புதியதாக ஆடு வளர்ப்பு தொழில் தொடங்க கடன் உதவி பெறுவது எப்படி.How to get loan assistance for goat rearing in tamil

How to get loan assistance for goat rearing in tamil

புதியதாக ஆடு வளர்ப்பு தொழில் தொடங்க கடன் உதவி பெறுவது எப்படி.

எங்கு பெறுவது, எவ்வளவு தொகை பெறுவது, எத்தனை வருடத்தில் திருப்பி செலுத்துவது, எவ்வளவு பணம் மானியம் கிடைக்கும், போன்ற அனைத்து தகவல்களையும் இங்கு காணலாம்.

இன்றைய காலகட்டங்களில் இறைச்சி விற்பனை என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது,முக்கியமாக கடல் உணவு, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, போன்றவைக்கு அதிக வரவேற்பு மக்கள் இடத்தில் இருக்கிறது.

இதனால் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு வணிகமும் மிகவும் லாபகரமாக மாறி உள்ளது என்பதில் எந்த மாற்றுக் கருத்து இல்லை.

சிறிய முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்களில் இதுவும் ஒன்று, கால்நடை வளர்ப்பு பற்றி பேசும்போது அதில் அதிக லாபம் தரும் தொழில் ஆடு வளர்ப்பது தான்.

இது கிராமப்புறங்களில் அதிகமாக நடக்கும் தொழில், இது சிறிய தொழிலாக இருந்தாலும் அரசு இதனை ஊக்கப்படுத்துகிறது, இதன் மூலம் நாட்டின் வருமானம் அதிகரிக்கிறது.

குறிப்பாக கிராமப்புறங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கிறது, மேலும் ஆரோக்கியமான உணவு உற்பத்தி செய்யப்படுகிறது, என்று மத்திய அரசும், மாநில அரசும் இந்த திட்டத்தை ஊக்குவிக்க பல்வேறு நிதி உதவிகளை வழங்குகிறது.

இவ்வாறு சூழ்நிலையில் ஆடு வளர்ப்பு தொழில் தொடர்பான கேள்விகள் மற்றும் பல முக்கிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆடு வளர்ப்பு தொழில் பற்றிய அடிப்படை தகவல்கள்?

ஆடு வளர்ப்பு தொழில் பற்றி தெரிந்து கொள்ள பல்வேறு வகையான தகவல்கள் நமக்கு கிடைக்கும்,நீங்கள் கிராமப்புறங்களில் வளர்ந்து இருக்கும் நபராக இருந்தால் அதை பற்றி உங்களுக்கு சொல்லத் தேவையில்லை.

ஆடு வளர்க்கும் தொழிலுக்கு மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவி கிடைக்கும் என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.

எனவே நீங்கள் ஆடு பண்ணை தொடங்க விரும்பினால் அல்லது உங்களுடைய நண்பர் தொடங்க விரும்பினால் கடன் பெறுவது குறித்து முழுமையான தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஆடு வளர்ப்புக்கு கடன் உதவி எங்கு கிடைக்கிறது?

நீங்கள் விவசாயி அல்லது வேலையில்லாத இளைஞர்கள் குறைந்தபட்சம் 20 ஆடுகளை வளர்க்க விரும்பினால் அவர்கள் அரசுகளிடம் கடன் மற்றும் மானியம் பெற முடியும்.

அதற்கு நீங்கள் ஆடு வளர்ப்பு திட்ட அறிக்கையில் ஆடுகளை எங்கு வளர்க்க விரும்புகிறீர்கள், என்ன வகையான ஆடு என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

ஆடு வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் நிலத்தை சொந்தமாகவே அல்லது குத்தகைக்கு எடுத்து பண்ணை தொடங்கலாம்.

மேலும் ஆடு பண்ணைக்கு எவ்வளவு நிலம் பயன்படுத்தப்படும், ஆட்டுத்தொழுகை கட்ட எவ்வளவு செலவாகும் என்பது போன்ற முழுமையான தகவல்களை நீங்கள் அந்த திட்ட அறிக்கையில் பட்டியலிட வேண்டும்.

ஆடு வளர்ப்பிற்கு நபார்டு குறிப்பிட்ட கடன் உதவி வழங்குகிறது, இந்த கடனின் அதிகபட்ச திருப்பி செலுத்தும் காலம் 15 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அதிகபட்சமாக நீங்கள் 15 லட்சம் வரை கடற் பெற முடியும், மேலும் தகவல்களுக்கு நபார்டு வங்கியின் அதிகாரப்பூர்வை இணையதளத்தை நீங்கள் பார்வையிடலாம்.

உங்கள் மாவட்டத்தில் உள்ள இயற்கை வேளாண்மை அலுவலகத்தை அணுகலாம் அல்லது நபார்டு அலுவலகத்தை அணுகினால் அனைத்து தகவல்களையும் அவர்கள் உங்களுக்கு எடுத்துரைப்பார்கள்.

மேலும் உங்களுக்கு கடன் உதவி பெறுவது தொடர்பான அனைத்து ஆவணங்களுக்கும் அவர்கள் முன்நின்று உதவி செய்வார்கள்.

கூடுதலாக நீங்கள் விலங்குகள் நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் பார்வையிடலாம்,இந்திய அரசும் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க பொருட்டு சுமார் 35 சதவீத வரை மானியம் வழங்குகிறது வங்கிகளிலும் கடன்களிலும்.

கடன் உதவி பெற நீங்கள் செய்ய வேண்டியவை என்ன?

ஆடு வளர்ப்புக்கு கடன் உதவி பெற தனி நபர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின்,உங்கள் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.

இதற்குப் பிறகு தனி நபர் மானியம் பெறுவார்,அதற்கு அங்கீகரிக்கப்பட்ட திட்ட அறிக்கையை உங்கள் வங்கிகளில் கொடுக்க வேண்டும்.

மேலும் தனி நபரின் அனைத்து விசாரணைகளையும் நடத்தி பிறகு வங்கி சரியான முடிவுகளை வழங்கும்.

திட்ட அறிக்கை தயாரிப்பது எப்படி

முதலில் ஒரு ஆட்டுக்கு 12 சதுர அடி நிலமும் 20 ஆடுகளுக்கு 240 சதுர அடி நிலமும் தேவை,ஒரு ஆட்டுக்குட்டிக்கு 8 சதுர அடி நிலமும் 40 ஆடுகளுக்கு 320 சதுர அடி நிலமும் கட்டாயம் இருக்க வேண்டும்.

இவை அனைத்தும் நீங்கள் தயாரிக்கும் திட்ட அறிக்கையில் முக்கியமானதாக இடம் பெற வேண்டும்,மேலும் குடிநீருக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்.

ஆடு வளர்ப்பிற்கு உணவுகளை நீங்கள் எங்கு தயாரிப்பீர்கள் மற்றும் உங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர் யார்.

நீங்கள் ஆடு வளர்ப்பிற்கு எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்வீர்கள் போன்ற அனைத்து விவரங்களையும் இதில் பதிவிட வேண்டும்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

Types of business loan in India 2023

How to change signature and photo in pan card

இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த 7 உணவுகள்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உணவுகள்

Leave a Comment