How to clean kidney Best tips in tamil 2022
உங்களுடைய சிறுநீரகம் சுத்தமாக உள்ளதா அதை சுத்தப்படுத்துவது எப்படி முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்..!
இயற்கையான சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை எப்பொழுதும் சாப்பிடுவதன் மூலம்.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலமும் சிறுநீரகம் மற்றும் உடல் உள்ளுறுப்புகளை நீண்டகாலம் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
நமது உடலில் உள்ள இரண்டு சிறுநீரகங்களில் முக்கியமான செயல்பாடு இரத்தத்தை சுத்தப்படுத்துவது, அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றுவது, நச்சுக்கள் மற்றும் பிற கழிவுகளை வெளியேற்றுவது ஆகும்.
இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதிலும், ரத்த அழுத்தத்தை சீர் செய்வதில், முக்கிய பங்கு வகிக்கிறது சிறுநீரகம்.
ஒருவேளை துரதிஷ்டவசமாக சிறுநீரகம் சேதம்மடைந்தால் மனித உடலால் இந்த செயல்பாடுகளை திறமையுடன் செய்து முடிக்க முடியாது, இந்த நிலையில் உங்களுடைய ஆரோக்கியம் மிக மோசமாக பாதிப்படையும்.
சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலமும் சிறுநீரகத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
நீங்கள் ஆரோக்கியமில்லாத உணவை உட்கொண்டாலும், போதுமான திரவங்களை உட்கொள்ளாமலும், நச்சுத்தன்மையுள்ள பொருட்களை எடுத்துக் கொண்டாலும், உங்களுடைய சிறுநீரகம் பாதிப்படையும்.
நீங்கள் உட்கொள்ளும் உணவில் பலவித தேவையற்ற பொருட்களும், ரசாயனங்களும், கலந்திருப்பதால் சிறுநீரகங்களை அவ்வப்போது சுத்தப்படுத்தி புத்துயிர் கொடுப்பது மிக முக்கியமாகும்.
சிறுநீரகங்கள் சுத்திகரிப்பு
How to clean kidney Best tips சிறுநீரகங்கள் சுத்திகரிப்பு என்பது சிறுநீரகங்களை சுத்தம் செய்யும் ஒரு செயல்முறையாகும், இது ஒரு வகை உணவு கட்டுப்பாடு ஆகும், இது சிறுநீரகங்கள் சரியாக செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிக தண்ணீர் குடிப்பது, சிவப்பு திராட்சை சாப்பிடுவது, இளநீர் சாப்பிடுவது,சீரகம் தண்ணீர் குடிப்பது, மாதுளம் பழம், ஆரஞ்சு பழம், தர்பூசணி பழம், போன்ற பல வழிகளில்.
சிறுநீரகத்தை சுத்தப்படுத்த முடியும், இந்த உணவுகள் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் மற்றும் பிற கழிவு பொருட்களை வெளியேற்றி சிறுநீரக நோய் அபாயத்தை முற்றிலும் குறைக்கும்.
சிறுநீரக பிரச்சனையின் சில அறிகுறிகள்
வாந்தி குமட்டல்
கணுக்கால் வீக்கம்
கால்களில் வலி
அடிக்கடி சிறுநீரக கற்கள் பிரச்சினை வருவது
உடல் களைப்பாக உணர்வது
வாயில் மோசமான சுவை உணர்திறன்
சிறுநீர்ப்பாதையில் தொற்று இருப்பது
சிறுநீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படுவது
How to clean kidney Best tips சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் இயற்கை வைத்தியம் அல்லது நாட்டு வைத்தியம் அல்லது சித்த வைத்தியம் அல்லது பாரம்பரிய அல்லதுவைத்தியம் எடுத்துக் கொள்வதற்கு முன்பு.
மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிக முக்கியம் ஏனென்றால் உங்களுடைய சிறுநீரகத்தின் செயல்பாடு எந்த அளவில் உள்ளது என்பதை தெரிந்து கொள்வது மிக மிக முக்கியம்.