Homemade chocolate business new ideas 2021
எளிய முறையில் சிறு தொழில் குறைந்த முதலீட்டில் தொடங்கலாம் வீட்டிலிருந்து சாக்லேட் தொழில் செய்யலாம்.
சாக்லேட் தயாரிப்பு அதிக அளவில் முதலீடு தேவைப்படாத ஒரு தொழிலாக இருக்கிறது மூலப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாத அதே நேரத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறந்த வியாபாரத் தலமாக இருக்கப்போகிறது.
நல்ல வருமானத்தை தரக்கூடிய இந்த தொழிலில் ஏதாவது ஒரு நிறுவனத்தில் நேரடி பயிற்சி பெற்ற பிறகு இந்த தொழிலில் நீங்கள் எளிதாக உங்கள் வீட்டில் இருந்தே தொடங்கலாம்.
அதுவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பொருளாக இருக்கிறது.
இடவசதி
சாக்லேட் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை பெரிய அளவில் முதலீடு தேவையில்லை,வீட்டு சமையலறை தான் அதற்கு சிறந்த இடமாக இருக்கிறது, ஒருவேளை நீங்கள் சிறுதொழில் தொடங்கினால்.
தேவையான பொருட்கள்
இந்த சாக்லேட் தயாரிப்பு (Homemade chocolate recipe in tamil) தொழிலை பொறுத்தவரை தண்ணீர் கொதிக்க வைக்க ஒரு பெரிய பாத்திரம், சாக்லேட் கலவையை செய்ய ஒரு பாத்திரம் மற்றும் சாக்லெட் வடிவமைப்புக்கான மோல்டுகள் (Molds) பேக்கிங் பேப்பர் (Baking paper) ஆகியவைதான் தயாரிப்பு பொருட்கள்.
சுவைமிக்க சாக்லேட் செய்வது எப்படி
சாக்லேட் தயாரிப்பு தொழில் பொருத்தவரை மூலப்பொருட்கள் என்று பார்த்தாள் டார்க் சாக்லேட், பார் மில்க் சாக்லேட், முந்திரிப்பருப்பு, திராட்சை பழம், பாதாம் பருப்பு, மற்றும் உங்களுக்கு பிடித்த உலர் பழம் வகைகள் இவையெல்லாம் சேர்ந்து குறைந்தபட்சம் 5,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை அல்லது உங்களால் முடிந்த அளவிற்கு நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
இந்தத் தொழிலை பொறுத்தவரை எப்பொழுதும் அதிகப்படியான மூலப்பொருட்கள் சேமித்து வைத்து இருக்க வேண்டும்.
டார்க் சாக்லேட் பார், பிரவுன் சாக்லேட் பார், இரண்டையும் கத்தியால் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும் அல்லது துருவி வைக்கவும்.
அதேபோல் உலர் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும் அல்லது உங்களுக்கு பிடித்த எந்த பழம் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம் ஏனென்றால் இவை சுவை மற்றும் நிறத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து விடவும் அந்த பாத்திரத்தின் மேல் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதனுள் நறுக்கி வைத்திருக்கும் சாக்லேட் பீஸ்களை கொட்டவும்.
அதாவது நீராவி முறையில் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கப்பட்டுள்ள சாக்லேட்டுகளை சூடுபடுத்தவும்.
நீங்கள் இந்த சாக்லேட்டை கொதிக்க வைக்கும்போது தீயை ஒரே சூட்டில் வைத்திருக்கவும் கட்டாயம், அப்போதுதான் சூடானது மேல் இருக்கும் பாத்திரத்துக்கு சீராக பரவும்.
கீழ் வைக்கும் பாத்திரத்தை விட மேல் வைக்கும் பாத்திரம் பெரிதாக இருக்க வேண்டும் அதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் அப்போதுதான் நீராவியை வெளியில் கசியாமல் அதிக சூட்டில் சாக்லேட் விரைவாக உருக ஆரம்பிக்கும்.
சாக்லேட் கலவையை கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும் சரியான முறையில் இல்லை என்றால் கலவை கெட்டியாக வாய்ப்பு இருக்கிறது, அதே சமயத்தில் கீழ் உள்ள பாத்திரத்தில் தண்ணீர் குறைந்தால் சரியான அளவில் தேவைக்கேற்ப ஊற்ற வேண்டும்.
சாக்லேட் பீஸ்களை போட்ட பின் ஸ்பூனால் கட்டி கட்டாமல் இருக்க நன்கு கலக்க வேண்டும் சாக்லேட் உருகி தோசை மாவு பதத்திற்கு வர வேண்டும் இதை நீங்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும்.
பின்னர் சாக்லெட் எந்த வடிவத்தில் நீங்கள் செய்யப் போகிறீர்களோ அந்த மோல்டில் உள்ள உள்ளே ஊற்ற வேண்டும்.
மோல்டில் உள்ளே வடிவத்தில் கால் பாகம் மட்டுமே நிரப்ப வேண்டும் அதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் உலர் பழங்கள் போடவும், பின்னர் அதன் மேல் மீண்டும் சாக்லேட் கலவையை ஊற்ற வேண்டும்.
இதன்பிறகு ஒரு 15 நிமிடம் அதனை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும், பின்னர் எடுத்தால் சுவையான வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் ரெடியாகிவிடும்.
தயாரித்து சாக்லெட்டுகளை எடுத்து நீங்கள் அழகாக பேப்பரில் பேக்கிங் செய்து விற்பனை செய்துவிடலாம்.
பெரிய அளவில் சாக்லேட் தயாரிப்பில் இறங்க வேண்டும் என நீங்கள் ஆசைப்பட்டால் அதற்கு முதலீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் இதைப்பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் ஆயுசுக்கும் தலைமுடி பிரச்சினை வராது
உங்களுடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருடம் முழுவதும் இதற்காக தனியாக ஒரு துறை இயங்கி வருகிறது இதனை மத்திய மற்றும் மாநில அரசுகள் வழிநடத்துகிறது.
Click here to our YouTube channel
உங்களுக்கு எந்த தொழில் பற்றி பயிற்சி வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ உங்களுடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நாடினால் அதற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.
marachekku oil business full details 2021
அதுமட்டுமில்லாமல் மதிய உணவு, தேநீர், போன்றவையும் வழங்கப்படும் மற்றும் இதற்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.