How to apply new uzhavar Card online 2022
உழவர் பாதுகாப்பு அட்டை வாங்குவது எப்படி..!
தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு அட்டை எப்படி வாங்குவது உழவர் பாதுகாப்பு அட்டை மூலம் என்னென்ன பயன்கள் பெறலாம் இதில் யார் யாரெல்லாம் இணையலாம்.
எப்படி விண்ணப்பிக்கலாம் என்று முழுமையாக இந்த கட்டுரை மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த உழவர் பாதுகாப்பு அட்டை திட்டமானது கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது.
உழவர் அட்டை மூலம் அதிகமான சலுகைகள் பெறலாம், சிலர் இந்த வாய்ப்பினை தவற விட்டு விடுகிறார்கள், அனைவரும் இந்த உழவர் அட்டை பெற்று பயன் பெற வாழ்த்துகிறோம்.
முதியோர் உதவித்தொகை பெறலாம்
60 வயதை கடந்த நிலமில்லாத விவசாயக் கூலித் தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெற முடியும்.
மாதம் மாதம் இவர்களுக்கு குறைந்தபட்சம் 1,000/- ரூபாய் நிதி உதவி தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
திருமண உதவித்தொகை பெற முடியும்
திருமணத்திற்காக நிதி உதவியினை இந்த உழவர் அட்டை மூலம் பெற முடியும், பெண்ணாக இருந்தால் ரூபாய் 10,000/-தொகையும், ஆணாக இருந்தால் 8,000/-ரூபாய் இதன் மூலம் பெற முடியும்.
விபத்துக்கான நிதி உதவிகள்
ஏதேனும் துரதிஸ்டவசமாக விபத்து ஏற்பட்டால் அல்லது இயற்கையான முறையில் மரணம் ஏற்பட்டால் அதற்கான நிதி உதவி பணமும் கிடைக்கும்.
அதுமட்டுமில்லாமல் இறுதிச்சடங்கு செய்வதற்கான சிறிய தொகையும் இதன் மூலம் வழங்கப்படும்.
கேன்சர், டிபி,எச்ஐவி போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ 1,000/- வழங்கப்படும்.
இறப்பு, விபத்தினால் கை அல்லது கால் அல்லது உடலில் ஏதேனும் ஒரு உறுப்பு பாதிக்கப்படுவது, இதன் மூலம் 1 லட்சம் ரூபாய் பணமும், முடக்குவாதம் ஏற்பட்டால் நிதி உதவியாக ரூபாய் 50,000/- வழங்கப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்களின் பயனென்ன உழவர் அட்டை மூலம்.
திருமணத்திற்காக நிதி உதவி, கல்வி நிதி உதவி, அவர்கள் தனிநபராக இருக்கும் போது அதற்கான நிதி உதவி, அவர்களின் இறுதி சடங்கிற்காக நிதி உதவி இது போன்ற நிகழ்வுகளுக்கு பணம் வழங்கப்படுகிறது.
உறுப்பினர் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் தொகை வழங்கப்படுகிறது, இறுதி சடங்கிற்கு ரூபாய் 2500/- கொடுக்கப்படுகிறது.
கேன்சர், டிபி, எச்ஐவி, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ 1,000/- வழங்கப்படும்
இறப்பு விபத்தினால் கை அல்லது கால் இழந்தவர்களுக்கு உடலில் ஊனம் ஏற்பட்டால் 1லட்சம் பணமும் முடக்குவாதம், ஏற்பட்டால் நிதி உதவியாக 50 ஆயிரமும் வழங்கப்படும்.
குடும்ப உறுப்பினர்களின் பயன் என்ன
திருமணத்திற்கான நிதி உதவி, கல்விக்கான நிதி உதவி, அவர்கள் தனிநபராக இருக்கும் பொழுது, அதற்கான நிதி உதவி,என பல்வேறு நிதி உதவி வழங்கப்படுகிறது.
உறுப்பினர் உயிரிழக்கும் பட்சத்தில் அவருக்கு ரூபாய் 20,000/- தொகை வழங்கப்படும், அதுமட்டுமில்லாமல் அவருடைய இறுதிச்சடங்கு ரூபாய் 2500/- வழங்கப்படும்.
கல்வி நிதி உதவி தொகையானது, அவர்களுடைய கல்வி நிலையைப் பொருத்து வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் இணைவது எப்படி
இந்த உழவர் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
குறு மற்றும் சிறு விவசாயிகள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் ஈர நிலம் வைத்திருந்தால் 2.5 ஏக்கர் அளவிற்கு வைத்திருக்கவேண்டும், காய்ந்த நிலமாக இருந்தால் குறைந்தது 5 ஏக்கர் மிகாமல் இருக்க வேண்டும்.
கூலி வேலை செய்யும் அனைத்து விவசாய மக்களும் விண்ணப்பிக்கலாம், மீன்பிடி மற்றும் தோட்ட வேலை செய்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தில் சார்ந்த இருக்கும் நபர்கள்
பயனாளியின் கணவன் அல்லது மனைவி
உறுப்பினரின் குழந்தை அல்லது பெற்றோர்
உறுப்பினர் ஒருவேளை இறந்து போனால் மகனின் மனைவி மற்றும் குழந்தைகள் இந்த பட்டியலில் வருவார்கள்.
இந்த திட்டத்தில் இணைவது எப்படி
இதற்கு முன்பு உங்களிடம் user ID sign up இதற்கான கணக்கு இருந்தால் அவற்றை login செய்து கொள்ளுங்கள் இதுவரை நீங்கள் கணக்கு தொடங்காமல் இருந்தால் citizen login என்பதை கிளிக் செய்யுங்கள் new user sign up here என்பதை கிளிக் செய்து புதிதாக தொடங்குங்கள்.
அவற்றில் கேட்டுள்ள அனைத்திற்கும் சரியானவற்றை பூர்த்தி செய்து இறுதியாக captcha என்பதை சரியாககொடுத்து sign up செய்யவும்.
இப்பொழுது உங்களுடைய மொபைல் எண்ணிற்கு OTP எண் வரும் அவற்றைக் கொடுத்து என்டர் செய்யவும்.
லாகின் செய்த பிறகு Service-ல் என்பதில் Department Revenue Department என்பதை தேர்வு செய்து விடுங்கள்.
அடுத்து search தேர்வில் small marginal farmer certificate என்பதை தேர்வு செய்யுங்கள்.
Can Number வைத்திருந்தால் அவற்றை கொடுக்க வேண்டும், ஒரு வேலை இல்லாதவர்கள் Can Number புதிதாக பதிவு செய்யவும்.
கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு செய்வது எப்படி..!
அடுத்ததாக 3 Documents பதிவேற்றம் செய்ய வேண்டும், போட்டோ, சுய விருப்ப கடிதம்,சிட்டா. இணைக்கவும் போட்டோ (50-kb-க்குள்)இருக்க வேண்டும்.
unemployment scheme full details in tamil 2022
அனைத்தையும் பதிவேற்றம் செய்த பிறகு ரூபாய் 60 கட்டணமாக செலுத்த வேண்டும்.
அதற்கு பிறகு ஒப்புகை சீட்டு வரும் அவற்றில் உங்களுக்கான பதிவு எண் இருக்கும், அந்த எண்ணை வைத்து உங்களுடைய உழவர் பாதுகாப்பு அட்டை எந்த statusல் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.