How to apply community certificate Quick 2022
சாதி சான்றிதழ் இணையதளத்தில் விண்ணப்பித்து பெறுவது எப்படி..!
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் மிக எளிமையாக வீட்டிலிருந்தபடியே சாதிச் சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள போகிறோம்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்று நம்முடைய பாரதியார் சொன்னாலும் சாதாரணமாக குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு கூட அரசுத் துறைகளில் பணிபுரிவதற்கு, என்று பல விஷயங்களுக்கு இன்று வரை நம்மிடம் கேட்கும் ஒரு சான்றிதழ் சாதிச்சான்றிதழ் இருக்கிறது.
இத்தகைய சான்றிதழை தமிழ்நாடு அரசு இ சேவை மூலம் வழங்குகிறது, இதனை நீங்கள் வீட்டில் இருந்து எளிமையாக பெற்றுக்கொள்ளலாம்.
இந்த கட்டுரை மூலம் அதை பற்றி நீங்கள் எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.
சாதி சான்றிதழ் பெறுவது எப்படி குறிப்பு
முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும்.
அவற்றில் Citizen login வழியாக உங்களுடைய ID-ஐ லாகின் செய்து கொள்ளுங்கள்.
Department service-யில் Revenue Department என்பதைக் கிளிக் செய்து கொள்ள வேண்டும். இந்த Revenue Department கிளிக் செய்த பிறகு அவற்றில் என்ன Services மாதிரியான இருக்கிறது என்று List அட்டவணை காட்டும் அவற்றில் Community certificate என்பதை தேர்வு செய்யுங்கள்.
இப்பொழுது மேல் காட்டப்பட்டுள்ளது போல் ஒரு புதிய பக்கம் திறக்கப்படும் அவற்றில் இந்த சாதிச் சான்றிதழ் விண்ணப்பிப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை.
விண்ணப்பக் கட்டணம், போன்ற அனைத்து விவரங்களும் திரையில் தோன்றும், அவற்றைத் தெளிவாக படித்த பின்பு என்ற Processed விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
இப்பொழுது can எண்கள் பதிவு செய்ய வேண்டும் எனவே Register can என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் உங்களுடைய Can Number Register-ஐ செய்து கொள்ளுங்கள்.
தங்கள் ஏற்கனவே Register செய்திருந்தால் அந்த எண்ணை டைப் செய்து Processed என்ற விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்.
இணையதளம் மூலம் சாதி சான்றிதழ் பெறுவது
இப்பொழுது சாதிசான்றிதழ் விண்ணப்பிக்க ஒரு விண்ணப்ப படிவம் திரையில் தோன்றும், விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்களும் இருக்கும்.
அதாவது உங்களுடைய Can Number Register செய்யும் பொழுது உங்களது விவரங்கள் அனைத்தும் உள்ளிட்டு தான் Can Number Register செய்திருப்பீர்கள்.
எனவே இந்த விண்ணப்ப படிவத்தில் உங்களுடைய தந்தை மற்றும் தாயின் சாதியை தேர்வு செய்ய வேண்டியதாக இருக்கும்.
அதன் பிறகு உங்கள் தந்தை மற்றும் தாய் இணையதளத்தில் சாதி சான்றிதல் விண்ணப்பித்து பெற்றுள்ளனர் என்று கேட்கப் பட்டிருக்கும் ஆம் என்றால் YES என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து.
அவர்களுடைய சாதி சான்றிதழ் எண்களை டைப் செய்ய வேண்டும் இல்லை என்றால் NO என்ற விருப்பத்தை கிளிக் செய்து Submit என்பதை தேர்வு செய்யுங்கள்.
அதன் பிறகு Document Attached என்ற புதிய பக்கம் திறக்கப்படும் அவற்றில் விண்ணப்பதாரரின் புகைப்படம் Address Proof, Self Declaration Form, மற்றும் உங்களுடைய தந்தை அல்லது தாயின் Community Certificate சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டியதாக இருக்கும்.
எனவே உங்களுடைய ஒவ்வொரு ஆவணங்களையும் Select Document பக்கத்தில் இருக்கும் Select என்ற விருப்பத்தை கிளிக் செய்து ஒவ்வொன்றாக பதிவேற்றங்கள்.
முக்கியமான சில குறிப்புகள்
விண்ணப்பதாரரின் Declaration Form Upload பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவே Download Declaration Form என்று இருக்கும் அதனை கிளிக் செய்து Download செய்து விண்ணப்பதாரர்களிடம் கையொப்பம் வாங்கி மறுபடியும் அதை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தங்களுடைய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும்போது ஆவணங்களின் size 200 KB இருக்க வேண்டும் அதுவே photo புகை படமாக இருந்தால் Size 50 KB இருக்க வேண்டும்.
File format PNG, PDF, JPG,GIF போன்ற Format மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்.
சாதி சான்றிதழ் பெறுவது எப்படி குறிப்பு
இந்த சாதிச் சான்றிதழ் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெறுவதற்கு தங்கள் தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் 60 கட்டண தொகையாக செலுத்த வேண்டியதாக இருக்கும்.
எனவே Make Payment என்ற விருப்பத்தை கிளிக் செய்து தங்கள் தங்களுடைய விண்ணப்பக் கட்டணத்தை இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
Credit card, Debit card,அதை பயன்படுத்தி இணையதளம் மூலம் கட்டணத்தை செலுத்தி கொள்ளும் வசதி இதில் இருக்கிறது.
நீங்கள் கட்டணத் தொகையை வெற்றிகரமாக செலுத்திய பிறகு ஒரு ஒப்புகை சீட்டு வழங்கப்படும் அவற்றில் உங்களுக்கு ஒரு விண்ணப்ப எண் கொடுக்கப்பட்டிருக்கும்.
அந்த எண்களை பயன்படுத்தி மட்டுமே https://www.tnesevai.tn.gov.in/ இந்த இணையதளத்தில் உங்களுடைய status எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
தொழில் செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி.
அதாவது இந்த இணைய சேவை மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Check status என்பதில் உங்களுடைய விண்ணப்ப எண்களை டைப் செய்து Fetch என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
How to buy Bitcoin full details in tamil 2022
இப்பொழுது உங்களுடைய status எப்படி உள்ளது என்று காட்டப்படும் அதாவது உங்களுக்கு Application Approved ஆகி இருந்தால் Certificate என்ற தேர்வு இருக்கும் அதனை கிளிக் செய்து உங்களுடைய சாதிச் சான்றிதழை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதனுடைய வேலை இப்பொழுது முழுவதும் முடிந்து விட்டது இதற்காக அரசு அலுவலகத்திற்கு சென்று நாள் கணக்காக நீங்கள் அலைய வேண்டியதில்லை, வீட்டிலிருந்தபடியே இதனை நீங்கள் எளிமையாக பெற்றுக்கொள்ளலாம்.