How To Fix Alcoholic Liver Damage 5 best tips
How To Fix Alcoholic Liver Damage 5 best tips
மது பழக்கத்தால் பாதிக்கப்படும் கல்லீரலை எவ்வாறு காப்பாற்றுவது..!
அதிக குடிப்பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பை நீங்கள் நினைத்தால் மிக மோசமாவதற்க்குள் சரிசெய்துவிடலாம்.
இல்லை என்றால் மொத்தமாக கல்லீரலை மாற்ற வேண்டிய சூழ்நிலை வந்துவிடும்.
ஒரு ஆண்டுக்கு மட்டும் லட்சக்கணக்கான மக்கள் கல்லீரல் கிடைப்பதற்கு கிடப்பதாகவும் அதில் பாதிக்கும் மேற்பட்ட நபர்கள் இந்த காலகட்டத்தில் உயிரிழந்து விடுவதாக மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கிறது.
விடமுடியாத மது பழக்கத்தால் கல்லீரல் பாதிப்படைந்து கடுமையான உடல்நல உபாதைகளை ஏற்படுத்தும்.
நீங்கள் மனது வைத்தால் இப்போது கூட உங்கள் கல்லீரலை முழுமையாக சரி செய்ய முடியும், கல்லீரல் மற்ற உறுப்புகளை போல அல்ல அதிக சகிப்பு தன்மை வாய்ந்தது.
அதிக குடிப்பழக்கத்தால் உங்கள் கல்லீரல் பாதிப்படைந்து வீங்கத் தொடங்கும் அதையே மதுப்பழக்கம் கல்லீரல் நோய் என்கிறோம்.
இந்த நோய் வந்துவிட்டால் அல்லது இல்லை என்றாலும் கூட நீங்கள் முதலில் செய்ய வேண்டியது மதுப்பழக்கத்தை முழுமையாக கைவிட வேண்டும்.
திடீரென்று மதுப்பழக்கத்தை விடுவதாலும் ஒரு சில பக்க விளைவுகள் உடலில் ஏற்படும் அவற்றை எப்படி எதிர்கொள்வது.
மது பழக்கத்தை முழுமையாக நிறுத்தி உங்கள் கல்லீரலை எப்படி தற்காத்துக் கொள்வது என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மருத்துவ சிகிச்சை முறைகள்
உங்களுக்கான முதல் சிகிச்சை என்னவென்றால் மது பழக்கத்தை முழுமையாக கைவிடுவது மட்டுமே ஏனெனில் உங்கள் கல்லீரல் பாதிக்கப்பட்ட பிறகும்.
நீங்கள் தொடர்ந்து மது பழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தால் அது மேலும் உங்கள் கல்லீரலை செயலிழக்க செய்துவிடும்.
அதுமட்டுமின்றி அது சார்ந்த உடல் பிரச்சனைகளை அதிகமாக தூண்டி விடும்.
எனவே முதலில் நீங்கள் மது அருந்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் அப்படி திடீரென்று மது பழக்கத்தை நிறுத்தும் போது உடலால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதனால் சில தீவிரமான உடல் அறிகுறிகள் வெளியிடும் ஆனால் நீங்கள் ஒரு மருத்துவமனை மூலம் இதற்கான சிகிச்சை மேற்கொண்டால் அதற்கான அறிகுறிகளுக்கு சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும்.
மது பழக்கத்தை கைவிட்ட பின் ஏற்படும் உடல் அறிகுறிகள்
பதட்டமான மனநிலை
அதிகப்படியான கோபம்
உடல் சோர்வு
அதிக வியர்வை
கடுமையான தலைவலி
வாந்தி
குமட்டல்
மயக்கம்
மனநிலை மாற்றம் ஆகியவை ஏற்படும்
முறையான சிகிச்சை மூலம் குறிப்பிட்ட கால அளவில் இந்த உடல் உபாதைகளை முழுமையாக குணப்படுத்திவிடலாம்.
நீங்கள் இந்த மருத்துவ சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பே நீங்கள் இந்த நோயால் அதிகமான உடல் சத்துக்களை இழந்து இருப்பீர்கள்.
மேலும் சிகிச்சை தொடங்கிய பிறகு ஏற்படும் தொடர் வாந்தி மற்றும் குமட்டல் காரணமாக சரியான ஊட்டச்சத்து உணவை உங்களால் எடுத்துக் கொள்ள முடியாது.
