How to clear the nose block 8 best tips
மூக்கடைப்பு சரி செய்ய வீட்டு வைத்தியம் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
அடிக்கடி மூக்கு அடைத்துக் கொள்ளும் பிரச்சனை குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கும்.
பெரும்பாலும் சைனஸ் தொல்லை இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை இன்னும் அதிகமாகவே இருக்கும்.
குழந்தைகளும் இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ன செய்யலாம் சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் மூலமாகவே முழுமையாக குணப்படுத்திவிட முடியும்.
குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கும் மூக்கடைப்பு பிரச்சினை என்பது மிக அதிகமாக இருக்கும் இதில் இளைஞர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.
இந்த மூக்கடைப்பு பிரச்சனை அடிக்கடி எல்லா நபர்களுக்கும் ஏற்படும் இதனை எளிதான முறையில் சரி செய்யும் முறைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களுடைய ஆரோக்கியத்திற்கு நன்றாக அமையும்.
மூக்கடைப்பு பிரச்சனையா அதிகமாக இருந்தால் இரவில் மூச்சு விடுவது மிகவும் சிரமமாக அமையும், ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது மிக கடினமான காலம்மாகும்.
மூக்கடைப்பை நீக்கும் வைத்திய முறைகள்
மிதமான சூட்டில் தைல இலை சேர்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு பிரச்சினை சரிசெய்துவிடலாம் இது உடல் சூட்டையும் குறைக்கும்.
தேன் மிளகு
10 மிளகை இரவில் தேனில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிடலாம் இதனால் மூக்கடைப்பு விரைவில் குணமாகும்.
கைக்குட்டை
கைக்குட்டையில் இரண்டு அல்லது மூன்று துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய் விட்டு தொடர்ந்து முகர்ந்து பார்த்தால் மூக்கடைப்பு பிரச்சினை சரியாகும்.
ஒத்தடம்
இளஞ்சூடான நீரில் ஹாட் பேக் ஒத்தடம் கொடுப்பதை போடவும் இளஞ்சூடாக முகம் முழுவதும் ஒத்தடம் கொடுக்கலாம் குறிப்பாக மூக்கை சுற்றியுள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுப்பது மிக நல்லதாக அமையும்.
யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய்
யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் விட்டு ஆவி பிடித்திட மூக்கடைப்பு நீங்கும் மூன்று அல்லது நான்கு சொட்டு விட்டால் போதுமானது.
மூலிகை டீ
சுக்குக் காபி, இஞ்சி டீ, புதினா, ஆகியவற்றை குடிக்கலாம், மிளகு கசாயம், இஞ்சி சுக்கு கசாயம், ஆகியவையும் மூக்கடைப்பை சரிசெய்யும்.
கை கால் மரத்துப்போதல் சரியாக பாட்டி வைத்தியம்
இஞ்சி ஸ்டீம்
வெண்ணீரில் இஞ்சித் துருவலைப் போட்டு ஆவி பிடிப்பது நல்ல தீர்வாகும் இஞ்சியின் காரம் மூக்கின் வழியாக சென்று அடைப்பை நீக்கி விடும்.
The best health benefits of saffron 2022
நீர்ச்சத்து
நீர்ச்சத்து உடலில் குறையாமல் பார்த்துக் கொள்வது மிக நல்லதாக அமையும் நீர்ச்சத்து குறைந்தால் கூட கடினமான பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கும்.