How to get government job best tips 2023
2023 ஆம் ஆண்டு அரசு வேலை வாய்ப்பு பெறுவது எப்படி..!
தனியார் துறை அல்லது உங்களால் சுயமாக தொழில் தொடங்க முடியவில்லை என்றால் உங்களுக்கு இருக்கின்ற ஒரே வாய்ப்பு அரசு வேலை.
தனியாத் துறையில் நீங்கள் வேலை செய்ய விரும்பினால் நீங்கள் மிகப்பெரிய ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும், குறிப்பாக நிறுவனத்தின் மேலாண்மை நிலைக்கு நீங்கள் செல்ல வேண்டும் அப்பொழுதுதான் உங்களுக்கு பணி பாதுகாப்பு என்பது தனியா துறையில் இருக்கும்.
உங்களால் சொந்தமாக தொழில் தொடங்க முடியவில்லை அல்லது உங்களிடம் சரியான பணம் இல்லை, உங்களுக்கு ஒரு வழிகாட்டுதல் இல்லை என்றால் நீங்கள் அரசுத்துறை வேலையை தேர்ந்தெடுக்கலாம்.
வாழ்க்கையில் பணி பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு என்பது, மிக முக்கியம் அரசு வேலை நிச்சயம் உங்களுக்கு பொருளாதார பாதுகாப்பு, பணி பாதுகாப்பை கொடுக்கும்.
இந்த கட்டுரையில் 2023 அரசாங்க வேலை பெறுவது எப்படி என்பதை பற்றி சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
வருடம் தோறும் அரசு வேலை வாய்ப்பு அரசு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
தமிழகத்தில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் வருடம் தோறும் வேலைக்கு விண்ணப்பம் செய்கிறார்கள், ஆனால் எத்தனை நபர்கள் முயற்சி வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் இங்கு முக்கியமான ஒரு விஷயம்.
How to get government job best tips 2023 மத்திய மாநில ரயில்வே SSC,TNPSC,UPSC மற்றும் வங்கி வேலைகளுக்கு வருடம் தோறும் 10,000 கணக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்படுகிறது.
இருந்தாலும் குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே அதில் வெற்றி பெற்று அரசு வேலையில் சேர்கிறார்கள்.
வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்வது எப்படி
அரசு வேலைகளுக்கு முதல் படியாக அனைவரும் செய்வது தினம்தோறும் வெளியாகும் வேலை வாய்ப்பு செய்தித்தாள்களை படிப்பது.
இந்த நவீன இணையதள உலகத்தில் அனைத்து தகவல்களையும் எளிமையாக தெரிந்து கொள்ளலாம் உங்களுடைய கைபேசி மூலம்.
அந்தந்த இலாக்களுக்கான அறிவிப்பு வெளியானவுடன் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தனியார் வலைத்தளமான ( www.Liveintamilnadu.com ) உதவுகிறது.
How to get government job best tips 2023 இது மட்டுமின்றி இணையதளம் விண்ணப்ப படிவங்கள் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்கும் இணையதளம், விண்ணப்பிக்கும் கடைசி நாள், விண்ணப்பிக்க எவ்வளவு கட்டணம், என அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.
திட்டமிட்ட பயிற்சி தேவை
விண்ணப்பித்தவுடன் நம்மில் பலரும் செய்யும் தவறு தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அல்லது சில மாதங்கள் படித்து தயார் செய்து கொள்ளலாம் என்பதுதான் இது மிகவும் தவறான அணுகுமுறை.
How to get government job best tips 2023 முதலில் அந்த தேர்வுக்கான பாடத்திட்டம் (Exam Syllabus Details) மற்றும் மதிப்பெண் முறையை, அந்தத் தேர்வு நடைபெறும் முறை, தேர்வு மதிப்பெண் வழங்கும் முறை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
பிறகு இதனை பயன்படுத்தி தேர்வு கால அட்டவணை நிச்சயம் உருவாக்க வேண்டும்.
பெரும்பாலும் அரசு தேர்வுக்கான ( Sarkari Naukri ) பாடத்திட்டங்கள் அனைத்தும் சிறு வயது முதல் பட்டப் படிப்பு வரை பயின்ற வகையை தான் இருக்கும்,ஆகையால் அதற்காக தினமும் சில மணி நேரங்களை நிச்சயம் நீங்கள் ஒதுக்க வேண்டும் உங்களுடைய வாழ்க்கையில்.
