Honey beekeeping business new ideas 3 tips
புதிதாக என்ன தொழில் தொடங்கலாம் குறைவான முதலீட்டில் அதிகமான லாபம் பெறுவது எப்படி என்று நினைப்பவர்களுக்கு இந்த தொழில் ஒரு அருமையான வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.
நீங்கள் தேனீ வளர்ப்பு முறை கற்றுக்கொண்டால் அதாவது இன்றைய காலகட்டத்தில் தேனீ வளர்ப்பு என்பது லாபம் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது.
பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தேன் ஒரு சிறந்த மருந்து பொருளாக விளங்குகிறது, இத்தகைய தேனீ வளர்ப்பு முறை மூலம் நீங்கள் அதிகமான வருமானம் பெறமுடியும் கட்டாயம்.
மக்கள் அதிக அளவில் இயற்கை மூலம் கிடைக்கக்கூடிய உணவு பொருட்களுக்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் உணவுப் பொருட்கள் பெரும்பாலும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட, அதுமட்டுமில்லாமல் பூச்சிக்கொல்லிமருந்து, உரம், ரசாயனங்கள், பயன்படுத்தி விளைவித்த பொருட்களாக இருக்கிறது.
இதன் மூலம் பல்வேறு உடல் உபாதைகள் வருகிறது இதனை அறிந்த மக்கள் இயற்கையில் கிடைக்கக்கூடிய உணவுபொருட்களுக்கு அதிக வரவேற்பு கொடுக்கிறார்கள்.
பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் கூட தேன் வளர்ப்பு முறை மற்றும் விற்பனை முறையை செய்து வருகிறது இதன் மூலம் பல கோடி ரூபாய் அந்த நிறுவனங்கள் லாபம் பெறுகிறது.
இதை தனிநபரும் செய்யலாம் அல்லது குழுவாகவும் தேன் வளர்ப்பு முறை, விற்பனை முறையை, எளிதாக செய்யலாம் அதனைப் பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தேனீக்களின் வகை
கொம்புத்தேனீ, மலைத்தேனீ, கொசுத்தேனீ, மேற்குலகதேனீக்கள், கிழக்குலகதேனீக்கள் என பல்வேறு வகைகளில் தேனீக்கள் இருக்கிறது.
தேனீ வளர்ப்பு முறை முதலீடு
தேனீ வளர்ப்பதற்கு மரப்பெட்டிகள் குறைந்தபட்சம் 5 என்றாலும் அதனுடைய விலை 2200 /- ரூபாயில் தொடங்குகிறது ஆகமொத்தம் இதற்கு 11,000/- ரூபாய் செலவாகும்.
1 ஆண்டுக்கு பராமரிப்பு செலவு 1,500/- ரூபாய்
முதலீடு செலவு தோராயமாக 15,000/- ரூபாய் இருக்கும்
தேனீ வளர்ப்பு முறையில் கிடைக்கக்கூடிய வருமானம்
தேன் 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு 15 கிலோ வீதம் 5 பெட்டிக்கு மொத்தம் 75 கிலோ தேன் கிடைக்கும்.
1 கிலோ தேன் குறைந்தபட்சம் 400 ரூபாய் என்று நீங்கள் விற்பனை செய்தாலும் 75 கிலோவுக்கு 30,000/- ரூபாய் கிடைக்கும்.
மெழுகு 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு தோராயமாக 2 கிலோ வீதம் 5 பெட்டிக்கு மொத்தம் 10 கிலோ கிடைக்கும்.
இந்த தேன்மெழுகு ஒரு கிலோ குறைந்தபட்சம் 500 ரூபாய் என்றாலும் 10 கிலோவுக்கு 5,000 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.
புதிய காலனிகள் ஒரு பெட்டிக்கு 4 காலனிகள் வீதம்
ஒரு காலணிக்கு ரூபாய் 700 ரூபாய் 5 X 4 X 700 =14,000/- ரூபாய் இதில் கிடைக்கும்.
ஆக மொத்தம் முதலாம் ஆண்டு மொத்த வருமானம் 49,000/- ரூபாய் உங்களுக்கு கிடைக்கும் தோராயமாக.
வருமானம் கணக்கிடும் முறை
முதலாம் ஆண்டு நீங்கள் சரியாகச் செய்தால் தோராயமாக 49,000/- ரூபாய் வருமானம் கிடைக்கும்.
உங்களுடைய முதலீடு அதிகபட்சம் ரூபாய் 15,000 இருக்கும்.
உங்களுக்கு நிகர லாபம் 31,000/- வரை கிடைக்கலாம் தோராயமாக.
தேனீ வளர்ப்பு முறை பற்றி சில எளிய குறிப்புகள்
தேனீ வளர்ப்பிற்கு குறைந்த நேரம் பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனம் தேவைப்படும்.
குறைந்த மதிப்புள்ள விவசாய நிலங்களில் தேன் மற்றும் மெழுகுகினை தயாரிப்பது இயல்பு.
தேனீ வளர்ப்பதால் தென்னை, பாக்கு தோப்புகளில், 30% விளைச்சலும் பிற விளைநிலங்களில் 40% கூடுதல் விளைச்சல் கிடைக்கும்.
Click here to view our YouTube channel
நீங்கள் இந்த தேனை எளிய முறையில் விற்பனை செய்யலாம் ஏனென்றால் இயற்கையில் விளைந்த தேனீ என்பதால் உங்களை நாடி வந்து வாங்கிச் சென்றுவிடுவார்கள்.
Samosa making business profit full details2021
இதற்கு வங்கிகளும் கடன் உதவி செய்கிறது, உங்களுக்கு மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள மத்திய, மாநில, அரசுகள் நடத்தும் தொழில் பயிற்சி நிலையத்தை நீங்கள் அணுகி தெரிந்து கொள்ளலாம்.