உங்கள் வணிகத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும்சிறந்த 5 அற்புதமான வணிக தொடக்க குறிப்புகள்.(How to Boost Your Business new 5 tips in Tamil)
நம் எல்லாருக்குமே சொந்தமாக ஒரு தொழிலை தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்த வேண்டும்மென்று ஆசை இருக்கும் ஆனால் மிகக் குறைந்த நபர்கள் மட்டுமே அதற்க்கான முயற்ச்சிக்களை செய்கிறார்கள் அதிலும் விடா முயற்ச்சி தீவிரமான குறிக்கோளுடன் இருக்கும் நபர்கள் மட்டுமே பலகட்ட தோல்விக்கு பின் வெற்றியடைகிறார்கள்.
இன்றைக்கு இருக்கும் நவின உலகத்தில் ஒரு சிறிய அறையில் ஒரு தொழிலை தொடங்கி அதன் மூலம் கோடிக்கணக்கான பணம் சம்பாதிக்கும் நபர்கள் உள்ளார்கள்.
தொழிலில் புதிய யுத்திகளை பின்பற்றும் அல்லது நடைமுறை செய்யும் நபர்கள் மிக விரைவாக அவர்களுடைய தொழிலை வெற்றியடைய செய்கிறார்கள்.
வெற்றியாளர்கள் பின்பற்றும் வழிமுறைகள் என்ன ?
தொழில் தொடங்கிய 1 மாதம், 6 மாதம், 1 வருடம், 3 வருடம், மற்றும் பல மாதம் அல்லது சில வருடங்கள் எடுத்துக்கொள்ளும் வெற்றிக் கிடைக்க அதற்க்கு தொழில் செய்யும் நபர் எடுத்துக் கொள்ளும் வழிமுறைகள் தந்திரங்கள் உத்வேகம் போன்றவற்றின் அடிப்படையில் வெற்றிக் கிடைக்கும்.
நீங்கள் பணத்தையும், முயற்சியை, நேரத்தையும், செலவழிக்கும் முறையைக்கட்டுப்படுத்துவதன் மூலமும் உங்கள் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு சரியான ஆலோசனை மற்றும் திட்டமிடல் தேவைப்படுகிறது.
உங்கள் தயாரிப்பு அல்லது விற்பனை தந்திரங்கள் வெற்றிபெறும் என்பதற்கான எந்த ஆரம்ப சரிபார்ப்பு உங்களுக்கு உத்தரவாதம் அளிக்காது அதனை செயல்படுத்தும் போது உங்களை நீங்கள் பல கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும்.
உங்கள் முன் உங்கள் தொழிலை வெற்றியடைய வைப்பதற்கு தேவையான வாய்ப்புகள் மட்டுமே எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்கும் அதனை எப்படி சரியான நேரத்தில் சரியான விதத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் அறிந்தால் மட்டுமே உங்கள் தொழிலை வெற்றியடைய வைக்க முடியும் உங்களால்.
உங்களுடைய முதல் யோசனையை சரி பார்க்க வேண்டும்.
நீங்கள் உங்களுடைய தொழிலை தொடங்குவதற்கு முன்பு உங்களுடைய சொந்த அறிவை மட்டும் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் ஏனென்றால் உங்களுடைய உள்ளார்ந்த திறமைக்கேற்ப அல்லது உங்களுடைய உண்மையான திறமைக்கு ஏற்ப மட்டுமே உங்களால் சிந்திக்க முடியும்.
நீங்கள் தேர்வு செய்த ஒரு தொழிலில் மிகப்பெரிய வெற்றியடைந்த நபர்களிடம் தொழில் பற்றிய நுணுக்கங்களை கேட்டுக்கொள்ள வேண்டும் மற்றும் அதே தொழிலில் வீழ்ச்சி அடைந்த நபர்களிடம் உங்களுக்கு தேவையான நுணுக்கங்களை கேட்டுக் கொள்ள வேண்டும்.
ஹென்றி ஃபோர்டு கண்டுபிடித்த சரியான தீர்வு.
ஜூலை 16 ஆம் நாள் 1903 ம் ஆண்டு ஹென்றி ஃபோர்டு அவர்கள் மக்களுக்கு மிகப்பெரிய சரியான தீர்வை கொடுத்ததன் மூலம் இன்றும் உலகில் அவருடைய பெயர் நிலைத்து நிற்கிறது காரணம் அவர் கண்டுபிடித்த வழிமுறைகள்.
மக்களுக்கு குதிரைகளை பயன்படுத்துவதால் போக்குவரத்து மிகவும் மெதுவாகவும் அசுத்தமாகும் இருப்பதை ஹென்றி ஃபோர்டு உணர்ந்தார்.