ஆனால் இதுபோன்ற சூழலில் ஊட்டச்சத்துள்ள உணவு என்பது அவசியம்.
எனவே மருத்துவர்கள் முதலில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாதாரண முறையில் உங்களுக்கு வழங்க முயற்சிப்பார்கள்.
அது முடியாத பட்சத்தில் நேரடியாக உங்கள் வயிற்று பகுதியில் துளையிட்டு குழாய் மூலம் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உங்களுக்கு செலுத்துவார்கள்.
இதனால் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்களுக்கு கிடைக்கும்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பலன் தருமா
பல நபர்கள் முற்றிலுமாக தங்களது கல்லீரல் செயலிழந்த பிறகுதான் மருத்துவமனைக்கு வருகிறார்கள் அதுபோன்ற சூழ்நிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழி.
How To Fix Alcoholic Liver Damage 5 best tips மேலும் மிகத்தீவிரமான கல்லீரல் பாதிப்புகளில் அவற்றிற்கு வெறும் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களை விட மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் தான் அதிக நாட்கள் உயிர் வாழ்வதாக மருத்துவ தரவுகள் தெரிவிக்கிறது.
பாதிப்பின் பக்கவிளைவுகளுக்கான சிகிச்சை
கல்லீரல் சிரோசிஸ் என்று சொல்லப்படும் நோய் நீண்ட காலமாக உங்கள் கல்லீரல் சேதம் அடைந்து வருவதால் உங்கள் கல்லீரலை கடினமாக மாற்றி செயல்பட முடியாமல் செய்து செயலிழக்க செய்துவிடும்.
இந்த நிலையை முழுமையாக குணமாக்க முடியாது ஆனால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி.
நீங்கள் மருந்து மாத்திரை மற்றும் உணவு கட்டுப்பாட்டில் இருந்தால் இதை முழுமையாக தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
How To Fix Alcoholic Liver Damage 5 best tips உங்களுடைய வயது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரித்தல்
அதிக சோடியம் நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
முறையான மருத்துவ சிகிச்சைகளை சரியான நேரத்தில் மேற்கொள்ள வேண்டும்.
முக்கியமாக மது பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
உயரழுத்த ரத்த போக்கை சரி செய்ய வேண்டும்
How To Fix Alcoholic Liver Damage 5 best tips கல்லீரல் பாதிப்பால் உடலுக்குள் செல்லும் ரத்தம் முறையாக செல்ல முடியாது.
மேலும் உயர் ரத்த அழுத்தத்தினால் உங்கள் வயிற்றுப் பகுதி அல்லது உணவுக் குழாயில் உள்ள நரம்புகள் வீங்கி வயிற்றுக்குள்ளேயே இரத்தம் வடிய தொடங்கிவிடும்.
இதை எண்டோஸ்கோபி மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.
அப்படி மிகத் தீவிரமான ரத்தப்போக்கு கண்டறிந்தால் உடனடியாக தீவிரமான மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வயிற்றில் நீர்கோர்த்தல் ஏற்படும்
How To Fix Alcoholic Liver Damage 5 best tips அதிகப்படியான சோடியம் நிறைந்த உணவுகளை கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கும் காலங்களில் நீங்கள் எடுத்துக் கொள்வதால் அடிவயிற்றில் நீர் கோர்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இதை மருத்துவர் அகற்றுவதற்கு ஒரு ஊசியை வயிற்றில் செலுத்தி அதன் மூலம் கெட்ட நீரை வெளியே எடுப்பார்.
இது வராமல் இருக்க சோடியம் நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
மூளை பாதிக்கப் படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
How To Fix Alcoholic Liver Damage 5 best tips கல்லீரல் செயலிழக்கும் போது அல்லது அதனால் ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்க முடியாமல் போகும்போது உங்கள் மூளையில் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
குழப்பம்,கோபம், சரியாக சிந்தனை செய்ய முடியாத சூழ்நிலை, தூக்கமின்மை, சில நேரங்களில் இது கோமாவுக்கு கூட அழைத்துச் செல்லும் வாய்ப்பு உள்ளதால்.
இதற்கு உங்களுடைய உணவில் மாற்றம் செய்ய வேண்டும் மற்றும் உடற்பயிற்சி, யோகா, போன்ற சிகிச்சைகளை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.