உங்கள் வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பதற்கு இதனை பயன்படுத்துங்கள்.(How avoid taking medication your life 2020)
உலகிலே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது 17 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது மேலும் தொடர்ந்து அதிகரிக்கும் அடுத்த 25 ஆண்டுகளில் 134 பில்லியன் இந்திய மக்கள் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று சிலமுடிவுகள் தெரிவிக்கிறது.
நீரிழிவு நோயால் மனிதனின் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் உணவு பழக்கம் மட்டும்.
2020 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 30 வயதைக் கடந்து அனைவரும் உடம்பில் சர்க்கரையின் அளவை ஆண்டுதோறும் பரிசோதிப்பது நல்லது வாழ்நாள் முழுவதும் மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் உங்கள் பணத்தை இது சேமிக்க உதவும்.
கிளைசெமிக் (Glycaemic) கிளைசெமிக் குறியீடானது ஒரு உணவுக்கு ஒதுக்கப்பட்ட 0 முதல் 100 வரையிலான எண்ணாகும், தூய குளுக்கோஸ் தன்னிச்சையாக 100 மதிப்பைக் கொடுக்கும், இது அந்த உணவை உட்கொண்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு இரத்த குளுக்கோஸ் அளவின் ஒப்பீட்டளவில் உயர்வைக் குறிக்கிறது.
இயற்கையாக இருக்கும் சில உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.
சிட்ரஸ் பழங்கள்.
சிட்ரஸ் போன்ற பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் இந்த பழங்களில் சர்க்கரை ஐஸ் கட்டி சேர்த்து ஜூஸ் போட்டு குடித்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகப்படுத்திவிடும்.
பெண்கள் அதிக அளவில் சிட்ரஸ் பழங்களை எடுத்துக்கொள்வதால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும்.
அதிக சர்க்கரை நிறைந்த மாம்பழங்களை நீரிழிவு நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளவே கூடாது.
பீன்ஸ்.
பீன்ஸ்ல் அதிக அளவு நார்ச்சத்து, புரதச்சத்து, பைபர் மற்றும் போலட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக இருக்கிறது.
சிறுநீரக பீன்ஸ்,சோயா பீன்ஸ் மற்றும் கொண்டைக்கடலை போன்ற பீன்ஸ்கள் கிளைசெமிக் (Glycaemic) குறியீட்டில் குறைந்த எண்களை கொண்டுள்ளது.இவற்றை சாப்பிடுவதால் உடம்பில் கார்போஹைட்ரேட் அளவு குறைகிறது.
தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள்.
புரதம், இரும்பு, பி விட்டமின்கள் மற்றும் கார்ப்ஸ் போன்ற ஏராளமான சத்துக்களை இந்த தானிய வகைகள் வழங்குவதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் மற்றும் சர்க்கரையின் அளவுகளை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
பருப்பு மற்றும் தானிய வகைகளில் நார்ச்சத்து மற்றும் பைபர் போன்ற சத்துக்கள் உள்ளதால் உங்கள் வயிற்றில் செரிமான அமைப்பை நல்ல முறையில் பாதுகாக்கிறது.
மீன்.
சல்மான், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், செலினியம் மற்றும் விட்டமின் டி ஆகியவைகள் நிறைந்து உள்ளது.
நீரிழிவு நோயாளிகள் மீன்களை எண்ணெயில் பொரித்து சாப்பிடக்கூடாது. இது போன்ற மீன்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதால் செரிமானம் மெதுவாக நடைபெறும் இதனால் உங்களுக்கு அடிக்கடி பசி என்ற உணர்வு தோன்றாது.
கீரைகள்.
அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, கீழாநெல்லி கீரை, போன்ற கீரைகளில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்களை நாம் சிறிய வயதில் பள்ளிப் பருவத்திலேயே படித்திருப்போம்.
வைட்டமின் கே மற்றும் ஏ அதிக அளவில் நிறைந்துள்ளதால் இவைகள் இயற்கையாகவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.twitter