Home Things as per vastu useful tips 2022
வீட்டில் செல்வம் வளம் அதிகமாக உருவாக பஞ்சாங்கம் கூறும் எளிமையான வழிமுறைகள்..!
மனிதர்களுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான இன்றியமையாத இடம் என்றால் அது வீடு மட்டுமே.
வீடு மட்டுமே அனைத்து விதமான சந்தோஷங்களையும் மகிழ்ச்சிகளையும் மனிதர்களுடைய வாழ்க்கையில் அதிக அளவில் பார்த்திருக்கும்.
அதனால்தான் வீடு கட்டும்போது நம் கலாச்சாரத்தின் படி வாஸ்துசாஸ்திரம் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
எந்த திசையில் வாசற்படி அமைந்தால் செல்வ வளம் பெருகும் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என பல்வேறு வழிமுறைகள் பார்த்து பார்த்து நம் முன்னோர்கள் வீடு கட்டினார்கள்.
அந்த வழிமுறைகளை இப்பொழுதும் நாம் அதிக அளவில் பின்பற்றி வருகிறோம்.
வாஸ்து சாஸ்திரம் பார்ப்பதற்கு முக்கியமான காரணமே நீங்கள் செய்யும் எந்த ஒரு காரியங்களுக்கும் கெட்ட வித பலன் ஏற்படக்கூடாது என்பதற்காக மட்டுமே.
வீடு கட்டும் பொழுது எந்தெந்த அறைகள் எங்கு இருக்க வேண்டும் என்பதை வாஸ்து படி தான் பார்க்கப் போகிறீர்கள்.
புது வீடு கட்டுவதற்கு அனைத்து விதமான மக்களும் வாஸ்து சாஸ்திரம் பார்க்க தயாராகிவிட்டார்கள்.
இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்கள் எந்த திசையில் இருந்தால் உங்களுடைய வாழ்க்கையில் செல்வ வளம் பெருகும் என்பதை பார்க்கப்போகிறோம்.
கடிகாரத்தை எந்த திசையில் மாட்ட வேண்டும்
பஞ்சாங்கம் வாஸ்து சாஸ்திரப்படி கடிகாரத்தை கிழக்கு, மேற்கு, வடக்கு, திசைகளில் உள்ள சுவர்களில் மாற்றவேண்டும்.
கண்ணாடி எந்த திசையில் வைக்க வேண்டும்
உங்கள் வீட்டில் கண்ணாடியின் அளவானது செவ்வகம் அல்லது சதுர வடிவில் இருக்க வேண்டும்.
கிழக்கு அல்லது வடக்கு திசையில் கண்ணாடியை வைப்பது மிக நல்லது முக்கியமாக உங்கள் வீட்டின் தரைக்கு மேல் 4 அல்லது 5 அடி இடைவெளிவிட்டு கண்ணாடியை வைக்க வேண்டும்.
அடுப்பு எந்த திசையில் வைக்க வேண்டும்
Home Things as per vastu useful tips 2022 வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் சமையலறையில் உள்ள அடுப்பு தென்கிழக்கு திசையில் அமைத்தால் செல்வவளம் பெருகும் என்பது ஒரு நம்பிக்கையான விஷயம்.
காலண்டர் எந்த திசையில் மாட்ட வேண்டும்
வீட்டிலுள்ள காலண்டரை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5 முறைக்கு மேல் பார்க்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால், அதனை வடக்கு திசையில் அமைத்தால் நல்லதாக இருக்கும்.
கட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்
வீட்டில் வடகிழக்கு திசையில் படுக்கை அறை அமைக்க வேண்டும் கட்டில் மற்றும் மெத்தையை தென்மேற்கு மூலையில் போட்டு படுப்பது போல் அமைத்தால் நன்றாக இருக்கும்.
பீரோ எந்த திசையில் வைக்க வேண்டும்
உங்களுடைய வருமானம் உயர வேண்டும் மற்றும் செல்வ வளம் பெருக வேண்டும் என்றால் குபேரனுக்கு உகந்த திசையான மேற்கு திசையில் பீரோவை வைக்க வேண்டும்.
முன்னோர்களின் புகைப்படங்கள்
உங்களுடைய வீட்டில் முன்னோர்கள் மற்றும் உங்களுடைய தாத்தா பாட்டி அவர்களுடைய புகைப்படம் இருந்தால் அதனை வடக்கு பார்த்த திசையில் மாட்டி நீங்கள் தெற்கு திசையை பார்த்தவாறு அவர்களை வழிபட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும்.
மணி பிளான்ட் எங்கு வைப்பது
Home Things as per vastu useful tips 2022 நீங்கள் வேலை செய்யும் மேசை அல்லது கணினிக்கு அருகில் மணி பிளாண்ட் வைத்தால் உங்களுடைய மன அழுத்தம் மற்றும் கோபங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வீட்டில் இருக்க வேண்டிய முக்கியமான செடிகள்
Home Things as per vastu useful tips 2022 துளசி செடி, மணி பிளான்ட், கற்றாழை செடி, கற்பூரவள்ளி செடி, ரோஜா பூ செடி, குண்டுமல்லி பூ செடி, போன்றவை வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய செடிகள்.
இதன் மூலம் உங்களுக்கு தேவையான சுத்தமான காற்று மற்றும் மூலிகைகளும் கிடைக்கும்.