How to apply for free training tnpsc group 4

How to apply for free training tnpsc group 4

TNPSC Group 4 இலவச பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தயாராகும் வகையில் தமிழக அரசு சார்பில் அதற்காக இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

விருப்பமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது இது முழுக்க முழுக்க இலவச பயிற்சி.

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,300 மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு,  இரண்டு வருடங்கள் கழித்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குரூப் 4 தேர்வு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது 21.84 லட்சம் நபர்கள் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டிக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கு வருகின்ற, மே மாதம் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது என்னவென்றால்.

குரூப்-4 தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசு சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சார் தியாகராயர் கல்லூரியில்,நந்தனம் அரசினர் கலைக் கல்லூரியிலும்,ஆடவர் கலைக் கல்லூரியிலும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை வாராந்திர வேலை நாட்களில் மூன்று மாத கால நடைபெற உள்ளது.

சார் தியாகராஜா கல்லூரியில் 500 நபர்களும், அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 நபர்களும் பயிற்சிக்காக அனுமதிக்கப்பட உள்ளார்கள்.

போட்டித்தேர்வு பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to apply for free training tnpsc group 4

இதற்கான தகுதி என்ன

குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது மற்றும் இதர தகுதிகள் குறித்து விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு விண்ணப்பிப்பது எப்படி

விருப்பம் உள்ள நபர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் இணையதளமான http://www.civilservicecoaching.com/ மே 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஒருமுறை விண்ணப்பித்த பிறகு அதில் திருத்தம் எதுவும் செய்ய முடியாது, விண்ணப்பிக்கும் நபர்கள் வருகின்ற ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்க வேண்டியது கட்டாயம்.

அழைப்பு கடிதம் அனுப்பப்படும்

How to apply for free training தேர்வு செய்யப்பட்ட நபர்களின் விவரம் மற்றும் அதற்கான அழைப்பு கடிதம் http://www.civilservicecoaching.com/

இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

அதனை பதிவிறக்கம் செய்து சேர்க்கையின்போது அவசியம் கொண்டு வர வேண்டும்.

வெப்ப அலை என்றால் என்ன

பயிற்சி நாள் மற்றும் நேரம் இணையதளத்தில் மட்டும் அறிவிக்கப்படும், அழைப்புக் கடிதம் அஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைக்கப்படமாட்டாது.

How to apply for free training tnpsc group 4

தேர்வு செய்யும் முறை

How to apply for free training 10ம் வகுப்பில் எடுத்த மொத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் தங்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சி மையத்தில் இனவாரியாக உள்ள காலியிடங்களுக்கு ஏற்றபடி பயிற்சிக்கு அழைக்கப்படுவார்கள்.

Brain fever symptoms 5 best tips

கூடுதல் விவரங்களுக்கு இப்பயிற்சி மையத்தின் மின்னஞ்சல் ceccchennai@gmail.com அணுகலாம் அல்லது 044-24621475/24621909 என்ற இலவச தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Comment