Quantitative Aptitude And Reasoning Numerical Ability அனைத்திற்கும் அடிப்படையான சூத்திரங்கள் எனவே தினமும் பயிற்சி ஆரம்பிக்கும் முன் சூத்திரங்களை நினைவுபடுத்துதல் மிகவும் நன்று.
How to get government job best tips 2023 பிறகு இதர பாடங்களுக்கான தேர்வு நாளை பொறுத்து அட்டவணை மேற்கொள்ளுங்கள் உதாரணமாக 5 பாடங்களுக்கு 60 நாட்களுக்கு இருக்குமாயானால்.
ஒரு பாடத்திற்கு 10 முதல் 12 நாட்கள் செலவிட வேண்டும், எந்த ஒரு பகுதியையும் அலட்சியமாக விட்டுவிடாமல் அனைத்தையும் நிதானமாக புரிந்து படியுங்கள்.
Join our government jobs WhatsApp group – click here
மாதிரி வினாத்தாள்கள் நிச்சயம் தேவை
நீங்கள் ஒரு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என விரும்பினால் நிச்சயம் அந்த தேர்வின் பழைய மாதிரி வினாத்தாள்களை முழுவதும் அலசி ஆராயுங்கள்.
எந்த மாதிரி வினாக்கள் கேட்கப்படுகிறது,வினாக்களுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும், ஒரு வினாவிற்கு எவ்வளவு நேரம் ஒதுக்கப்படுகிறது என்பது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
How to get government job best tips 2023 அனைத்து பாடங்களையும் படித்து முடித்த பின் மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க வேண்டும்,கூறியது போல் முந்தைய ஆண்டு கேள்வித்தாள்களும் (Previous Year Question Paper) மற்றும் வினாத்தாள்களுக்கான விடைகளும் நமது வலைத்தளத்தில் இருக்கிறது.
முடிந்தவரை அனைத்து ஆண்டு கேள்வித்தாள்களை முயற்சி செய்து பாருங்கள் மேலும் பல்வேறு இணையதளங்கள் மாதிரி தேர்வுகளையும் (Mock Test) நடத்துகிறது.
இவை அனைத்தையும் பயிற்சி செய்தால் வெற்றி என்பது மிக நிச்சயம் உங்களுக்கு.
கூடுதல் திறன்கள் தேவை
இன்று உலகம் கணினி மயமாகிவிட்டது அதில் அரசு அலுவலகங்களும் இணைந்து விட்டது ஆகையால் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களுடைய கணினி தனித்திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுதல் என்பது மிகவும் அவசியம்.
(Type Writing) தட்டச்சு கணினி பயன்பாடு மற்றும் அந்தந்த துறைகளுக்கு சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்வது மிக முக்கியம் எடுத்துக்காட்டாக தற்காலிக நிகழ்வுகளை ( current affairs ) விரல் நுனியில் வைத்துக்கொள்ள வேண்டும்.
நினைவில் கொள்ளுங்கள் பொது அறிவிற்கும் தற்காலிக நிகழ்வுகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன, தினமும் 30 நிமிடங்கள் இதற்காக தனியாக ஒதுக்குங்கள்.
மன வலிமை உடல் வலிமை மற்றும் பொறுமை தேவை
How to get government job best tips 2023 நீங்கள் பல மாதங்கள், பல வருடங்கள், பல நாட்கள் அல்லும் பகலும் தயார் செய்து கடைசியாக தேர்வு அறைக்கு சென்று அங்க பதட்டப்பட்டு அனைத்தையும் மறந்து விடுவீர்கள்.
இதை மிகப்பெரிய ஒரு முட்டாள்தனம் எத்தனையோ நபர்கள் இந்த திறமையை வளர்க்க தவிர்த்து விடுகிறார்கள்.
24 மணி நேரமும் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது இல்லை, ஏனென்றால் அது மன அழுத்தத்தையும் பயத்தையும் உருவாக்கும்.
அதனால் சிறிது நேரம் உடற்பயிற்சி, தியானம், யோகம், போன்றவற்றை மேற்கொள்ளுங்கள், இது கவனத்தை ஒரு நிலைப்படுத்த உதவும், பிறகு தேர்வு என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது.