How to choose best life partner 7 tips
ஒரு சிறந்த வாழ்க்கை துணையைத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள்..!
உங்களுடைய வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட வயதில் நிச்சயம் திருமணம் நடைபெறும், திருமணத்திற்கு முன்பு நீங்கள் தனியாக இருப்பதால்.
உங்களுக்கு தேவையான விருப்பங்களையும், சந்தோசங்களையும், பயணங்களையும், நீங்கள் எடுத்துக் கொண்டு இருப்பீர்கள் உங்களுடைய வாழ்க்கை திருமணத்திற்கு முன்பு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
பணம் அதிகமாக இல்லாமல் இருந்தாலும் மகிழ்ச்சியான வாழ்க்கை திருமணத்திற்கு முன்பு இருந்திருக்கும், ஆனால் திருமணத்திற்குப் பின்பு உங்களுடைய வாழ்க்கை தலைகீழாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
காரணம் நீங்கள் தேர்வுசெய்யும் உங்களுடைய வாழ்க்கை பொறுத்து உங்களுடைய திருமண வாழ்க்கை அமையும்.
இன்றைய காலகட்டங்களில் திருமண வாழ்க்கை சரியாக அமைவதற்கு பெரும்பாலான இளைஞர்கள் காதல் திருமணத்தை தேர்வு செய்கிறார்கள்.
நிச்சயித்த திருமணம் அல்லது காதல் திருமணம் எதுவாக இருந்தாலும் திருமண வாழ்க்கை சரியாக அமைவதற்கு சில விஷயங்களை நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் அதனை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
முற்றிலும் தவிர்க்க வேண்டும்
உங்களுடைய திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உங்களுடைய உறவினர்கள் அல்லது நண்பர்கள் மட்டுமே.
தம்பதிகள் இருவருக்கு இடையில் மூன்றாம் நபர் நுழையும்போது புதிய பிரச்சனைகள் ஏற்படுகிறது, இது அனைத்து சந்தோசங்களையும் முற்றிலும் அழித்துவிடுகிறது.
பெண்கள் தங்கள் துணையை அடிபணிய வைப்பதற்கு உடலுறவை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் இதுபோல் செய்யும்போது இருவருக்குமிடையில் மிகப்பெரிய பிரச்சனை வெடித்து நிரந்தரமாக பிரிவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
பேச்சுக்கு அதிக முக்கியத்துவம்
காதல் செய்பவர்கள் அல்லது திருமணம் செய்யப் போகின்ற நபர்கள் திருமணத்திற்கு முன்பு தொலைபேசியில் சில மணி நேரம் உரையாடுவது வழக்கம்.
முக்கியமான விஷயம் அல்லது ஏதாவது பொதுவான விஷயங்கள் என எதுவாக பேசினாலும் நீங்கள் பேசுவதை உங்கள் துணை காது கொடுத்து கேட்டு மதிப்பளிப்பார்கள்.
திருமணத்திற்குப் பிறகு உங்களுடைய பேச்சு கவனிக்காமல் புத்தகம் படிப்பது, வேறு வேலையில் கவனம் செலுத்துவது,என இருந்தால் ஏதேனும் ஒரு முடிவு எடுப்பதில் தனக்கு தெரிவிக்காமல் இருப்பது போன்றவை இருத்தல் கூடாது.
அவ்வாறு உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பது சிறந்த குணநலன்களில் ஒன்று.
வாக்குறுதியை நிறைவேற்றுவது
திருமணத்திற்கு முன்பு பெண்ணும் ஆணும் தங்கள் துணையிடம் பலவிதமான வாக்குறுதிகளை அறிவித்திருப்பார்கள் ஆனால் திருமணத்திற்குப் பின்பு அதனை கடைப்பிடிப்பது என்பது மிக கடினம்.
பிறந்த நாள், திருமண நாள் அல்லது வேறு ஏதேனும் முக்கியமான நாட்கள் என்பதை நீங்கள் மறந்தாலும் அல்லது உங்கள் துணைக்கு நினைவூட்டினாலும் அதனை ஒரு பிரச்சினையாக கருதாமல் பெருந்தன்மையோடு நடந்து செல்ல வேண்டும்.
அப்படி கடந்து செல்பவர்களை வாழ்க்கை துணையாக சேர்த்துக்கொள்ளலாம்.
தெளிவான சிந்தனை தேவை
இன்றைய காலகட்டங்களில் பணிச்சூழல் காரணமாக அல்லது குடும்பத்தின் மேல் இருக்கும் அக்கறை காரணமாக திருமணத்திற்கு முன்பு அல்லது பின்பு சுயநலம் சார்ந்து யோசிப்பது வழக்கம்.
ஆனால் உங்கள் துணைக்கு ஆயிரம் கனவுகள் லட்சியங்கள் இருக்கும் அவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டுமே தவிர சுயநலமாக சிந்தித்து அவர்களின் எண்ணத்திற்கு முட்டுக்கட்டை போடக்கூடாது.
How to choose best life partner 7 tips உங்களுடைய திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன சந்தோசத்தில் தான் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி இருக்கும் என்பதால் கேட்பதற்கு ஆசையாக இருந்தாலும்,அதனை கவனித்துக்கொண்டு நிறைவேற்ற முயல வேண்டும்.
அதே நேரம் தம்பதிகள் இருவரும் 24 மணி நேரமும் பணம் வேலை பற்றியே சிந்திக்காமல்,வாழ்க்கை துணையை பற்றியும், குடும்பத்தைப் பற்றியும், சந்திப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
மனம் திறந்து பாராட்டுங்கள்
எல்லோருக்கும் எல்லா விஷயங்களைப் பற்றியும் முழுமையாகத் தெரியாது ஆனால் உங்களில் பலருக்கும் எல்லாம் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளக் கூடாது.
எனவே உங்களுடைய வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் பொருட்கள் அல்லது ஏதேனும் தெரிந்த விஷயத்தை பற்றி பேசும் போது எப்போதும் அவர்களை பாராட்டுவது அல்லது அவர்களின் தேர்வுகளை மதிப்பது.
How to choose best life partner 7 tips நீ சொன்னால் சரியாக இருக்கும் என அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பது, போன்ற பண்புகள் நல்ல வாழ்க்கைத்துணை உதாரணமாக இருக்கும்.
காரணம் பலருக்கு பிறந்த வீட்டில் சில நேரங்களில் இந்த பாராட்டு ஒத்துழைப்பு என்பது கிடைக்காமல் இருக்கும்.
அவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கை துணை இப்படி எல்லாம் செய்ய வேண்டுமென பெரும் கனவுகளோடு பார்த்து இருப்பார்கள், எனவே இதனை எப்போதும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.
ஆதிக்கம் செலுத்தக் கூடாது
உங்களுக்கு இருக்கும் உணர்வுகள் போல் உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கும் உணர்வுகள் இருப்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
How to choose best life partner 7 tips இருவருக்கும் குடும்ப கனவுகள், நண்பர்கள், ஆசைகள் என பலவிதமான விஷயங்கள் இருக்கும்.
ஆனால் பிறர் முன்னிலையில் உங்களை கட்டுப்படுத்துவது, உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது, போன்றவற்றை செய்யும் நபர்களை தேர்வு செய்யக்கூடாது.
உங்களில் பலரும் வாழ்க்கை துணை மீதுள்ள அன்பால் முதலில் இடம் கொடுத்துவிட்டு பின்னாளில் தனது எண்ணங்களை மதிக்காமல் இருக்கும் நபரை துணையாக தேர்வு செய்துவிட்டோம் என்று மனம் வருந்துவது வழக்கம்.
எனவே உங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க தேவையான அடிப்படை குணநலன்களில் இது மிக முக்கியமானது.
குடும்ப பொறுப்பு
How to choose best life partner 7 tips ஒரு நபர் குடும்பத்துடன் எவ்வாறு அன்பாக பழகுகிறார் எந்த அளவுக்கு விட்டுக்கொடுத்து செல்கிறார் என்பதை வைத்து ஒரு நபரின் குணநலங்களை மதிப்பீடு செய்து விடலாம்.
தன்னுடைய துணையின் குடும்பத்தையும் தன் குடும்பம் போல் பாவித்து அவர்களின் நல்லது கெட்டதுகளில் முன் நின்று அனைத்தையும் செய்யும் நபரை பெற்றிருப்பது உண்மையில் அதிர்ஷ்டசாலிதான்.
பலருக்கு குடும்ப கடமைகளில் ஒன்று இருக்கும், ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் தங்கள் குடும்ப கடமைகளை நிறைவேற்ற கடுமையாக போராடுவார்கள்.
அந்த நேரத்தில் பொருளாதாரத்தில் கை கொடுப்பது அல்லது அந்த கடமையை நிறைவேற்ற வேறு ஏதேனும் வழி சொல்வது போன்ற சின்னச் சின்ன விஷயங்களில் பக்க பலமாக இருந்தால் அது ஒரு சிறந்த வாழ்க்கைத் துணைக்கு உதாரணம்.