How To Download Voter ID Card Digitally 2021

உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் முறையில் எப்படி டவுன்லோட் செய்வது.(How To Download Voter ID Card Digitally 2021)

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டை தினமாக அரசால் அறிவிக்கப்பட்டது மற்றும் கடந்த ஜனவரி 25ஆம் தேதி புதிய திருப்பமாக வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் முறையில் நமது அரசு அறிமுகம் செய்தது.

இந்த சேவை மூலம் வரும் காலங்களில் நடக்கும் தேர்தல்களில் மக்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

இந்தியாவில் ஏற்கனவே ஓட்டுனர் உரிமம் ஆதார் கார்டு, பான் கார்டு, போன்ற முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது இப்போது அதன் வகையில் வாக்காளர் அடையாள அட்டை  இணைக்கப்பட்டுள்ளது.

How To Download Voter ID Card Digitally 2021

இந்தியாவில் அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால் இங்கு தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று நமது அரசு தெரிவிக்கிறது.

மேலும்  முக்கிய ஆவணங்கள் தொலைந்து விட்டாலோ அல்லது தீயில் கருகி விட்டாலோ அதனை மறுபடியும் பெறுவதற்கு நீண்ட காலமாகிறது இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு அனைத்து முக்கிய ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் வைத்துள்ளது.

நமது முக்கிய ஆவணங்களுக்கு ஏதாவது ஒன்று நிகழ்ந்தால் உடனடியாக நாம் டிஜிட்டல் முறையில் உள்ள நமது முக்கிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை உங்களுடைய ஸ்மார்ட் போன் அல்லது கணினி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் அதற்கான அனைத்து வாய்ப்புகளையும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.

பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்தல் ஆணையம் வழிநடத்தும் https://www.nvsp.in/     இந்த   இணையதளத்தில் நீங்கள் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

அதற்கு நீங்கள் முதலில் உங்களுடைய கணக்கை தொடங்க வேண்டும் இதற்கு உங்களுடைய மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடி தேவைப்படும்.

கணக்கை தொடங்கிய பின்பு லாகின் செய்து நீங்கள் உள்ளே நுழைந்தான் Electronic electrical photo identity card. டவுன்லோட் என்ற ஆப்ஷன் இருக்கும் இதனை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.

இந்த டிஜிட்டல் சேவையை   தேசிய வாக்காளர் அடையாள அட்டை தினத்தன்று ஜனவரி 25ஆம் நாள் காலை 11 மணிக்கு நமது அரசின் இணையதளம் மூலம் வெளியிட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யும்.  Like our Twitter page

யார் யார் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

How To Download Voter ID Card Digitally 2021

இந்த சேவையை முதலில் ஜனவரி 25 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

அதற்குப் பின்பு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இந்திய தேர்தல் ஆணையத்திடம் மொபைல் நம்பரை பதிவு செய்தவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வாக்காளர் அடையாள அட்டைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பற்றி மக்கள் பயப்பட வேண்டியதில்லை ஏனென்றால் இதில் பாதுகாப்பு காரணமாக QR  Code அமைக்கப்பட்டுள்ளது இதில் வாக்காளர் அடையாள அட்டை பெயர் விலாசம் வாக்காளர் புகைப்படம் பழைய முகவரி போன்றவைகள் அடங்கியுள்ளது.

top 5 signs of diabetes in tamil

இதனை நீங்கள் அரசின் டிஜிட்டல் லாக்கரில் பதிவேற்றம் செய்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

Join our Telegram Group  Join our Telegram Group

Leave a Comment