How to apply National Health ID Card Free 2022
மத்திய அரசின் சுகாதார அடையாள அட்டை இலவசமாக விண்ணப்பித்து பெறுவது எப்படி..!
மத்திய அரசானது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் பயன்பெறும் வகையில் மற்றும் குடிமக்களின் உடல் நலத்தைப் பேணிக் காக்கும் வகையில் டிஜிட்டல் ஹெல்த் அடையாள அட்டையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த பதிவில் சுகாதார அடையாள அட்டை எப்படி இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெறுவது, இதன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கும் பற்றியெல்லாம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
National Health ID card என்ற அடையாள அட்டையினை நீங்கள் இணையதளம் வாயிலாகவும் அல்லது அருகில் இருக்கக்கூடிய தனியார் அல்லது அரசு மருத்துவமனையிலும் பெற்றுக்கொள்ளமுடியும்.
இதனை பெறுவதற்கு கண்டிப்பாக உங்களிடம் மொபைல் எண் மற்றும் ஆதார் கார்டு இருக்க வேண்டும், இனி வரக்கூடிய காலங்களில் அனைத்து சுகாதார நிறுவனங்களும் இந்த திட்டத்தில் இணைந்து விடும்.
நம் பாரத நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மருந்து கடைகளும் இதனுடன் இணைந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த சுகாதார அடையாள அட்டையில் உங்களுடைய X-RAY,MRI ஸ்கேன் ரிப்போர்ட் போன்ற அனைத்தையும் இதில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
இந்த அடையாள அட்டை நோயாளிகளுக்கு மட்டுமில்லாமல் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கு, மிகவும் பயன்படுகிறது.
நோயாளிகளுக்கு உடலில் இதற்கு முன்பு என்ன மாதிரியான நோய்கள் இருந்தது, அதற்கு என்ன மருந்து மாத்திரைகள் காலகட்டத்தில் எடுத்துக்கொண்டார்கள்.
பற்றிய அனைத்து விவரங்களையும் அதில் நீங்கள் தெளிவாக தெரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும்.
இத்தகைய சிறப்பு அடையாள அட்டை இணையதளம் மூலம் நீங்கள் வீட்டில் இருந்து பெற்றுவிடலாம்.
இணையதளம் மூலம் பெறுவது எப்படி
முதலில் உங்களுடைய மடிக்கணினி அல்லது கணினியில் ndhm என்பதை டைப் செய்து கொள்ளுங்கள் அவற்றில் https://healthidndhm.gov.in/என்ற இணையதளத்தை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
இப்பொழுது அவற்றில் என்று Create your health ID இருக்கும் அவற்றில் நீங்கள் மூன்று விதமாக பதிவேற்றம் செய்யலாம்.
அதாவது முதலில் ஆதார் கார்டு, அடுத்தது ஓட்டுநர் உரிமம் சான்றுகள், எதுவும் இல்லை என்றால் கீழே மூன்றாவது விருப்பத்தின் apply மூலம் தேர்வு செய்யலாம்.
உதாரணத்திற்கு நீங்கள் மூன்றாவதாக உள்ள விருப்பத்தின் மூலம் இந்த தேசிய சுகாதார அடையாள அட்டை இணையதளம் மூலம் எப்படி அப்ளை செய்யலாம் என்று பார்ப்போம்.
அதற்கு நீங்கள் Click Here என்பதை கிளிக் செய்யவும், இப்பொழுது மொபைல் எண் உள்ள இடத்தில் உங்களுடைய மொபைல் எண்ணை குறிப்பிடவும்.
கீழ் பகுதியில் I Agree என்பதை கொடுக்க வேண்டும்.
உங்களுடைய மொபைல் எண்ணை பதிவேற்றம் செய்த பிறகு OTP எண் வரும் அந்த OTP எண்ணை அதில் கொடுக்க வேண்டும்.
How to apply National Health நீங்கள் OTP எண் கொடுத்த பிறகு உங்களுடைய பெயர், பிறந்த தேதி, பாலினம்,PHR முகவரி அதற்கான ஒரு கடவுச்சொல் (Password) நீங்கள் இருக்கக் கூடிய மாநிலம் state மற்றும் மாவட்டம் என்ன என்பதை தேர்வு செய்து கடைசியாக Submit பட்டனை கிளிக் செய்யவும்.
இப்பொழுது உங்களுடைய சுயவிவரம் (Profile) பகுதி இதுபோன்று (Create)ஆகிவிடும், இதுதான் உங்களுடைய தேசிய சுகாதார அடையாள அட்டை, நீங்கள் கொடுத்துள்ள அனைத்து தகவலும் இந்த அட்டையில் பதிவாகிவிடும்.
Profile-ல் உங்களுடைய புகைப்படம் வைக்க வேண்டுமென்றால், Account என்ற தேர்வில் Edit Profile என்பதை கிளிக் செய்யவும், அவற்றில் Click to upload என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு உங்களுடைய தேசிய சுகாதார அடையாள அட்டை உருவாகிவிடும், இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.