How to get land document copy online 2022
தொலைந்து போன சொத்து பத்திரத்தை இணையதளம் மூலம் மறுபடியும் பெறுவது எப்படி..!
சொத்து உரிமையாளர்கள் சொத்து பத்திரத்தை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத விதத்தில் மிகவும் பத்திரமாகவும் பாதுகாப்புடன் வைத்திருப்பார்கள்.
இருப்பினும் சில சமயங்களில் அந்த பத்திரம் துரதிஷ்டவசமாக தொலைந்து போகும் நிகழ்வுகள் நடந்திருக்கும், என்னதான் அந்த சொத்து உரிமையாளர் என்றாலும் கூட.
ஏதாவது வீட்டு சூழ்நிலைக்கு பணம் தேவைப்படும் போது அந்த சொத்து பத்திரத்தை அடமானம் வைத்து பணம் பெற முடியும் அந்த சமயத்தில் சொத்து பத்திரம் இல்லை என்றால்.
வங்கி அதிகாரி பணம் வழங்க மாட்டார்கள் சொத்தின் உரிமையாளர் மிகவும் கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்.
முன்பெல்லாம் தொலைந்துபோன அல்லது பழைய சொத்து பத்திரம் நகல் எடுக்க தாலுகா அலுவலகத்திற்கு நேரில் சென்று அவர்கள் கேட்கும் அனைத்து ஆவணங்களும் சமர்ப்பித்து அலைந்து திரிந்து பெற முடியும்.
அவ்வாறெல்லாம் சொத்தின் உரிமையாளர் அலைய வேண்டிய சூழ்நிலை இல்லை இப்பொழுது சொத்தின் உரிமையாளர் முயற்சி செய்தால் இணையதளம் மூலம் வீட்டில் இருந்தபடியே தொலைந்து போன சொத்து பத்திரத்தை பெற்றுவிட முடியும்.
இணையதளம் மூலம் சொத்து நகல் பத்திரம் பெறுவது
https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதள முகவரிக்குச் முதலில் செல்லுங்கள் இப்பொழுது இணையதளத்தின் முகப்பு பகுதியில் ஓபன் ஆகும் ஏற்கனவே இந்த இணையதளத்தில் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்து இருந்தால்.
அவற்றை உள்நுழைவு என்ற இடத்தில் தங்களுடைய பெயர் பாஸ்வேர்ட் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா கோட்டை கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள்.
தங்கள் இதுவரை இந்த இணையதளத்தில் லாகின் செய்ய வில்லை என்றால் பயனாளர் பதிவு என்பதை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும்.
பின்பு அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்தி செய்து தங்களுடைய கணக்கு உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு தங்கள் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP வரும், இந்த OTP எண்களை உள்ளிட்டால் தங்களுடைய கணக்கு தொடங்கி விடும்.
பிறகு முகப்பு பக்கத்திற்கு வந்து தங்களுடைய யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை மறுபடியும் கொடுத்து லாகின் செய்து கொள்ளுங்கள் இப்போது நீங்கள் இணையதளத்தின் முகப்பு பகுதியில் செல்லலாம்.
பத்திரம் நகல் எடுப்பது எப்படி குறிப்பு 1
பிறகு மின்னணு சேவை என்ற விருப்பத்தை கிளிக் செய்யவேண்டும் அவற்றில் சில வகையான தேர்வுகள் காட்டப்படும் அவற்றில் சான்றளிக்கப்பட்ட நகல் என்ற தேர்வை கிளிக் செய்யவேண்டும்.
அதன்பிறகு தேடல் மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல் விண்ணப்பிக்க என்ற தேர்வு இருக்கும், அதனை கிளிக் செய்தால் இப்பொழுது புதிதாக ஒரு பக்கம் திறக்கும்.
அந்தப் பக்கத்தில் ஆவணங்களின் விவரங்களை உள்ளிட வேண்டும் அதாவது அவற்றின் வகைப்பாடு என்ற இடத்தில் சொத்து சம்பந்தப்பட்ட ஆவணம் என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு ஆவண எண் என்பதில் தங்களுடைய வில்லங்கச் சான்றிதழில் உள்ள முக்கியமான எண்ணெய் உள்ளிட வேண்டும்.
பின் சார்பதிவாளர் அலுவலகம் என்ற இடத்தில் நீங்கள் எந்த அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்தார்களோ அந்த அலுவலகத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஆண்டு என்ற இடத்தில் தங்கள் எந்த ஆண்டு பத்திர பதிவு செய்தீர்கள் அந்த ஆண்டை தேர்வு செய்யுங்கள்.
