How to control rhinoceros beetle best 8 tips
தென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டுகளில் இருந்து தோப்புகளை எவ்வாறு பாதுகாப்பது..!
தென்னை மரத்தை தாக்கும் பூச்சிகளில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியது காண்டாமிருக வண்டு, இது ஸ்கேராபிடே குடும்பத்தையும் கோலியோப்டெரா வரிசையும் சேர்ந்தது.
இதன் தாக்குதல் தென்னை மட்டுமின்றி பாக்கு, எண்ணெய் பசை,ஈச்சை மரம், பனைமரம், ஆகியவற்றிலும் காணப்படுகிறது.
இந்தப் பூச்சியின் வண்டு பருவம் மட்டுமே பயிரை தாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது.
How to control rhinoceros beetle best 8 tips இதன் புழுக்களை மக்கிய இலை, தலைகள், அங்கங்க பொருட்கள், ஆகியவற்றின் மீது காண முடியும்.
இவ்வண்டின் கடினமான உடல் அமைப்பு உடலை சுற்றியுள்ள வழவழப்பான தன்மையும் இதைக் கட்டுப்படுத்துவதற்கு பெரிய சவாலாக இருக்கிறது.
இந்தியா மட்டுமின்றி தென்கிழக்கு ஆசியா, பிலிப்பைன்ஸ், சீனா, ஆகிய நாடுகளிலும் இந்த வண்டியின் தாக்குதல் அதிகமாக இருக்கிறது.
காண்டாமிருக வண்டுகள் இளம் தென்னை மட்டைகளை அதன் நுனியில் இருந்து உண்ண ஆரம்பிக்கும்.
தாக்குதலுக்கு உட்பட்ட மட்டைகள் வெளியே வந்து விரியும்போது மட்டைகளின் பக்கவாட்டில் உள்ள இலைகள் ”v” வடிவில் உண்ணப்பட்டிருப்பதை காண முடியும்.
முதிர்ந்த வண்டுகள் மட்டைகளின் அடிவரை சென்று நார்களை சேதப்படுத்துவதால் மட்டைகள் வலுவிழந்து முறிந்து விடும்.
How to control rhinoceros beetle best 8 tips மட்டைகளின் அடிப்பகுதியில் காணப்படும் அரை வட்ட வடிவ வெட்டுக்கள் பூச்சியின் தாக்குதலுக்கு உட்பட்டு இருப்பதை கண்கூடாக காணலாம்.
சில நேரங்களில் மட்டைகளின் அடிப்பகுதியில் திரவம் போன்ற வடிதல் காணப்படும் காண்டாமிருக வண்டு தாக்குதலின் அடிப்பகுதியாக கருதப்படுகிறது.
தாக்குதலுக்கு உட்பட்ட தென்னை மரங்களின் ஒலி சேர்க்கையும் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்படும்.
முதிர்ந்த பெண் வண்டுகள் மிகச் சிறிய அளவிலான நீள் வட்ட வடிவ முட்டைகளை மக்கும் நிலையில் உள்ள உர குழிகள் அல்லது அங்கங்க பொருட்கள் மீது சுமார் 5 சென்டிமீட்டர் முதல் 10 சென்டிமீட்டர் ஆழம் வரை 100 முதல் 150 முட்டைகள் வரை இடும்.
How to control rhinoceros beetle best 8 tips இவை 10 முதல் 15 நாட்களில் புழுக்களாக வெளியில் வந்து மக்கிய நிலையில் இருக்கும் உரங்கள் புழுக்களை உண்டு வாழும் ”c” வடிவிலான வெள்ளை நிற புழுக்கள் வாழிடத்தின் வெப்பநிலைக்கேற்ப சுமார் 100 முதல் 1060 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து.
தன்னை சுற்றிலும் மண் மற்றும் பிசின் போன்ற படலத்தை உருவாக்கி 10 முதல் 15 நாட்கள் தங்கி இருந்து வளர்ச்சி அடைந்த வண்டுகளாக உருமாறி பறந்து அருகில் உள்ள தென்னை மரங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்த தொடங்கும்.
How to control rhinoceros beetle best 8 tips காண்டாமிருக வண்டுகள் சுமார் 200 நாட்கள் உயிர் வாழக்கூடியவை கூட்டுக்குழு பருவத்தில் இருந்து வெளியே வரும் பெண் வண்டுகள் சுமார் 25 முதல் 50 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்துவிடும்.
ஆண் வண்டுகளுடன் இணைந்து மீண்டும் இனச்சேர்க்கை செய்து முட்டையிட தொடங்கும் ஒரு தலைமுறை மட்டுமே பூர்த்தி செய்யும் வண்டுகள்.
கடினமான உடல் அமைப்பையும் தலையின் மேற்பகுதியில் நீண்டு வளைந்து கொம்பையும் கொண்டிருக்கும் பெண் வண்டை விட ஆண் வண்டுக்கு பெரிதாக காணப்படும்.
இதனை தடுப்பது எப்படி
தென்னந்தோப்புகளில் அருகில் உள்ள மக்குநிலையில் உள்ள பொருட்கள் உரக்குழிகள் போன்றவற்றை இல்லாமல் செய்வதன் மூலம் புழுக்கள் உண்டாகாமல் தடுக்கலாம்.
தென்னன் தோப்புக்களின் அருகில் உள்ள மக்கும் குப்பைகளை அடிக்கடி சோதனை செய்து புழுக்களை அளித்து விட வேண்டும்.
உரக்குழிகளில் மெட்டாரைசியம் அனிசோபிலியே என்ற பூஞ்சனத்தை தெளிப்பதன் மூலம் குப்பையில் தோன்றும் புழுக்களை முழுவதும் கட்டுப்படுத்தலாம்.
குருத்துக்களில் காணப்படும் முதிர்ந்த வண்டுகளை கூர்மையான நீளமான இரும்பு கம்பிகளை கொண்டு தாக்கி அழிக்கலாம்.
வேப்பங்கொட்டை தூள் மற்றும் மணலை என்ற 1:2 விகிதத்தில் கலந்து மட்டைகளுக்கு அடியில் வைக்கலாம்.
மண் பானைகளில் ஒரு கிலோ கெட்டுப்போன ஆமணக்கு புண்ணாக்கை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து தென்னந்தோப்புக்களின் வைப்பதன் மூலம் காண்டாமிருக வண்டுகளை கவர்ந்து இழுத்து அழிக்கலாம்.
இரவு நேரங்களில் விளக்கு பொறிகள் வைத்தால் வண்டுகள் கவர்ந்து இழுக்கப்படுகிறது.
பேக்குலோ எனப்படும் வைரஸ் காண்டாமிருக வண்டுகளை அழிக்க வல்லது,10 – 15 வண்டுகளை இவ்வையரஸ் கரைசலுக்குள் நனைத்து தென்னந்தோப்புக்குள் விடுவதன் மூலம் அது மற்ற வண்டுகளுக்கு பரவி கணிசமான அளவில் வண்டுகளை அழித்து விடுகிறது.
ரைனோலியூர் எனப்படும் கவர்ந்திழுக்கும் வேதிப்பொருளை தண்ணீரில் கலந்து ஏக்கருக்கு இரண்டு பக்கெட் என்ற அளவில் வைப்பதன் மூலம் ஆண் பெண் வண்டுகளை கவர்ந்து இழுக்கலாம் அதை தினசரி கவனித்து அழித்துவிட வேண்டும்.