குதிரையை விட வேகமாக செல்வதற்கும் மற்றும் குறைவான குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரு தீர்வை காண வேண்டும் என்று ஹென்றி ஃபோர்டு முயற்சி செய்தார்.
அதற்கு சரியான தீர்வை அவர் கண்டுபிடித்ததன் மூலம் உலகில் அவருடைய கண்டுபிடிப்பு நிலைத்து நிற்கிறது.
நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் உங்கள் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
Join us our twitter page 
காலத்திற்கு ஏற்ற பயிர் செய்வதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொழில் செய்யும் நபர் அவருடைய தொழிலை விரிவுபடுத்துவதற்கு அல்லது வேறு ஒரு நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்வதற்கு சில நேரங்களில் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.
இதனால் அவர் 10,000 டாலர் முதல் 20,000 டாலர் வரை விமான பயணத்திற்கு செலவழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது மற்றும் 5 star ஓட்டலில் தங்குவதற்கும் அவர் செலவு செய்யவேண்டும் இதனால் விமான போக்குவரத்து, தங்கும் விடுதிகள் போன்ற தொழில்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது.
ஆனால் இப்பொழுது 2021 ஆம் ஆண்டில் பெரிய பெரிய தொழில் செய்யும் நிறுவனங்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டில் இருக்கும் தங்களுடைய தொழில் பங்குதாரர்கள் அல்லது வேறொரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வதற்கு இணையம் வழியாக ஒருவருக்கு ஒருவரை நேரடியாக சந்தித்துக் கொள்கிறார்கள்.
விமானம் மற்றும் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்குவதற்கு தேவையான செலவுகள் முற்றிலும் குறைந்து விட்டது மேலும் நேரங்கள் மிகைப்படுத்தப்பட்டன.
இதனால் 2021 ஆம் ஆண்டில் இருக்கும் தொழில்நுட்பங்கள் மூலம் பெரிய விமான நிறுவனங்களுக்கும் 5 Star ஹோட்டல்களுக்கும் பெரிய இழப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
எவ்வளவு மிகப்பெரிய நிறுவனம் என்றாலும் தினம் தோறும் மாறிக் கொண்டே இருக்கும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப நிறுவனத்தை மற்றும் நிறுவனத்தில் இருக்கும் தொழிலாளர்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுது தான் சந்தையில் அந்த நிறுவனம் நிலைத்து நிற்கும்.
உங்களுடைய தயாரிப்பைப் பற்றிய விளம்பரங்கள் புதிய நோக்கங்களுடன் புதிய வழிமுறைகளில் மக்களிடம் சென்றடைய வேண்டும் அப்பொழுதுதான் உங்கள் தயாரிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
உங்களுடைய தயாரிப்பு உண்மையில் பலன் தருகிறது.
நீங்கள் போட்டியிட விரும்பினால் எதை எதிர்த்து போட்டியிடுகிறார்கள் என்பதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் உங்களுடைய போட்டியாளர்கள் உங்களுடையதை போன்று ஒரு தயாரிப்பைஉற்பத்தி செய்கிறார்கள்.
வேறுபட்ட வடிவமைப்பு அல்லது புதிய அம்சங்களை கொண்டவர்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் நீங்கள் மக்களுக்கு தீர்க்கும் சிக்கல்களை உங்கள் போட்டியாளர்கள் தீர்த்து வைக்கிறார்கள் அதை எந்த வகையில் அவர்கள் செய்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.
நீங்கள் உற்பத்தி செய்து விற்கப்படும் பொருள்கள் உண்மையில் மக்களுக்கு சரியாக பலன் தருகிறதா என்பதை நீங்கள் ஆராய வேண்டும் அப்பொழுதுதான் மக்கள் உங்கள் தயாரிப்பை பயன்படுத்தும்போது எப்படி உணர்கிறார்கள் என்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.
சிறந்த 5 யோசனைகள் நிதி நிலையை எவ்வாறு மேம்படுத்துவது.!!!
உங்கள் போட்டியாளர்கள் விற்பனை செய்த பொருட்களை மக்கள் பயன்படுத்தும் போது சந்திக்கக்கூடிய சிக்கல்களை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் இது உங்கள் வணிகத்தை மிகவும் மேம்படுத்த பயன்படும் ஒரு தந்திரமாகும்.
Best 4 foods for Hair Growth in tamil
உங்கள் வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும் இதன் மூலம் சமூகத்தில் உங்கள் தயாரிப்பிற்கு ஒரு வரவேற்பு ஏற்படும் (Creating the Brand Name)
Join us our Telegram Group 