பிறகு அவற்றில் காட்டப்பட்டுள்ள கேப்ட்சா கோடினை உள்ளது போல் டைப் செய்து தேடுக என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
தேடுக என்பதை நீங்கள் கிளிக் செய்தவுடன் அந்த பக்கத்தின் கீழ் பகுதியில் தங்கள் பதிவு செய்த ஆவணங்களின் விவரங்கள் பதிவாகிவிடும்.
சொத்து நகல் பத்திரம் பெறுவது குறிப்பு 2
பிறகு இணையுவழி விண்ணப்பிக்க என்ற தேர்வு இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும் பிறகு மற்றொரு புதிய பக்கம் திறக்கும்.
அதாவது தனிப்பட்ட விவரங்கள் என்ற பக்கம் திறக்கப்படும், அவற்றில் தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும்.
அதாவது பத்திரம் யாருடைய பெயரில் உள்ளது அவருடைய பெயர் மற்றும் அவருடைய தொலைபேசி எண், ஆகியவற்றை உள்ளீடு கொடுத்து சேமிக்க வேண்டும் மற்றும் அடுத்த பக்க என்ற தேர்வினை கிளிக் செய்ய வேண்டும்.
இப்பொழுது தங்கள் விண்ணப்பித்த விண்ணப்பங்கள் சரியாக உள்ளது என்றால் சரி என்ற விருப்பத்தை கிளிக் செய்து மறுபடியும் உள்நுழையுங்கள்.
இப்பொழுது கட்டண விவரங்கள் என்ற புதிய பக்கம் திறக்கும் அவற்றில் தாங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும், தாங்கள் இணையதளம் மூலம் தங்களுடைய கட்டணத்தை செலுத்த வேண்டியதாக இருக்கும்.
சொத்து நகல் பத்திரம் பெறுவது குறிப்பு 3
அதன் பிறகு செலுத்துங்க என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள், அவற்றில் சில விவரங்களை கேட்கப்பட்டிருக்கும், அவற்றை நீங்கள் சரியாக உள்ளிட்டு, தங்களுடைய விண்ணப்பக் கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.
இணையதள பரிவர்த்தனைகள் முடிந்த பிறகு தங்களுக்கு Acknowledge Receipt கிடைக்கும் அதில் கொடுக்கப்பட்டுள்ள விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
அதன் பிறகு டவுன்லோட் ஆப்சன் தோன்றும் அதில் இருக்கும் சிவப்பு கலர் எழுத்தை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு PDF file டவுன்லோட் ஆகும், அதைப் படித்து பார்த்து விவரத்தை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
சொத்து நகல் பத்திரம் பெறுவது குறிப்பு 4
பிறகு இணையதளத்தின் முகப்பு பகுதியில் சென்று மின்னணு சேவை என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள், பிறகு சான்றளிக்கப்பட்ட நகல் என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும், அதன் பிறகு கோரிக்கை பட்டியல் என்ற விருப்பத்தை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
இப்பொழுது இந்த பகுதியின் கீழ் தங்களுடைய அனைத்து விபரங்களையும் காணலாம் அதாவது தங்களுடைய விண்ணப்பத்தின் எண்.
தங்களுடைய பதிவு எண், ஆவணத்தின் வகைப்பாடு, விண்ணப்பம் செய்தால் நாள்,பணம் செலுத்தப்பட்ட தொகை நிலைப்பாடு, நிகழ்நிலை ஆவணம் மற்றும் கையொப்பமிட்ட ஆவணம் போன்ற அனைத்து ஆவணங்களின் விவரங்களும் இருக்கும்.
நீங்கள் இணையதளம் மூலம் பணம் செலுத்தி இருந்தால் நீங்கள் விண்ணப்பித்த ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
எனவே இரண்டு நாள் கழித்து இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தை நீங்கள் சோதனை செய்து பாருங்கள், அதாவது முகப்பு பகுதியில் மின்னணு சேவை என்ற தேர்வை கிளிக் செய்யுங்கள்.
Best Health benefits of no alcohol for 30 days
பிறகு சான்றளிக்கப்பட்ட நகல் என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும், பிறகு கோரிக்கை பட்டியல் என்ற விருப்பத்தை கிளிக் செய்து, அந்த பக்கத்தின் கீழ் பகுதியில் கையொப்பமிடப்பட்ட இடத்தில் டவுன்லோட் என்ற விருப்பம் இருக்கும்.
சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..!
டவுன்லோட் விருப்பம் வந்திருந்தால் டவுன்லோட் செய்து கொள்ளலாம் இந்த மாதிரி உங்களுக்கு தேவையான பத்திர நகல்களை சுலபமாக இணையதளம் மூலம் விண்ணப்பித்து வீட்டிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.