How to Cook Best Chicken Gravy in tamil 2022
சுவையான சிக்கன் கிரேவி இப்படி செய்து பாருங்கள்..!
பொதுவாக அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும் சிக்கனில் பலவகையான உணவு ரெசிபி செய்யலாம்.
அதாவது சிக்கன் பிரியாணி, சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், சிக்கன் 65, சிக்கன் கிரேவி, சிக்கன் பெப்பர் வறுவல், என்று பலவிதமாக அடுக்கிக் கொண்டே போகலாம்.
அவற்றில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது ஒன்றுதான் சிக்கன் கிரேவி.
இந்த சிக்கன் கிரேவி மிகவும் சுவையாக எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
சிக்கன் கிரேவி செய்ய தேவையான மூலப்பொருட்கள்
How to Cook Best Chicken Gravy in tamil 2022 சிக்கன் – உங்களுக்கு தேவையான அளவு
பெரிய வெங்காயம் – இரண்டு (சிறியதாக நறுக்கியது)
தக்காளி – ஒன்று (சிறியதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -இரண்டு (சிறியதாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
நறுக்கிய கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
சுவையான சிக்கன் கிரேவி செய்முறை
அடுப்பில் ஒரு சுத்தமான கடாயை வைத்து அதில் சிறிதளவு கடலை எண்ணெயை ஊற்றவும்,
எண்ணெய் காய்ந்ததும் சீரகம், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
How to Cook Best Chicken Gravy in tamil 2022 இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் சுத்தம் செய்யப்பட்ட சிக்கனை அதில் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் தக்காளி. மிளகு தூள். மல்லி தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து குறைந்தது 20 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.
பின்னர் காரம் மசாலா, கொத்தமல்லி சேர்த்து, எண்ணெயில் தாளித்து பூண்டை இதனுடன் சேர்த்து பின்னர் 5 நிமிடம் கழித்து சிக்கன் கிரேவி அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள்.
அவ்வளவுதான் சுவையான நாட்டுக்கோழி சிக்கன் கிரேவி தயாராகிவிட்டது, இதனை உங்கள் வீட்டில் ஒருமுறை செய்து பாருங்கள் சுவை மிகவும் அதிகமாக இருக்கும்.