 8 இன்ச்)

5 best home remedies for gallstones in tamil

6 இஞ்ச் கற்கள் ஓட்டு வீடு கட்ட பயன்படுத்தலாம் இதற்கு அகலம் மட்டுமே வேறுபடும் அகலம் 6 இன்ச் இருக்கும்.

8 இஞ்ச் கற்கள் மாடி வீடு கட்டப் பயன்படுத்தப் படுகிறது, தமிழ்நாட்டில் இதற்கு அகலம் மட்டும் வேறுபடும், அகலம் 8 இன்ச் அளவுகளில் இருக்கும்.

Leave a Comment